Thursday, January 14, 2010
என்.ஆர்.ஐ. இதயம்
தினந்தோறும்
நித்திரைக்குமுன் சில நிமிடங்கள்
நீண்டும் முதிர்ந்தும்
இறந்த காலத்தின்
நினைவுகள் மட்டும்
இன்னமும் இறக்காமல்
இலேசானவனாய் மிதக்கவிடாமல்
சுமையேற்றப்பட்டு
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவன்.
பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும்
மழுங்கிய பார்வை
மெல்ல விலக
தெளிவான பார்வைக்குள்
பல்வேறு பிம்பங்களாய் நான்
தூக்கம்
இருண்ட மா மரமாய்
மின்மினிகளாய்
கனவுகள்
இப்படியாய் ஒவ்வொர் இரவும்
அராஜக நிசிகளின் குரல்வளை நெரிக்க
வளிம மிருகமேறி சென்றேயாகவேண்டும்
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர.
Subscribe to:
Post Comments (Atom)
87 comments:
பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும்
மளுங்கிய பார்வை
மெல்ல விலக
தெளிவான பார்வைக்குள்
பல்வேறு பிம்பங்களாய் நான்
தூக்கம்
இருண்ட மா மரமாய்
மின்மினிகளாய் //
நவாஸ் இன்னிக்கி தூக்கத்த கெடுத்துட்டீங்க...
எப்டியெல்லாம் வார்த்தைகள்
அநாசியமாக வந்து விழுகிறது
இந்த வரிகள் யாரும் எழுதி பார்த்ததில்லை
அருமைன்னு சொல்றதவிட சிறப்பான கவிதை... நவாஸ் ஸ்பெசல்...
அந்த பறவையோட புகைப்படம் செம மேட்சிங் கவிதைக்கு....
/வளிம மிருகமேறி சென்றேயாகவேண்டும்
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர. /
’வலி’மையான வெளிப்பாடு
/பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும் /
ம்ம்
படிப்பவர்களை உணர வைக்கும் வ(லி)ரிகள்.
/மளுங்கிய/--மழுங்கிய
அருமை நவாஸ்
வாழவும் விடாமல் சாகவும் விடாமல் எதையெதையோ சொல்லி வதைக்கும் சமூகச் சாடலா கவிதை !
பொங்கல் சாப்பிட்டாச்சா நவாஸ் !வாழ்த்துக்கள்.
ம்.......... பெருமூச்சு தான்
பிப்ரவரில ஊருக்கு தானே
பிரிவின் வாதை... இன்மைகளின் வெற்றிடம்
வலிந்து ஏற்ற வலி .அன்பின் தரை வெளியில் பரவியபடி இருக்கும் வேர்கள் மனசிலும் நல்லா இருக்கு வெளிப்பாடு
( இந்த வளிமத்த விட மாட்டெங்குறாங்கப்பு)
:)
சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த கவிதை இது நவாஸ் மக்கா!
கண்ணில் நீர் தளும்பியது...
எவ்வளவு அழுத்தங்களை பிதுக்கி எறிகிறீர்கள் நவாஸ்..வார்த்தைகளில்.
கைகளை பற்றிக் கொள்ளவேணும் போல் இருக்கு மக்கா.
சந்தோசமாய் போயிட்டு வாங்க.
என்ன சொல்வது நவாஸ்
என். ஆர். ஐ. எல்லாம் கொஞ்சம் பணம் உள்ள அகதிகளே ..
பல வார்த்தைகள் அருமையான பயன்பாடு.. :-)
anna ennaku onnum puriyalai
ana nalla iruku
:))
ரொம்ப நல்லாயிருக்கு நவாஸீதீன்...
வெறும் 8 மாசத்திற்கே நுரை தள்ளிவிட்டது எனக்கு...உங்களுக்கெல்லாம் கேக்கவே வேண்டாம்.
அடுத்த மாசம் தான் வளிம மிருகம் ஏறிவிட போகிறீர்களே...அப்பா எப்பம்மா வருவார்னு கேட்டு கொண்டேயிருந்த என் பால்யமும் நிழலாடுறது...
காலத்தையே விரும்பும் திசைக்கு ஏற்றி பறக்கும் மிருகம் ஏதேனும் கண்டால் சொல்லுங்கள் :))
//"என்.ஆர்.ஐ. இதயம்"//
தலைப்புக்கு தனி வாழ்த்து :))
ஆழகான வரிகள் பாராட்டுகள் நண்பா
அடேங்கப்பா..!!
உங்கள் கவிதை ஏதோ சொல்கிறது..
அந்த புறா படம் பார்த்த உடனே வேறு ஏதோ எண்ணங்கள்...
கலக்கிட்டீங்க நவாஸ்...::))
தல வார்த்தைகளில் வலி தெரிகின்றது..
//இப்படியாய் ஒவ்வொர் இரவும்
அராஜக நிசிகளின் குரல்வளை நெரிக்க
வளிம மிருகமேறி சென்றேயாகவேண்டும்
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர. //
பிரிந்திருப்பதன் ஏக்கத்தை எவ்வளவு அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் நவாஸ். மிகப் பிடித்திருக்கிறது.
தினமும் நடக்குறதை கவிதையாக்கிட்டீங்க.
வார்த்தைகளுக்கு விலையில்லை.
மனபாரம் சிறிது குறைந்த மகிழ்ச்சி.
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நவாஸ்.
/// நித்திரைக்குமுன் சில நிமிடங்கள்
நீண்டும் முதிர்ந்தும்
இறந்த காலத்தின்
நினைவுகள் மட்டும்
இன்னமும் இறக்காமல்
இலேசானவனாய் மிதக்கவிடாமல்
சுமையேற்றப்பட்டு
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவன். ///
அருமையான வரிகள் ..
நவாஸ் கலக்கல் அருமை .
எவ்வளவு ஏக்கம் .
ஏக்கமே தான் மிஞ்சுகிறது .
கனவிலும் நினைவிலும்
மிதந்து செல்லும்
காற்றானேன் உன்னை நினைக்கயிலே ...
மனதில் உள்ளதை கொட்டித்தீர்த்துவிட்டீர்கள் குடும்பத்தை விட்டு சம்பாதிக்க வெள்நாட்டு செல்லும் அனைவர்களுடாய நிலைமையும் இதுதான் கவிதை மிக மிக அருமை வாழ்த்துக்கள் S.A. நவாஸுதீன்.
ஊர் நினைப்பு வந்து விட்டதா நவாஸ்.? கவிதை வரிகளில் வலி தெறிக்கிறது.
ஹை, எனக்கும் இப்ப கவித கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சிருச்சே!!
படமும் சூப்பர்!!
அதான் ஊருக்குக் கிளம்புற நாளாச்சே, அப்புறம் என்ன இன்னும் வருத்தம்?
பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும் .............. சில வார்த்தைகளின் ஆழத்தில் எத்தனை அருமையாய் விவரித்து சொல்லி இருக்கிறீர்கள்.
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர. ]]
ஹூம் --- என்னன்னு சொல்றது
“எல்லாமே” புரியுது இந்த வரிகளில்...
வார்த்தைகளை இன்னும் குறைத்து, எழுதிப் பார்க்கலாமே இந்தக் கவிதையை!
வாழ்த்துக்கள்.
குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருக்குறது கொடுமை. அதை, மிக அழகாக, ஆழமாக சொல்லியிருக்கிறீர்கள். வலி புரிகிறது. இரண்டாவது படம் அருமை.
இந்த கவிதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்.
முழுமையடைந்த கவிதை.
உருவகம்,மென்மை அழகு...கடைசி வரிகள் கிளாஸ்....!!!
உணர்பவர்கள் மட்டுமே உணரமுடியும் வலி.....
///வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர///
அவங்கள சீக்கிரம் கூட்டிச் சென்று விடுங்களப்பா...
புறா படம் நிறையா கதை பேசுகிரதுங்க :(
--வித்யா
///அ.மு.செய்யது said...
இந்த கவிதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்.///
நாங்கல்லாம் நிச்சயம் பின் வாங்கி இருப்போம்.
:(( :))
//பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும்
மழுங்கிய பார்வை
மெல்ல விலக //
வேதனையான உண்மை நவாஸ்!! ஹ்ஹ்ம்ம் என்ன செய்ய, இந்த விலங்கிடம் அகப்பட்டே ஆகவேண்டியிருக்கிறது.
எல்லா வரிகளும் வலியின் அழுத்ததை உணர்த்துகிறது.
பிரிவு என்றொன்று இல்லாதிருப்பின்
உறவின் அருமைகள் புரிவதில்லை
இழப்பதன் வழியே இருப்பதன் அருமை
உழைப்பதன் வழியே ஓய்வின் அருமை
புரிவது எதிரெதிர் நிலைகளின் வழியே
என்பது வாழ்க்கை! என்ஆர்ஐக்கு மட்டுமே அல்ல இங்கு எல்லோருக்குமே!
அதான் ஊருக்கு இன்னும் கொஞ்ச நாளில் வர்றீங்க இல்ல. அப்புறம் என்ன சோகமான ராகம்!
:-))
மச்சான் நீ மெருகேற்றிட்டே உன்னோட வரிகளின் வலிமையை
படமும் தலைப்புமே சொல்லுது ஆர்வத்தை
முழுமையடைந்த கவிதை
மொத்தத்துலே சுவையான வார்த்தை கோர்வை
//வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர//
சீக்கிரம் கிளம்புடா
வளமைக்காக இளமையை தொலைத்தவர்களை பற்றி
தங்கள் புலமையால் ஒரு மென்சோக பா ஈட்டி
எங்கள் இதயத்தை நனைத்துவிட்டீர்கள்
கவிதையின் கருத்தை எண்ணி மனம் நனைந்த வாழ்த்துக்கள்
//இப்படியாய் ஒவ்வொர் இரவும்
அராஜக நிசிகளின் குரல்வளை நெரிக்க
வளிம மிருகமேறி சென்றேயாகவேண்டும்
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர...//
நவாஸ்,
கனவுல தினமும் ஊருக்கு போயே ஆகவேண்டுமா? எதுவும் ஒப்பந்தமோ?
இதயத்துக்கு இப்பதான்யா முதல்முறையா ....இப்பிடியெல்லாம் பாக்குறேன்.
மென்மையான உணர்வுகளை உசுப்பி விட்டுட்டியே மக்கா...!
yepadinga epadilam yosikereenga
உங்கள் மனதின் ஆழமான வலி தெரிவிகிறது, ரொம்ப அருமையான வரிகள் //
புறா காத்திருப்பது , இன்னும் ஊர் செல்லும் நாட்களை எண்ணுவது போல் தெரிகிறது,, ஏன் இந்த பிரிவு வருகிறது..
13 நாட்கள் தான் இன்னும் இருக்கிறது என்றீர்கள். இப்ப இன்னும் ஆறு நாட்களா? என்றும் சந்தோஷம் நிலவட்டும்..
//பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும்
மழுங்கிய பார்வை //
உங்கள் வலிகளனைத்தையும் எனக்குள் ஏற்றி விட்டீர்கள் நவாஸ் என் ஆர் ஐ இதயத்தோடு என் இதயம் அதிகமாக மருள்கிறது
நவாஸண்ணா சக்கைபோடு போட்டுடீங்க,
எத்தனை அழகாய் அழுத்தமாய் சொல்லியிருக்கீங்க
மன உணர்வுகளை கொட்டிக்குமித்திருக்கிறீர்கள்
அருமை அருமை
அடேங்கப்பா..!!
நன்றி - வசந்த் (ஊருக்கு போற நாள் நெருங்குதில்லை அதான் இப்படி)
நன்றி - பாலா சார் (திருத்திட்டேன் பாஸ்)
நன்றி - ஹேமா (பயண நாள் நெருங்குது ஹேமா, அதான் இப்படி)
நன்றி - ஜோதி (ஆமா பாஸ்)
நன்றி - நேசன் (ஹா ஹா ஹா, நண்பா படு சமத்து நீங்க)
நன்றி - பா.ரா. (தூக்கம் இப்போ தூரிகையாய் மாறிப்போச்சு மக்கா. நாள் நெருங்குதில்லை, அதான் எல்லாத்தையும் பிதுக்கி வெளிய தள்ளியாச்சு)
நன்றி - எஸ்.கே.
