Lilypie

Monday, February 8, 2010

சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது



நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன்.  ஒரு வழியா தேதி முடிவு பண்ணியாச்சு.

நாளை (09-02-2010) சௌதியிலிருந்து புறப்படுகிறேன். இனி கொஞ்ச நாளைக்கு (குறைந்த பட்சம் 3 மாதத்திற்கு) என் தொந்தரவு இருக்காது உங்களுக்கு. அதுவரைக்கும் சந்தோசமா இருங்க மக்கா.

நானும் கொஞ்சநாள் ஆணி புடுங்காம இருந்துட்டு வரேன் (நீ எப்பதான் ஆணி புடுங்கியிருக்கேன்னு கேக்குறதும் கேக்குது).



நீங்களாவது ஒழுங்கா வேலையைப் பாருங்க. நூறு சதவிகித உழைப்பு இருக்கனும். அது எப்புடின்னு கேக்குறவங்க படத்தை பெருசாக்கிப் பார்த்துக்குங்க. அப்பதான் எல்லாருக்கும் நல்லது.



இந்தியாவில் இருக்கும் நண்பர்களை அங்கு வந்ததும் தொடர்பு கொ(ல்)ள்கிறேன்.

வாழ்க வளமுடன்.

என்றென்றும் அன்புடன்

நவாஸ்


Thursday, January 14, 2010

என்.ஆர்.ஐ. இதயம்

 
தினந்தோறும்
நித்திரைக்குமுன் சில நிமிடங்கள்
நீண்டும் முதிர்ந்தும்
இறந்த காலத்தின்
நினைவுகள் மட்டும்
இன்னமும் இறக்காமல்
இலேசானவனாய் மிதக்கவிடாமல்
சுமையேற்றப்பட்டு
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவன்.
பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும்
மழுங்கிய பார்வை
மெல்ல விலக
தெளிவான பார்வைக்குள்
பல்வேறு பிம்பங்களாய் நான்
தூக்கம்
இருண்ட மா மரமாய்
மின்மினிகளாய்
கனவுகள்
இப்படியாய் ஒவ்வொர் இரவும்
அராஜக நிசிகளின் குரல்வளை நெரிக்க
வளிம மிருகமேறி சென்றேயாகவேண்டும்
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர.