Monday, July 27, 2009

ஹாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்!!!(அதுக்கு இது எதிர் பதிவு இல்லை)


ஓரமாய் நின்று அவளின்
ஒரு கண் மட்டும் கண்டேன்
என்ன அழகு என்ன அழகு
பார்த்துக்கொண்டே இருந்தேன்
ஏதோ குறுகுறுக்க அவள்
மெல்ல என் பக்கம் திரும்பினாள்
என்ன ஆச்சரியம்
அவளின் மற்றொருகண்ணும்
என்னைப்போல்
அதையே பார்த்துக்கொண்டிருந்தது

என்றென்றும் நட்புடன் ஜமால்


இன்று மட்டுமல்ல என்றும்

உன் மீது படும் சூரியனின்
முதல் ஒளிக்கதிர் உன் முகத்தில் புன்னகையையும்

இரண்டாவது ஒளிக்கதிர் வாழ்வில் பிரகாசத்தையும்

மூன்றாவது ஒளிக்கதிர் நிலையான சந்தோசத்தையும்

நான்காவது ஒளிக்கதிர் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்

ஐந்தாவது................................ வேணாம்
இதுக்கு மேல பட்டா கறுத்து போயிடுவ.


இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

S. A. Navas

Sunday, July 19, 2009

விடை தெரிந்த புதிராய்


ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்,

காலை வெயில் கடப்பது போலவே
எங்களின் எல்லா பண்டிகையும்,
மழை நீரும் நதி நீரும்
பிரித்தறியத் தெரியாத
உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள்

புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து

எங்களின் ஆறுதலாய்
விரல் பிடித்து நடப்பது
உங்களின் நினைவுகள் தான்.

நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில்

மெல்ல இரவு சாக,
மீண்டும்
வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி
விடை தெரிந்த
புதிராய் நாங்கள்.


S.A. Navas.

நண்பர்களே இதையும் கொஞ்சம் படிங்க ப்ளீஸ்.

Tuesday, July 14, 2009

''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''

சூடாகி இருந்த வலையுலகை சுவாரஸ்யப்படுத்தவும், நண்பர்களை உற்சாகப்படுத்தவும் திரு. செந்தழல் ரவி அவர்கள் இந்த விருதினை அறிமுக படுத்தி
அதை மகிழ்ச்சியோடு சிறந்த பதிவர்கள் ஆறு பேருக்கு வழங்கியும் இருக்கிறார் அவருக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்!விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்!

திரு,செந்தழல் ரவி அவர்களிடம் விருதை பெற்ற அமிர்த வர்ஷினி அம்மா
,

எங்கள் தல 'ஜீவன்" அவர்களுக்கு வழங்க, அதை எனக்கும் வாரி வழங்கி இருக்கின்றார் நண்பர் ஜீவன். அவருக்கு என் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

ரொம்ப  நன்றி
“தல”

ரவி விதித்த அன்புக்கட்டளையின் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்!!

தலைப்பே சுவாரஸ்யம் பற்றி கூறுவதால், நான் சரியானவர்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். இவங்க கிட்ட நான் வாழ்த்துக்கள் பெறனும்னு ஆசைப்படும்போது நானே அவர்களுக்கு விருது கொடுப்பது கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது (ஒரே  நெர்வஸா இருக்கு). இருந்தாலும் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவர்கள் என்பதால் இந்த விருதை கொடுக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு.


அந்த ஆறுபேர்.......

கடல் புறா - பாலா

எழுத்தோசை - கவியரசி தமிழரசி

எங்க வீட்டு புறா – சக்தி

நகைச்சுவைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத  - சோம்பேறி

சுவாரசியம் கொஞ்சமும் குறையாத நம்ம – வால் பையன்

நம்ம பிரியமுள்ள வசந்த்

இவர்கள் அனைவருமே நிச்சயமாக  சுவாரசியமான பதிவர்கள் என்பதால் விருது கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!


Wednesday, July 1, 2009

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதீங்க
இது சும்மா, சத்தம் போடாம சிரிக்க

இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி