Lilypie

Sunday, May 24, 2009

என்னைப்பற்றி நானே (தொடர் பதிவு)

இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர்.

நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து, கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின் வரிசையில் நானும்.

என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர் நண்பர் அ.மு.செ.

இதுவரை இணைந்தவர்கள்
ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
அபு அஃப்ஸர்
அ.மு. செய்யது
தமிழரசி
இராகவன் நைஜீரியா
என் தங்கை காயு

இனி என்னையும் நீங்கள் வாசிக்கலாம்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ரொம்பப் பிடிக்கும். இது என் தாயார் அவர்கள் விருப்பப்பட்டு எனக்கு வைத்த பெயர் என்று என் தந்தை சொன்னதால். என்னுடைய முழுப்பெயர் செய்யது அகமது நவாஸுதீன். இதில் செய்யது அகமது - என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) பெயரே எனக்கும். கூடுதலாக நவாஸுதீன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சுமாரா இருக்கும். ரொம்ப பிடிக்கும்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
மீன் என்றால் எனக்கு உயிர். மீன்ல என்ன செஞ்சாலும் (மீன் ஆனம், பொரிச்ச மீனு, மீன் புலுக்கல், மீன் 65, இப்டியே போனா லிஸ்ட் பெருசாகும்) ஒரு கட்டு கட்டுவேன். ஆனால் கண்டிப்பா ரசம் வேணும்க எனக்கு. கடைசியா கொஞ்சம் ரசம் ஊத்தி சாப்பிடலேன்னா எனக்கு திருப்தியா இருக்காது.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா. அதனால்தான் சிறு வயது முதலே என் நண்பர்கள் வட்டம் பெரிது. அது இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?
உண்மையைச் சொன்னால் எனக்கு ஏரியில் குளிக்கத் தான் ரொம்ப பிடிக்கும். குளத்தில் நீச்சல் அடிக்கவும் ரொம்ப பிடிக்கும். மற்றபடி இவையிரண்டில் என்றால் அருவிதான்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவரின் உடை. பின்னர் அவரின் நடவடிக்கை. ரொம்ப பந்தா பண்ற ஆளான்னு பார்ப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: பேசவேண்டிய நேரத்தில் மட்டும்தான் (கொஞ்சம் அதிகமாவே) பேசுவேன்.

பிடிக்காத விஷயம்: என்னுடைய பெரிய வீக்னெஸ் மறதி, இன்னொன்று, சில சமயங்களில் ரொம்ப எதார்த்தமானவன் என்ற நினைப்பில் ஏதாவது செய்யப்போய் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அன்பு வைப்பதில் அளவு நோக்காதவர்

என்னைப்பற்றி (அவர்களைப் பிரிந்து வெகுதொலைவில் இருப்பதால்) அளவுக்கதிகமாக கவலைப்படுவது. தன்னைப்பற்றி தேவையான அளவுகூட கவலைப்படாதது.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
வேற யாருங்க. என் மனைவி மக்கள்தான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை கைலி, பனியன் மட்டும்தான் (அறையில் ஒய்வு எடுப்பதால்).

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
ராஜ் மியூசிக்ல "ஆத்திச்சூடி ஆத்திச்சூடி". எல்லாம் தமிழ் பற்றுதான் காரணம்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிறுவயது முதலே எனக்கு இளநீல நிறம் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

14. பிடித்த மணம்?
Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
பாலா - இவரைப்பற்றி சொல்லனும்னா சோழ நாட்டு விஷமம் கொஞ்சம் அதிகம்னு அவரே உண்மையை ஒத்துக்கொள்வார். கடல்புராவான இவர் நல்ல கவிதைப்புராவும் கூட. தரமான கவிதைகள் மட்டுமே தரக்கூடியவர்.
சாரதி - பொறியாளர். சுவாரசியமான பதிவர். அவருடைய வருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் பதிவைப் (நன்றி அபுஅஃப்ஸர் - அறிமுகம் செய்து வைத்ததற்கு) படித்து இவரைத் தொடர ஆரம்பித்தேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

எதைச் சொல்ல, எதை விட. இவருடைய எல்லா பதிவுகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் முதல் சந்திப்பு படிக்க காதல் உருவம் பெற்று வந்தால் இவர் மேல் காதல் கொள்ளும். ஷேர் ஆட்டோ படித்த ஷேர் ஆட்டோவும் குலுங்கி குலுங்கி சிரிக்கும். போய்ப் பாருங்க.

17. பிடித்த விளையாட்டு?
Ball Badminton - பள்ளி, கல்லூரியில் அதிகம் விளையாடியது (பள்ளி அணித்தலைவனாக இருந்ததும் உண்டு). கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்.

18. கண்ணாடி அணிபவரா?

வெயில் ஜாஸ்தியா இருக்கும்போது அணிவது உண்டு. அதாங்க Sun Glass.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
முன்பெல்லாம் எந்த புதிய படம் வந்தாலும் ஒரு தடவை பார்த்தே ஆகணும் எனக்கு. இப்ப பிரபலமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டும். நண்பர்கள் ரிஸ்க் எடுத்து பார்த்துவிட்டு நல்லா இருக்கு மச்சான்னு கேரன்டீ தரும் படங்கள். "யான் பெற்ற கஷ்டம் பெருக இவ்வையகம்" என்று நண்பர்கள் மாட்டிவிடுவதும் உண்டு. (உதாரணம்: வில்லு).

20. கடைசியாகப் பார்த்த படம்?
அயன் தான் கடைசியா பார்த்த புதிய தமிழ் திரைப்படம். பழைய படங்கள்னு பார்த்தா திருமலை. திரை அரங்கில் தசாவதாரம்.

21. பிடித்த பருவ காலம் எது?
நாட்டில் மழைக்காலம். அந்த சமயத்தில் நல்ல மழை பெய்யும்போது மல்லிகைப்பூ போன்ற சூடான சோறும், தேங்காய்ப்பால் ரசமும், கருவாடு பொரியலும், அதுதான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அமிர்தம். இங்கு மழை பெய்தால் பயம். Traffic Jam. ரோட்டில் போக முடியாது.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இண்டர்நெட்ல மேயுரதோட சரிங்க. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போ இல்லை. கல்லூரியில் படிக்கும்போது பாலகுமாரனின் ரசிகன் (எனக்கு பாலகுமாரனை அறிமுகப் படுத்தியது நம்ம நட்புடன் ஜமால் தாங்க) நான்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என் குழந்தைகளின் அடுத்த புதிய போட்டோக்கள் வரும் வரை

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - தொலைபேசியில் என் பிள்ளைகளின் பேச்சு.
பிடிக்காத சத்தம் - அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் பீப் சத்தம் (Call waiting from Office).

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
உயரம் - 36,000 அடி (வானூர்தியில் பறந்தபோது)
நீளம் - அதிரையிலிருந்து ஜித்தாஹ். (சரியான தொலைவின் அளவு எனக்கு தெரியல. தெரிஞ்சவங்க சொன்னா என்னோட பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்குவேன்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியலேங்க. தேடிகிட்டு இருக்கேன்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்தான். அதனால் பல விசயங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். (இப்பக்கூட பாருங்க எனக்குள்ள இருக்கும் கோபம் மேல் கோபம் கோபமாக வருகிறது).

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய்.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
விடுப்பில் ஊருக்கு செல்லும்போது என் பிள்ளைகளுக்கு என் கையால் உணவு ஊட்ட. (இல்லன்ன சும்மா கோவப்படுவாங்க, வாப்பாவ பாரு, பிராக்கு பார்க்காமல் ஒழுங்கா சாப்பிடுங்க, சாப்பிடும்போது தண்ணி குடிக்காத, கீழ கொட்டாமல் வாய ஒழுங்கா மூடுங்க - இப்படி ஏதாவது என் பிள்ளைங்கல சொல்லிக்கிட்டு இருப்பாங்க)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்.

என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்

பாலா

சாரதி

182 comments:

நட்புடன் ஜமால் said...

\\27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை. \\

சூப்பர் பதில் மச்சான் ...

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

\\27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை. \\

சூப்பர் பதில் மச்சான் ...

வா மச்சான்.

நட்புடன் ஜமால் said...

\\30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய். \\

நெகிழ்ந்தேன் மாப்ள ...

நட்புடன் ஜமால் said...

\\முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே,\\

உணர்ந்திருக்கேன் நண்பா ...

அ.மு.செய்யது said...

பதிவு போட்டாச்சா ??? புது வீட்டுக்கும் பால்காச்சியாச்சி போல...

படிச்சுட்டு வரேன். சித்த இருங்கோ..

அ.மு.செய்யது said...

//மீன் ஆனம்,//

நாங்களும் இப்படி தான் சொல்லுவோம்..நமக்கு கமுதி,ராம்நாட்.

அ.மு.செய்யது said...

//ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது.
//

அப்படி வாங்க வழிக்கு !!!!!

அ.மு.செய்யது said...

//Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க //

நான் கிரீன் லேபிள் டீ தான் கேள்விப் பட்டிருக்கேன்.சுஹாசினி ஆண்ட்டி விளம்பரம்..

அ.மு.செய்யது said...

//முதல் சந்திப்பு படிக்க காதல் உருவம் பெற்று வந்தால் இவர் மேல் காதல் கொள்ளும். ஷேர் ஆட்டோ படித்த ஷேர் ஆட்டோவும் குலுங்கி குலுங்கி சிரிக்கும். போய்ப் பாருங்க.
//

ஓ அப்படியா..சொல்லவேயில்ல...

அ.மு.செய்யது said...

//பிடிக்காத சத்தம் - அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் பீப் சத்தம் (Call waiting from Office).
//

Coooooolll !!!

அ.மு.செய்யது said...

//நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. //

நெகிழ்ந்தேன்.

பதிவை படித்து முடிக்கும் போது, நவாஸுதீன் என்ற ஒரு பதிவரை, முழுதகுதி வாய்ந்த ஒரு தந்தையாகவும்,
தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் மட்டுமே பார்க்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சியே.

சில நேரங்களில் சாமான்யர்களாய் இருப்பதும் அவ்வளவு சுலபமில்லை.

அப்துல்மாலிக் said...

கலாகலாகலா கலக்கல்

உணர்வுப்பூர்வமான பதில்களை ரசித்தேன் மாப்ஸ்

குடும்பத்தின் மேலே உள்ள பாசம் என்னை சிலாகித்தது

குழந்தைகள் தான் உலகம் குடும்பம்தான் என் நாடு என்பது வியப்பிலாழ்த்தியது

நட்பின் முக்கியத்துவம், வாழ்க்கையின் அர்த்தம் சிலிர்க்க வைத்தது

கலக்கிட்டெ மச்சான்

அப்துல்மாலிக் said...

//கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.
///

ஆஹா யப்பா இந்த பாசம் 70 வயசானாலும் மாறாதுப்பா...

சில குழந்தைகள் கேட்ட கேள்வி எங்களையெல்லாம் பிரிந்துப்போய் அப்படி என்னாத்த சாதிச்சிட்டீங்க என்று, அன்று வாழ்க்கையே ச்சீனு போய்டும்

அப்துல்மாலிக் said...

//கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?
உண்மையைச் சொன்னால் எனக்கு ஏரியில் குளிக்கத் தான் ரொம்ப பிடிக்கும்//

வெக்கேசன் போகும்போது கச்சாலை கட்டிக்கிட்டு சைக்கிளிலே போய் குளித்ததா கேள்விப்பட்டேன்.. ஹா ஹா

அப்துல்மாலிக் said...

//அளவுக்கதிகமாக கவலைப்படுவது. தன்னைப்பற்றி தேவையான அளவுகூட கவலைப்படாதது///

ரசித்தேன் இந்த பதிலை

அப்துல்மாலிக் said...

// கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது/

அப்படி என்னா மாறிடுச்சினு பின்னூட்டத்திலே சொல்லலாம்லே

அப்துல்மாலிக் said...

//எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
முன்பெல்லாம் எந்த புதிய படம் வந்தாலும் ஒரு தடவை பார்த்தே ஆகணும் எனக்கு. இப்ப பிரபலமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டும். நண்பர்கள் ரிஸ்க் எடுத்து பார்த்துவிட்டு நல்லா இருக்கு மச்சான்னு கேரன்டீ தரும் படங்கள். "யான் பெற்ற கஷ்டம் பெருக இவ்வையகம்" என்று நண்பர்கள் மாட்டிவிடுவதும் உண்டு. (உதாரணம்: வில்லு).//

ஹா ஹா நாங்களும் அனுபவப்பட்டோம்லே

நம்ம பதிவர்களின் திரைவிமர்சனம் காரணமாக தப்பிச்சேன்.

அப்துல்மாலிக் said...

// உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியலேங்க. தேடிகிட்டு இருக்கேன்///

நல்ல பவர்ஃபுல் டார்ச் வாங்கி அடிச்சி தேடுங்கப்பூ

அப்துல்மாலிக் said...

//முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே//

அனுபவிப்பருக்கே இந்த வரியின் அர்த்தம் புரியும்

அ.மு.செய்யது said...

////கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.
///

ஆஹா யப்பா இந்த பாசம் 70 வயசானாலும் மாறாதுப்பா...

சில குழந்தைகள் கேட்ட கேள்வி எங்களையெல்லாம் பிரிந்துப்போய் அப்படி என்னாத்த சாதிச்சிட்டீங்க என்று, அன்று வாழ்க்கையே ச்சீனு போய்டும்//

உங்க மூணு பேரையும் (ஜமால்,அபு,நவாஸ்) பார்த்து இந்த ஒரு விஷயத்த நான் நல்லா புரிஞ்சிகிட்டேன்.

இன்னும் 2 வருஷத்துக்குள்ள அடிச்சி பிடிச்சாவது சென்னையில போய் செட்டில் ஆயிடணும்..அப்புறம் தான் ம‌த்த‌ காட்சியெல்லாம்..

அப்துல்மாலிக் said...

//"குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்///

நல்லா சொன்னே மாப்ஸ் ரசித்தேன்

அழைத்த இருவருக்கும் வாழ்த்துக்கள்

வாங்கப்பு எழுதுங்க‌

அப்துல்மாலிக் said...

//இன்னும் 2 வருஷத்துக்குள்ள அடிச்சி பிடிச்சாவது சென்னையில போய் செட்டில் ஆயிடணும்..அப்புறம் தான் ம‌த்த‌ காட்சியெல்லாம்..//

ஆஹா தல உஷாராத்தான் இருக்கீர் போல‌

அனுபவிச்சிட்டு அப்புறம் செட்டில் ஆகி வாழும் வாழ்க்கை இருக்கே... அட அட உண்மையான காதல் அப்போதாங்க தெரியும் அ.மு.செய்யது......

அப்துல்மாலிக் said...

//எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய்//

நல்ல தந்தையாய் இருந்து உம்மக்கள் போற்ற என் வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

//என் தங்கை காயு //

ஹா ஹா..

என் தங்கை கல்யாணி ரேஞ்சுக்கு என்னா பில்டப்பு ???

அ.மு.செய்யது said...

me the 25th

அ.மு.செய்யது said...

//உண்மையான காதல் அப்போதாங்க தெரியும் அ.மு.செய்யது......//

ச‌ரி இப்ப‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌....இதுல‌ ஏதோ உள்குத்து இருக்க‌ மாதிரி இருக்கே !!!

அ.மு.செய்யது said...

எத்தன நாளாச்சி ..கும்மியடிச்சி !!!!!

அப்துல்மாலிக் said...

// அ.மு.செய்யது said...
//என் தங்கை காயு //

ஹா ஹா..

என் தங்கை கல்யாணி ரேஞ்சுக்கு என்னா பில்டப்பு ???
//

haa haa

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//உண்மையான காதல் அப்போதாங்க தெரியும் அ.மு.செய்யது......//

ச‌ரி இப்ப‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌....இதுல‌ ஏதோ உள்குத்து இருக்க‌ மாதிரி இருக்கே !!!
//

அதாவது கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டாதான் அதன் சுவை தெரியும்

ம்ஹூம் இப்போவே கண்ணகட்டுதே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
எத்தன நாளாச்சி ..கும்மியடிச்சி !!!!!
//

வாங்கோண்ணா கூப்பிட்டு ஓடிட்டேள்

SUFFIX said...

just read one time, ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு, திரும்ப படிச்சுட்டு இன்னும் சொல்றேன். கலக்கிட்டீக!! (அது மட்டும் இபோதைக்கு)

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
எத்தன நாளாச்சி ..கும்மியடிச்சி !!!!!
//

வாங்கோண்ணா கூப்பிட்டு ஓடிட்டேள்
//

ஆத்துல யாரெல்லாம் இருக்கா ??

gayathri said...

என் தங்கை காயு

iyyo anna so sweet

gayathri said...

அ.மு.செய்யது said...
//Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க //

நான் கிரீன் லேபிள் டீ தான் கேள்விப் பட்டிருக்கேன்.சுஹாசினி ஆண்ட்டி விளம்பரம்..

naanum itha kelvi patathau illa anna

gayathri said...

ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்

sariya sonnega anna

gayathri said...

குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.

anna enaku ithu rompa pudichi iruthuchi azaka rasichi irukenga unga pappava

gayathri said...

(இல்லன்ன சும்மா கோவப்படுவாங்க, வாப்பாவ பாரு, பிராக்கு பார்க்காமல் ஒழுங்கா சாப்பிடுங்க, சாப்பிடும்போது தண்ணி குடிக்காத, கீழ கொட்டாமல் வாய ஒழுங்கா மூடுங்க - இப்படி ஏதாவது என் பிள்ளைங்கல சொல்லிக்கிட்டு இருப்பாங்க)

ammana ithalem sollanum illana avanga summa

gayathri said...

தெரியலேங்க. தேடிகிட்டு இருக்கேன்.

thedunga thedunga thediketta irukathega sekaram kandu pudinga anna

gayathri said...

கோபம்தான். அதனால் பல விசயங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்.

mmmmmmmmm sariya sonnega anna

gayathri said...

மல்லிகைப்பூ போன்ற சூடான சோறும்,

maligai poo ponra sudanaa idly than naan kelvi pattu iruken inga enna sorunu solli irukenga

gayathri said...

வெயில் ஜாஸ்தியா இருக்கும்போது அணிவது உண்டு. அதாங்க Sun Glass.

uuuuuuuuu mean suriya kannadi

gayathri said...

ரொம்ப பந்தா பண்ற ஆளான்னு பார்ப்பேன்.

very gd anna

gayathri said...

ரொம்ப பந்தா பண்ற ஆளான்னு பார்ப்பேன்.

very gd anna

gayathri said...

அ.மு.செய்யது said...
//ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது.
//

அப்படி வாங்க வழிக்கு !!!!!

ellarum appadi than anna

gayathri said...

அ.மு.செய்யது said...
//என் தங்கை காயு //

ஹா ஹா..

என் தங்கை கல்யாணி ரேஞ்சுக்கு என்னா பில்டப்பு ???

eaana avanga thangai nanache athan intha பில்டப்பு ok

gayathri said...

me they 46

gayathri said...

anna inga sistem probelm so naan iniku me they 50 poda mattenu nenaikren

gayathri said...

me they 50

அ.மு.செய்யது said...

50

அ.மு.செய்யது said...

50

நட்புடன் ஜமால் said...

மாப்ள

படம் ஜூப்பருடா

உன் திறமைகள் தெரியுதுடா ...

நட்புடன் ஜமால் said...

\\இன்னும் 2 வருஷத்துக்குள்ள அடிச்சி பிடிச்சாவது சென்னையில போய் செட்டில் ஆயிடணும்..அப்புறம் தான் ம‌த்த‌ காட்சியெல்லாம்..\\

மனசார பிரார்த்திக்கிறேன் சகோதரா

எல்லோரும் இல்லரம் எனும் நல்லரத்தை அருகில் இருந்தே இரசிக்கனும்

நட்புடன் ஜமால் said...

\\சில குழந்தைகள் கேட்ட கேள்வி எங்களையெல்லாம் பிரிந்துப்போய் அப்படி என்னாத்த சாதிச்சிட்டீங்க என்று\\

மாப்ள உண்மையிலேயே என்ன தாண்டா சாதிச்சோம்

அட

சாதனைங்கறதே என்னன்னு தெரியாம தானடா நான் இருக்கேன் ...

sakthi said...

ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.

படிக்கும் போது எனக்கும் கண் கலங்குகின்றது

sakthi said...

கடைசியா கொஞ்சம் ரசம் ஊத்தி சாப்பிடலேன்னா எனக்கு திருப்தியா இருக்காது.

எனக்கும்

sakthi said...

அன்பு வைப்பதில் அளவு நோக்காதவர் என்னைப்பற்றி (அவர்களைப் பிரிந்து வெகுதொலைவில் இருப்பதால்) அளவுக்கதிகமாக கவலைப்படுவது. தன்னைப்பற்றி தேவையான அளவுகூட கவலைப்படாதது.

குடுத்து வைத்தவர் அண்ணா நீங்கள்

sakthi said...

பாலா - இவரைப்பற்றி சொல்லனும்னா சோழ நாட்டு விஷமம் கொஞ்சம் அதிகம்னு அவரே உண்மையை ஒத்துக்கொள்வார். கடல்புராவான இவர் நல்ல கவிதைப்புராவும் கூட. தரமான கவிதைகள் மட்டுமே தரக்கூடியவர்.

அய்யோ இவனையா ???

sakthi said...

பிடித்த சத்தம் - தொலைபேசியில் என் பிள்ளைகளின் பேச்சு.
பிடிக்காத சத்தம் - அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் பீப் சத்தம் (Call waiting from Office).

உங்கள் பாசம் புரிகின்றது

இராகவன் நைஜிரியா said...

அருமையான பதில்கள். மனம் திறந்த பதில்கள். மெச்சக்கூடிய பதில்கள். மழுப்பல் இல்லாத பதில்கள்.

// "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்".//

ரொம்ப பிடிச்சு இருந்தது.

// 5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஆமா. அதனால்தான் சிறு வயது முதலே என் நண்பர்கள் வட்டம் பெரிது. அது இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது. //

நட்பு வட்டம் ஆல் போல் பெருகி அருகு போல் வளர வாழ்த்துகள்.

sarathy said...

//என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும்
என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம்
முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை
துடைக்க முயற்சி செய்துகொண்டு
அருவியில் குளிப்பதை பார்க்கும்போது
நான் குளிப்பதை மறந்து
அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன்.//

அருமையான பதில்...
வசந்தம் வீசட்டும்
இனிவரும் காலங்களில்...

sarathy said...

நண்பா நவாஸ்..
என்னை உன் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொண்டதோடு
மட்டுமல்லாமல் இந்த அன்புச் சங்கிலித் தொடரிலும்
என்னை அழைத்ததற்கு நன்றி...

என்னை பற்றி 5 வரிகள் எழுதுவதே சிரமம்.
இதில் 32 கேள்விகளா???
ரெண்டு நாளைக்குள்ள பதில் தர
முயற்சிக்கிறேன்...

பாலா said...

sakthi said...
பாலா - இவரைப்பற்றி சொல்லனும்னா சோழ நாட்டு விஷமம் கொஞ்சம் அதிகம்னு அவரே உண்மையை ஒத்துக்கொள்வார். கடல்புராவான இவர் நல்ல கவிதைப்புராவும் கூட. தரமான கவிதைகள் மட்டுமே தரக்கூடியவர்.

அய்யோ இவனையா

அக்கா நான் என்ன பாவம் பண்ணுnen உங்களுக்கு

navas ennaiyappoyi inthavelailaam seiyassonna நான் என்னங்க பண்றது
இதெல்லாம் பெரிய aalunga samaassaaram

இருந்தாலும் try pannuvom
ennannan solrathu

பாலா said...

இவ்ளோ விளக்கமா நீங்க சொன்னபிறகு நான் என்னத்த சொல்றது நவாஸ்

rose said...

4. பிடித்த மதிய உணவு என்ன?
மீன் என்றால் எனக்கு உயிர். மீன்ல என்ன செஞ்சாலும் (மீன் ஆனம், பொரிச்ச மீனு, மீன் புலுக்கல், மீன் 65, இப்டியே போனா லிஸ்ட் பெருசாகும்) ஒரு கட்டு கட்டுவேன். ஆனால் கண்டிப்பா ரசம் வேணும்க எனக்கு. கடைசியா கொஞ்சம் ரசம் ஊத்தி சாப்பிடலேன்னா எனக்கு திருப்தியா இருக்காது.
\\
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

rose said...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: பேசவேண்டிய நேரத்தில் மட்டும்தான் (கொஞ்சம் அதிகமாவே) பேசுவேன்.

\\
தெறியும் தெறியும்

rose said...

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அன்பு வைப்பதில் அளவு நோக்காதவர் என்னைப்பற்றி (அவர்களைப் பிரிந்து வெகுதொலைவில் இருப்பதால்) அளவுக்கதிகமாக கவலைப்படுவது. தன்னைப்பற்றி தேவையான அளவுகூட கவலைப்படாதது.
\\
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

rose said...

18. கண்ணாடி அணிபவரா?
வெயில் ஜாஸ்தியா இருக்கும்போது அணிவது உண்டு. அதாங்க Sun Glass.
\\
ஸ்டைலாக்கும்

rose said...

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
முன்பெல்லாம் எந்த புதிய படம் வந்தாலும் ஒரு தடவை பார்த்தே ஆகணும் எனக்கு. இப்ப பிரபலமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டும். நண்பர்கள் ரிஸ்க் எடுத்து பார்த்துவிட்டு நல்லா இருக்கு மச்சான்னு கேரன்டீ தரும் படங்கள்.
\\
நல்லாவே பொய் சொல்லுறிங்க தலைவா

rose said...

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.

\\
super

rose said...

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய்
\\
உங்கள் ஆசை நிறைவேர வாழ்த்துக்கள்

புதியவன் said...

யதார்த்தமான பதில்கள் நவாஸுதீன்

2 படிக்கும் போது கண் கலங்க வைத்த பதில்

9 உங்கள் இருவரின் அன்பின் ஆழம் தெரிகிறது

25 நீளம் - அதிரையிலிருந்து ஜித்தாஹ் சுமார் 4450 கி.மி

26 கலக்கல் பதில்...மிகவும் ரசித்தேன்

29 தந்தை பாசம் சிலிர்க்க வைத்தது

30 மற்றும் 32 நெகிழ்வான பதில்கள்

உங்களுக்கும் உங்களைத் தொடர
அழைத்தவருக்கும் நீங்கள் தொடர
அழைத்திருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

\\30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய். \\

நெகிழ்ந்தேன் மாப்ள ...

மகிழ்ந்தேன் நண்பா

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

\\முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே,\\

உணர்ந்திருக்கேன் நண்பா ...

அதன் அனுபவம் உன் பதிவில் தெரியட்டும் மாப்ள

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

பதிவு போட்டாச்சா ??? புது வீட்டுக்கும் பால்காச்சியாச்சி போல...

படிச்சுட்டு வரேன். சித்த இருங்கோ..

வந்துட்டேளா. போயிட்டு வாங்கோ.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//மீன் ஆனம்,//

நாங்களும் இப்படி தான் சொல்லுவோம்..நமக்கு கமுதி,ராம்நாட்.

நான் அதிராம்பட்டினம். நம்ம ஏரியாவுலயும் மீன் குழம்பு என்று சொல்ல மாட்டார்கள். மீன் ஆனம் என்றுதான்.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது.
//

அப்படி வாங்க வழிக்கு !!!!!

வந்துதானே ஆகணும். நீங்களும் வாங்க அப்பதானே தெரியும்.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//முதல் சந்திப்பு படிக்க காதல் உருவம் பெற்று வந்தால் இவர் மேல் காதல் கொள்ளும். ஷேர் ஆட்டோ படித்த ஷேர் ஆட்டோவும் குலுங்கி குலுங்கி சிரிக்கும். போய்ப் பாருங்க.
//

ஓ அப்படியா..சொல்லவேயில்ல..

அதான் இப்ப சொல்லிடோம்ள தல

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. //

நெகிழ்ந்தேன்.

பதிவை படித்து முடிக்கும் போது, நவாஸுதீன் என்ற ஒரு பதிவரை, முழுதகுதி வாய்ந்த ஒரு தந்தையாகவும்,
தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் மட்டுமே பார்க்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சியே.

சில நேரங்களில் சாமான்யர்களாய் இருப்பதும் அவ்வளவு சுலபமில்லை.

எல்லோரையும் சாமானியர்களாய் மாற்றுவது கடினம்தான். சாமானியர்களாய் இருப்பது அத்துணை கடினமல்ல.

ரொம்ப சந்தோசமா இருக்கு செய்யது, உங்களின் அணைத்து பின்னூட்டமும் பார்த்து

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

கலாகலாகலா கலக்கல்

உணர்வுப்பூர்வமான பதில்களை ரசித்தேன் மாப்ஸ்

குடும்பத்தின் மேலே உள்ள பாசம் என்னை சிலாகித்தது

குழந்தைகள் தான் உலகம் குடும்பம்தான் என் நாடு என்பது வியப்பிலாழ்த்தியது

நட்பின் முக்கியத்துவம், வாழ்க்கையின் அர்த்தம் சிலிர்க்க வைத்தது

கலக்கிட்டெ மச்சான்

வா மச்சான். ரொம்ப சந்தோசம்டா

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

ஆஹா யப்பா இந்த பாசம் 70 வயசானாலும் மாறாதுப்பா...

சில குழந்தைகள் கேட்ட கேள்வி எங்களையெல்லாம் பிரிந்துப்போய் அப்படி என்னாத்த சாதிச்சிட்டீங்க என்று, அன்று வாழ்க்கையே ச்சீனு போய்டும்

உண்மைதான்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?
உண்மையைச் சொன்னால் எனக்கு ஏரியில் குளிக்கத் தான் ரொம்ப பிடிக்கும்//

வெக்கேசன் போகும்போது கச்சாலை கட்டிக்கிட்டு சைக்கிளிலே போய் குளித்ததா கேள்விப்பட்டேன்.. ஹா ஹா

ஹா ஹா ஹா. தஞ்சாவூர் போயிட்டு வரும்போது வழியில் ஒரு வயலில் போர் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு வண்டியை நிறுத்தி நண்பர்கள் எல்லோரும் அதில் குளித்துவிட்டுத்தான் வந்தோம்.

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே//

அனுபவிப்பருக்கே இந்த வரியின் அர்த்தம் புரியும்

ஆமா மாப்ள

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

இன்னும் 2 வருஷத்துக்குள்ள அடிச்சி பிடிச்சாவது சென்னையில போய் செட்டில் ஆயிடணும்..அப்புறம் தான் ம‌த்த‌ காட்சியெல்லாம்..

கண்டிப்பா செய்யுங்க செய்யது. அனுபவத்தில் கற்பவன் Smart. பிறர் அனுபவத்தில் கற்பவன் புத்திசாலி. நீங்கள் புத்திசாலி.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//என் தங்கை காயு //

ஹா ஹா..

என் தங்கை கல்யாணி ரேஞ்சுக்கு என்னா பில்டப்பு ???

இருக்கனும்ல.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

எத்தன நாளாச்சி ..கும்மியடிச்சி !!!!!

அடிங்க அடிங்க.

rose said...

90

S.A. நவாஸுதீன் said...

Shafi Blogs Here said...

just read one time, ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு, திரும்ப படிச்சுட்டு இன்னும் சொல்றேன். கலக்கிட்டீக!! (அது மட்டும் இபோதைக்கு)

வாங்க Shafi. ரொம்ப நன்றி. மீண்டும் வருக நேரம் கிடைக்குபோது.

Revathyrkrishnan said...

//நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை//

நெகிழ வைத்தன வரிகள் நவாஸுதீன்... சரி, உங்கள் பெயரின் பொருள் என்ன?

gayathri said...

anna ungaluku onnum theririuma

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

அ.மு.செய்யது said...
//Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க //

நான் கிரீன் லேபிள் டீ தான் கேள்விப் பட்டிருக்கேன்.சுஹாசினி ஆண்ட்டி விளம்பரம்..

naanum itha kelvi patathau illa anna

நல்ல அருமையான Perfume இது.

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
அ.மு.செய்யது said...

//ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது.
//

அப்படி வாங்க வழிக்கு !!!!!

வந்துதானே ஆகணும். நீங்களும் வாங்க அப்பதானே தெரியும்.

sariya sonnega anna

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
gayathri said...

அ.மு.செய்யது said...
//Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க //

நான் கிரீன் லேபிள் டீ தான் கேள்விப் பட்டிருக்கேன்.சுஹாசினி ஆண்ட்டி விளம்பரம்..

naanum itha kelvi patathau illa anna

நல்ல அருமையான Perfume இது.

ooooooooooo appaiya okok anna sonna sariya than irukum

gayathri said...

கலக்கல் பதில்...மிகவும் ரசித்தேன்

mekavum rasithen anna

gayathri said...

ok nethu 50 poda varum pothunet problem so

gayathri said...

so ippa me they 100 podaolamnu vanthu iruken anna

gayathri said...

me they 100

gayathri said...

50 miss pannalum 100 miss pannama adichomla ennga anna postla naan round podama iurpana

gayathri said...

ok anna vantha vela mudinjathu naan pogattuma

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

me they 100

50 miss pannalum 100 miss pannama adichomla ennga anna postla naan round podama iurpana

ok anna vantha vela mudinjathu naan pogattuma

ஹலோ செய்யது இப்ப தெரியுதா ஏன் என் தங்கைக்கு இவ்ளோ பில்டப்புன்னு. இதான் காயுவோட ஸ்பெஷல்

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.

படிக்கும் போது எனக்கும் கண் கலங்குகின்றது

வாம்மா சக்தி

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

அன்பு வைப்பதில் அளவு நோக்காதவர் என்னைப்பற்றி (அவர்களைப் பிரிந்து வெகுதொலைவில் இருப்பதால்) அளவுக்கதிகமாக கவலைப்படுவது. தன்னைப்பற்றி தேவையான அளவுகூட கவலைப்படாதது.

குடுத்து வைத்தவர் அண்ணா நீங்கள்

சரியா சொன்னேமா சக்தி

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

பாலா - இவரைப்பற்றி சொல்லனும்னா சோழ நாட்டு விஷமம் கொஞ்சம் அதிகம்னு அவரே உண்மையை ஒத்துக்கொள்வார். கடல்புராவான இவர் நல்ல கவிதைப்புராவும் கூட. தரமான கவிதைகள் மட்டுமே தரக்கூடியவர்.

அய்யோ இவனையா ???

ஹா ஹா ஹா. ஏன் என்ன ஆச்சு?. பாலா நம்ம புள்ள சக்தி.

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...

அருமையான பதில்கள். மனம் திறந்த பதில்கள். மெச்சக்கூடிய பதில்கள். மழுப்பல் இல்லாத பதில்கள்.

// "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்".//

ரொம்ப பிடிச்சு இருந்தது.

// 5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஆமா. அதனால்தான் சிறு வயது முதலே என் நண்பர்கள் வட்டம் பெரிது. அது இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது. //

நட்பு வட்டம் ஆல் போல் பெருகி அருகு போல் வளர வாழ்த்துகள்.

வாங்க இராகவன் அண்ணா. ரொம்ப சந்தோசம் பின்னூட்டம் கண்டு. ரொம்ப நன்றிங்கண்ணா.

S.A. நவாஸுதீன் said...

sarathy said...

அருமையான பதில்...
வசந்தம் வீசட்டும்
இனிவரும் காலங்களில்...

வாங்க சாரதி. இறைவன் அருளால் எல்லோருடைய வாழ்விலும் வசந்தம் வீசட்டும்

S.A. நவாஸுதீன் said...

sarathy said...

நண்பா நவாஸ்..
என்னை உன் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொண்டதோடு
மட்டுமல்லாமல் இந்த அன்புச் சங்கிலித் தொடரிலும்
என்னை அழைத்ததற்கு நன்றி...

என்னை பற்றி 5 வரிகள் எழுதுவதே சிரமம்.
இதில் 32 கேள்விகளா???
ரெண்டு நாளைக்குள்ள பதில் தர
முயற்சிக்கிறேன்...

நம் நட்பு ஒரு வட்டத்திற்குள் மட்டும் இல்லாமல் அது சங்கிலியாய் தொடர்ந்து நீண்டு கொண்டே போகவேண்டும் என்பது என் ஆசை. அதனால்தான் இந்த அன்புக் கட்டளை. தற்சமயம் இரண்டு நாள் பெயிலில் விடுகிறேன். விரைந்து வந்து சரண் அடையவும்.

S.A. நவாஸுதீன் said...

பாலா said...

navas ennaiyappoyi inthavelailaam seiyassonna நான் என்னங்க பண்றது
இதெல்லாம் பெரிய aalunga samaassaaram

அதுனாலதான் உங்களை அழைத்திருக்கிறேன். விரைந்து வரவும்.

S.A. நவாஸுதீன் said...

பாலா said...

இவ்ளோ விளக்கமா நீங்க சொன்னபிறகு நான் என்னத்த சொல்றது நவாஸ்

நாங்களும் உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில் தவறில்லையே. அன்புக்கட்டளைக்கு நீங்கள் அடிபணிந்தே ஆகவேண்டும்.

S.A. நவாஸுதீன் said...

rose said...

4. பிடித்த மதிய உணவு என்ன?
மீன் என்றால் எனக்கு உயிர். மீன்ல என்ன செஞ்சாலும் (மீன் ஆனம், பொரிச்ச மீனு, மீன் புலுக்கல், மீன் 65, இப்டியே போனா லிஸ்ட் பெருசாகும்) ஒரு கட்டு கட்டுவேன். ஆனால் கண்டிப்பா ரசம் வேணும்க எனக்கு. கடைசியா கொஞ்சம் ரசம் ஊத்தி சாப்பிடலேன்னா எனக்கு திருப்தியா இருக்காது.
\\
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாங்க ரோஸ். என்ன உங்களுக்கும் ரொம்ப பிடிக்குமோ?

S.A. நவாஸுதீன் said...

rose said...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: பேசவேண்டிய நேரத்தில் மட்டும்தான் (கொஞ்சம் அதிகமாவே) பேசுவேன்.

\\
தெறியும் தெறியும்

எப்படி?. (நீங்கதானே சொன்னீங்கன்னெல்லாம் மடக்கப்பிடாது)

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

சரிதான். ஆனால எனக்கு வரமே மனைவியாய்.

S.A. நவாஸுதீன் said...

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
முன்பெல்லாம் எந்த புதிய படம் வந்தாலும் ஒரு தடவை பார்த்தே ஆகணும் எனக்கு. இப்ப பிரபலமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டும். நண்பர்கள் ரிஸ்க் எடுத்து பார்த்துவிட்டு நல்லா இருக்கு மச்சான்னு கேரன்டீ தரும் படங்கள்.
\\
நல்லாவே பொய் சொல்லுறிங்க தலைவா

புரியவில்லை ?????????? (கமல் படம் எல்லாமே எனக்கு பிடிக்கும் அதை சொல்ல மறந்தது என் மறதிதான்).

S.A. நவாஸுதீன் said...

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.

\\
super

Thank you

S.A. நவாஸுதீன் said...

rose said...

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய்
\\
உங்கள் ஆசை நிறைவேர வாழ்த்துக்கள்

நன்றி ரோஸ்.
நீங்க எப்போ தரப்போறீங்க?

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

உங்களுக்கும் உங்களைத் தொடர
அழைத்தவருக்கும் நீங்கள் தொடர
அழைத்திருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

புதியவன். உணர்ந்து ரசித்தமைக்கு ரொம்ப நன்றி. வாய்ப்பு கொடுத்த அ.மு.செய்யதுக்கும் மிக்க நன்றி. பாலாவுக்கும், சாரதிக்கும் என்னுடைய வாழ்த்துக்களும்

S.A. நவாஸுதீன் said...

நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை//

நெகிழ வைத்தன வரிகள் நவாஸுதீன்... சரி, உங்கள் பெயரின் பொருள் என்ன?

வாங்க ரீனா. ரொம்ப நன்றி.

செய்யது - தலைவன்

அகமது - இறைவனின் அருட்கொடை பெற்றவன், இறைவனுக்கு நன்றி தொடர்ந்து நன்றி தெரிவிப்பவன் என்ற பொருளும் உண்டு.

நவாஸுதீன் - கல்வி அறிவும், அமைதியும், கவனமும் கொண்டவன்.

என் ஒரே ஆளுக்கு மூன்று பெயர்கள் ரீனா

coolzkarthi said...

அண்ணே உங்கள் வார்த்தைகள் அழகு.....வெளி நாட்டில் இருப்பதால் ஏற்படும் இழப்புகள் பற்றி உங்கள் பதில் தெளிவாக சொல்கிறது.....

coolzkarthi said...

//கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை//

அபாரம்....

S.A. நவாஸுதீன் said...

coolzkarthi said...

அண்ணே உங்கள் வார்த்தைகள் அழகு.....வெளி நாட்டில் இருப்பதால் ஏற்படும் இழப்புகள் பற்றி உங்கள் பதில் தெளிவாக சொல்கிறது.....

வாங்க கார்த்தி. ரொம்ப நன்றிமா.

S.A. நவாஸுதீன் said...

coolzkarthi said...

//கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை//

அபாரம்....

Thank You

Suresh said...

நண்பா உங்களை பின்னூட்டம் பார்த்தே ரசித்த நண்பன், உங்கள் கேரக்டர் உங்க பின்னூட்டத்தில் தெரிந்தது...

ரொம்ப பிடித்தது... சரி பதிவுக்கு வரேன்

//கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்./

கண்கள் நிஜமா கலங்கியது..

ஆமா அவ்வளவு தூரம் இருந்து கஷ்டப்பட்டு உழைக்கும் உங்க்ள மாதிரி நிறைய நண்பர்களை பார்த்து ...
கூடிய விரைவில் மணைவி மக்களுடன் நீங்கள் நல்லா சம்பாதிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்..

இளைமையை ஒரு ஒரு நொடியும் இனி உங்கள் குடும்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

Suresh said...

//ஆமா. அதனால்தான் சிறு வயது முதலே என் நண்பர்கள் வட்டம் பெரிது. அது இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது.
//

தெரியுது ஹீ ஹீ

Suresh said...

//வெள்ளை கைலி, பனியன் மட்டும்தான் (அறையில் ஒய்வு எடுப்பதால்). //

நல்ல வேளை ;) உண்மையை கொஞ்சம் சொல்லிடிங்க .. ஹீ ஹீ

Suresh said...

//இளநீல நிறம் என்றால் ரொம்பப் பிடிக்கும். /

உங்களுக்குமா

Suresh said...

//உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.//

இது கவிதையா ...

உங்களுக்கு பிடித்தை விட உங்கள் மக்களுக்கு பிடித்தை கூறியதால் மட்டும் இல்லை, அதை சொன்ன விதம்

Suresh said...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்.//

உண்மையை பொட்டில் அடித்தார் போல் கூறியது.. சும்மா நச் அது தான் "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்".

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
gayathri said...

me they 100

50 miss pannalum 100 miss pannama adichomla ennga anna postla naan round podama iurpana

ok anna vantha vela mudinjathu naan pogattuma

ஹலோ S.A. நவாஸுதீன் said...
gayathri said...

me they 100

50 miss pannalum 100 miss pannama adichomla ennga anna postla naan round podama iurpana

ok anna vantha vela mudinjathu naan pogattuma

ஹலோ செய்யது இப்ப தெரியுதா ஏன் என் தங்கைக்கு இவ்ளோ பில்டப்புன்னு. இதான் காயுவோட ஸ்பெஷல்
இப்ப தெரியுதா ஏன் என் தங்கைக்கு இவ்ளோ பில்டப்புன்னு. இதான் காயுவோட ஸ்பெஷல்

செய்யது enga irunthalum ennga anna blogku vanthu intha commetn padikkumaru kettu kolkiren

அ.மு.செய்யது said...

//gayathri said...

படிச்சாச்சி தங்கச்சி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

mmmmmmmmmmmmmmmm very gd

Anonymous said...

2.உணர்வு பூர்வமான பதில் அனுபவிச்சால் மட்டுமே அறிய முடியும்.....
4.பார்த்துங்க அடுத்த பிறவி மீனாக பிறக்கபோறீங்க....
7.ஆமாங்க...பந்தா பண்றஆளான்னு கண்டிப்பா கவனிக்கனும்
8.சுவையான பதில்
9.தாய்க்கு பின் தாரம் என்று சும்மாவா சொன்னாங்க.....
12. தமிழ் பற்று மெய் சிலிர்க்கிறது
21.பருவகாலத்தில் மழைக்காலம் பொய்த்தது என்னவோ சாப்பாட்டு மழை....
27.ஆம் உண்மை உதிர்த்து இருக்கீங்க...
32. மனதைத் தொட்ட பதில்
ரொம்ப இயல்பா சுருக்கமா பதி சொல்லியிருக்கீங்கப்பா...வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

நண்பா உங்களை பின்னூட்டம் பார்த்தே ரசித்த நண்பன், உங்கள் கேரக்டர் உங்க பின்னூட்டத்தில் தெரிந்தது...

ரொம்ப பிடித்தது... சரி பதிவுக்கு வரேன்

//கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்./

கண்கள் நிஜமா கலங்கியது..

ஆமா அவ்வளவு தூரம் இருந்து கஷ்டப்பட்டு உழைக்கும் உங்க்ள மாதிரி நிறைய நண்பர்களை பார்த்து ...
கூடிய விரைவில் மணைவி மக்களுடன் நீங்கள் நல்லா சம்பாதிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்..

இளைமையை ஒரு ஒரு நொடியும் இனி உங்கள் குடும்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சுரேஷ் உங்க பின்னோட்டம் படித்து.

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

//ஆமா. அதனால்தான் சிறு வயது முதலே என் நண்பர்கள் வட்டம் பெரிது. அது இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது.
//

தெரியுது ஹீ ஹீ

நிஜமாதான் சுரேஷ். உங்க மூலமா வினோத் கௌதம் கிடைத்தமாதிரி. ஹா ஹா ஹா

S.A. நவாஸுதீன் said...

//வெள்ளை கைலி, பனியன் மட்டும்தான் (அறையில் ஒய்வு எடுப்பதால்). //

நல்ல வேளை ;) உண்மையை கொஞ்சம் சொல்லிடிங்க .. ஹீ ஹீ

நிறைய சொல்லி இருக்கேன் சுரேஷ். ஹா ஹா ஹா

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

//உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.//

இது கவிதையா ...

உங்களுக்கு பிடித்தை விட உங்கள் மக்களுக்கு பிடித்தை கூறியதால் மட்டும் இல்லை, அதை சொன்ன விதம்

எனக்கு என் பெற்றோர்கள் கொடுத்ததை என் மக்களுக்கு நான் கொடுக்கின்றேன் சக்தி.

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்.//

உண்மையை பொட்டில் அடித்தார் போல் கூறியது.. சும்மா நச் அது தான் "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்".

முழுவதும் படித்து விலாவாரியாக ரசித்து பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப நன்றி சுரேஷ்.

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

\\இன்னும் 2 வருஷத்துக்குள்ள அடிச்சி பிடிச்சாவது சென்னையில போய் செட்டில் ஆயிடணும்..அப்புறம் தான் ம‌த்த‌ காட்சியெல்லாம்..\\

மனசார பிரார்த்திக்கிறேன் சகோதரா

எல்லோரும் இல்லரம் எனும் நல்லரத்தை அருகில் இருந்தே இரசிக்கனும்

சரியா சொன்னே மாப்ள

S.A. நவாஸுதீன் said...

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

நன்றி தமிழர். வோட்டுப் பட்டையும் போட்டாச்சு

S.A. நவாஸுதீன் said...

வாங்க தமிழரசி. உங்களின் வருகையும் ரசித்து வரைந்த பின்னூட்டங்களும் கண்டு ரொம்ப சந்தோசம்.

வினோத் கெளதம் said...

ரொம்ப அழகாகவும் சுவாரசியமாகவும் சொல்லி இருக்கீங்க..
அதுவும் அந்த வாழ்க்கை பற்றிய வரிகள் அட்டகாசம்..

S.A. நவாஸுதீன் said...

வாங்க வினோத் கௌதம். உங்களின் வருகை மிகுந்த சந்தோசத்தை தருகிறது. பின்னூட்டம் இட சரியான எண்ணைத்தான் (1 4 3) தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள்.

gayathri said...

மீன் என்றால் எனக்கு உயிர்.

u mean ( mean )

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
வாங்க வினோத் கௌதம். உங்களின் வருகை மிகுந்த சந்தோசத்தை தருகிறது. பின்னூட்டம் இட சரியான எண்ணைத்தான் (1 4 3) தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள்.

143 ku iruka mathipe thani than anna

gayathri said...

அ.மு.செய்யது said...
//Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க //

நான் கிரீன் லேபிள் டீ தான் கேள்விப் பட்டிருக்கேன்.சுஹாசினி ஆண்ட்டி விளம்பரம்..

anitya kuda vettu vaikkama sait adichi irukenga

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.
///

ஆஹா யப்பா இந்த பாசம் 70 வயசானாலும் மாறாதுப்பா...

appa 70 vayasukku apparam mariduma enna

gayathri said...

vanthathu than vanthen

gayathri said...

me they 150 pottu poren

me they 150 anna

S.A. நவாஸுதீன் said...

வாம்மா காயு. ரொம்ப சந்தோசம்டா. ஏன் அப்டி ஒரு பதிவ போட்டு இந்த அண்ணனை பயமுறுத்துறே.

S.A. நவாஸுதீன் said...

உன்னால எங்களை எல்லாம் விட்டு போகமுடியுமா

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
வாம்மா காயு. ரொம்ப சந்தோசம்டா. ஏன் அப்டி ஒரு பதிவ போட்டு இந்த அண்ணனை பயமுறுத்துறே.

payamuruthala anna nejama than sonnen

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
உன்னால எங்களை எல்லாம் விட்டு போகமுடியுமா

nechayam mudiyathu anna

S.A. நவாஸுதீன் said...

அப்புறம் ஏன்டா போற. அதைப்பற்றி நீ யோசிக்கக்கூட கூடாது. புரியுதா?

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
அப்புறம் ஏன்டா போற. அதைப்பற்றி நீ யோசிக்கக்கூட கூடாது. புரியுதா?

mmmm sari anna

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
அப்புறம் ஏன்டா போற. அதைப்பற்றி நீ யோசிக்கக்கூட கூடாது. புரியுதா?

mmmm sari anna

அதான் என் தங்கச்சிக்கு அழகு. நீ இல்லேன்னா வெறிச்சோடி போகும் எங்களுக்கு.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.
//

-:)

S.A. நவாஸுதீன் said...

வாங்க பித்தன். முதல் முதலா வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி.

SUFFIX said...

//ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது//

அடி ஆத்தி இப்படி மாத்திப்புட்டாகளே!! ஆமாம் மாறித்தானே ஆக வேன்டும்

//என் குழந்தைகளின் அடுத்த புதிய போட்டோக்கள் வரும் வரை//

சூப்பர் பன்ச் நவாஸ், ரொம்ப பிடித்து வரிகள், சொற்களுடன் நன்றாக விளையாடுகிறிர்கள்.

தமிழ் அமுதன் said...

///குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.///

அருமையா சொல்லி இருக்கீங்க!

//நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்.//

நம் குடும்பமே நமக்கு சொர்க்கம் !! அதை மிக தெளிவாகவும் அற்புதமாகவும் விளக்கி இருக்கின்றீர்கள் ! அருமையான சிறப்பான பதிவு! உங்க கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் நெறைய இருக்கு!

SUFFIX said...

என்ன நவாஸ், ரொம்ப அமைதியா இருக்கீங்க, என்னை மாதிரி பிசி ஆயிட்டீங்களோ (ஒரே சிரிப்பு சத்தம்).

sakthi said...

அண்ணா உங்களின் இந்த பதிவு விகடனில் வாழ்த்துக்கள்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் குடும்பத்திபத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை என்னை சிலரிக்கவைத்தது.உங்கள் இந்த பதிவு குட் ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் குடும்பத்திபத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை என்னைச் சிலிர்க்கவைத்தது.உங்களின் இந்த பதிவு குட் ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

அண்ணா உங்களின் இந்த பதிவு விகடனில் வாழ்த்துக்கள்

சக்திமா, நிஜமாவா சொல்ற. என்னோட முதல் பதிவு விகடன்ல, அதுவும் என்னைப்பற்றியே. ரொம்ப சந்தோசமா இருக்கு. தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றிமா.

S.A. நவாஸுதீன் said...

ஜீவன் said...

///குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.///

அருமையா சொல்லி இருக்கீங்க!

வாங்க ஜீவன் அண்ணா. முதல் முதலா வந்து வாழ்த்தியதும் என்னோட ப்லோக்-க்கு புது பொலிவு வந்துவிட்டது. ரொம்ப நன்றிண்ணா. நீங்க வந்த நேரம் முதன் முதலா என்னோட பதிவு விகடன்ல வந்திருக்கு. தொடர்ந்து வரவும். ரொம்ப தூரம் இல்ல. மதுக்கூர்லேர்ந்து பக்கம்தான் அதிரை.

S.A. நவாஸுதீன் said...

ஜீவன் said...

நம் குடும்பமே நமக்கு சொர்க்கம் !! அதை மிக தெளிவாகவும் அற்புதமாகவும் விளக்கி இருக்கின்றீர்கள் ! அருமையான சிறப்பான பதிவு!

ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா.

உங்க கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் நெறைய இருக்கு!

ஐயோ, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணா. ரொம்ப பெரிய வார்த்தை சொல்லிட்டீங்கண்ணே. இப்பதான் சுவர்பிடித்து நிக்க ஆரம்பிச்சிருக்கேன். இனிதான் நடக்கவே தொடங்கணும்.

S.A. நவாஸுதீன் said...

Shafi Blogs Here said...

//ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது//

அடி ஆத்தி இப்படி மாத்திப்புட்டாகளே!! ஆமாம் மாறித்தானே ஆக வேன்டும்

//என் குழந்தைகளின் அடுத்த புதிய போட்டோக்கள் வரும் வரை//

சூப்பர் பன்ச் நவாஸ், ரொம்ப பிடித்து வரிகள், சொற்களுடன் நன்றாக விளையாடுகிறிர்கள்.

ரொம்ப நன்றி Shafi.

S.A. நவாஸுதீன் said...

Shafi Blogs Here said...

என்ன நவாஸ், ரொம்ப அமைதியா இருக்கீங்க, என்னை மாதிரி பிசி ஆயிட்டீங்களோ (ஒரே சிரிப்பு சத்தம்).

ஹா ஹா ஹா

S.A. நவாஸுதீன் said...

முனைவர் சே.கல்பனா said...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் குடும்பத்திபத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை என்னை சிலிர்க்க வைத்தது. உங்கள் இந்த பதிவு குட் ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.

ரொம்ப சந்தோசம் முனைவர் சே. கல்பனா அவர்களே. என்னுடைய முதல் பதிவு விகடனில் அதுவும் என்னைப்பற்றியே. எனது மனமார்ந்த நன்றி.

Suresh said...

யூத் புல் விகடனில் உங்கள் பதிவு நண்பா

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
gayathri said...

S.A. நவாஸுதீன் said...
அப்புறம் ஏன்டா போற. அதைப்பற்றி நீ யோசிக்கக்கூட கூடாது. புரியுதா?

mmmm sari anna

அதான் என் தங்கச்சிக்கு அழகு. நீ இல்லேன்னா வெறிச்சோடி போகும் எங்களுக்கு.

vanthuten anna

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

vanthuten anna

எனக்குத் தெரியும்டா நீ வருவேன்னு. தொடர்ந்து கலக்குமா நீ

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

யூத் புல் விகடனில் உங்கள் பதிவு நண்பா

ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பா

sarathy said...

வாழ்த்துக்கள் நவாஸ்...

அடுத்த பதிவும் விகடன்ல வரனும்.

SUFFIX said...

மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன், போட்டு தாக்குங்க!!

S.A. நவாஸுதீன் said...

sarathy said...

வாழ்த்துக்கள் நவாஸ்...

அடுத்த பதிவும் விகடன்ல வரனும்.

ரொம்ப நன்றி சாரதி. நிச்சயமாக, உங்களின் ஆதரவோடு

S.A. நவாஸுதீன் said...

Shafi Blogs Here said...

மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன், போட்டு தாக்குங்க!

ரொம்ப நன்றி ஸஃபி

gayathri said...

me they 180

தீப்பெட்டி said...

//கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.//

நல்லா சொல்லியிருக்கீங்க

அதிரை அபூபக்கர் said...

நல்ல அலசல் அருமையான பதில்கள்... எல்லாம் ரசிக்க வைத்தது...

S.A. நவாஸுதீன் said...

அதிரை அபூபக்கர் said...

நல்ல அலசல் அருமையான பதில்கள்... எல்லாம் ரசிக்க வைத்தது...

வாங்க அபூ. ரொம்ப சந்தோசம். நானும் அதிரைதான்

SUFFIX said...

சம்பள பட்டுவாடா வெற்றிகரமாக முடிஞ்சு இருக்கும்னு நினைக்கின்றோம்...இல்லை இன்னும் தொடர்கிரதா?

S.A. நவாஸுதீன் said...

தீப்பெட்டி said...

//கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.//

நல்லா சொல்லியிருக்கீங்க

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.