நன்றி - காயு (விளக்கம் ஊருக்கு வந்து சொல்றேன் தங்கச்சி)
நன்றி - ராஜேஷ் (விரும்பும் திசைக்கு பறக்கும் மிருகம் நம்ம மனசுதான். சுழ்நிலை கத்திகளால் இறகுகள் கிழிக்கப்படுவதால் எல்லோராலும் இயல்பாய் பறக்கமுடிவதில்லை)
நன்றி - ஆ. ஞானசேகரன். (ஊரில் எல்லோரும் நலமா நண்பா)
நன்றி - சங்கர். (புறா பறக்கத் தயாராக இருக்கிறது)
நன்றி - வினோத் (என்.ஆர்.ஐ எல்லாருக்கும் உள்ள வலிதான் நண்பா)
நன்றி - சரவணா (சீக்கிறம் வாங்க நீங்களும். உங்களை சந்திக்கனும் கண்டிப்பா)
நன்றி - அக்பர்
நன்றி - ஷேக் மைதீன் (கவிதைப் பின்னூட்டம் நல்லா இருக்கு)
நன்றி - முஜிப்
நன்றி - ஜெஸ் (புறா பறக்கப்போகிறது வீடு நோக்கி)
நன்றி - ஹுசைனம்மா (நாள் நெருங்கினாலும் நேரம் அதிகரிப்பது போலவே இருக்கிறது. கடிகாரம் நகர மாட்டேங்குதே)
நன்றி - சித்ரா
நன்றி - ஜமால் (துஆ செய் மாப்ள)
நன்றி - மாதவராஜ் (அந்த பக்குவம் இன்னும் வரலை, கண்டிப்பா முயற்சி செய்றேன் பாஸ். அடுத்தமாதம் விருதுநகர், சாத்தூர் வருவேன். உங்களுக்கு சமையம் இருந்தால் சந்திக்கலாம்)
நன்றி - பின்னோக்கி
நன்றி - அ.மு.செ. (ஆகா வடை போச்சே)
நன்றி - தமிழரசி (சரியா சொன்னேப்பா)
நன்றி - வித்யா (ஆமா வித்யா, முடிவே பண்ணியாச்சு), (இப்பவும் மரத்துக்கு பின்னாடிதான் நான் இருக்கேன்)
நன்றி - ஷஃபி
நன்றி - கிருஷ்ணா சார் (போறதுக்கு முன்னாடி ஒரு பதிவும் போட்டமாதிரி ஆயிடும்ல, ஹா ஹா ஹா)
நன்றி - அபூஅஃப்ஸர் (கெளம்பிட்டேன் மச்சான்)
நன்றி - அருள்மொழியன் (அழகான பின்னூட்டம்)
நன்றி - கண்ணா (நீ எப்போதும் உசுப்பி விடுற, நான் அப்பப்பதானே மக்கா)
நன்றி - scharu (ரூம் போட்டுதான், ஐ மீன் வேலை முடிஞ்சு ரூமுக்கு போயிதான்)
நன்றி - ஜலீலா (இல்லை சகோதரி கொஞ்சம் தள்ளிப்போச்சு, பிப்ரவரி 2 இப்பவரைக்கும் கன்ஃபார்ம்ட், இதுவும் தள்ளிப்போகாம இருக்கனும்னு துஆ செய்யுங்க)
நன்றி - தேனம்மை (இன்னும் கொஞ்........ச நாள் தான் சரியாயிடும்)
நன்றி - மலிக்கா (உங்க வாழ்க்கைப்பயணம் கவிதை படிச்சபிறகு நானும் எழுதுவேன்னு சொன்னேன்ல, அதான் இது)
நன்றி - பாத்திமா ஜொஹ்ரா (என்னாச்சுங்க?)
ஊருக்கு போகும் நாள் வந்தாச்சா அப்ப சந்தோஷம் தான். எல்லாம் நல்லவிதமாக முடியும் நிம்மதியாயிருங்க .
செல்லகுட்டிக்கு என் அன்பைச்சொல்லுங்கள் அனைவருக்கும் சலாம் சொல்லுங்கள்
நவாஸண்ணா..
நன்றி நவாஸ் சீக்கிரம் நூராவைப் பார்க்கப் போறீங்க ..வாழ்த்துக்கள்
கவிதையில் நல்ல ஒரு ஃபீல் இருக்கு.
Mee the too late
நவாஸ்! கவிதை பழைய இடியாப்ப நடை வந்துவிட்டது. சிந்திக்கிறேன்..சிந்திக்கிறேன்
படம் சூப்பரோ சூப்பர்.
//தினந்தோரும்
நித்திரைக்குமுன் சில நிமிடங்கள்
நீண்டும் முதிர்ந்தும்
இறந்த காலத்தின்
நினைவுகள் மட்டும்
இன்னமும் இறக்காமல் //
எல்லாருக்கும் வருவதே! சில நேரங்களில் தூக்கம் கூடத் தொலைந்து போகும்..,
என்.ஆர்.ஐ இதயம் நல்லாத்தான் இருக்கு
அன்புடன் மலிக்கா said...
ஊருக்கு போகும் நாள் வந்தாச்சா அப்ப சந்தோஷம் தான். எல்லாம் நல்லவிதமாக முடியும் நிம்மதியாயிருங்க .
செல்லகுட்டிக்கு என் அன்பைச்சொல்லுங்கள் அனைவருக்கும் சலாம் சொல்லுங்கள்
நவாஸண்ணா..
நிச்சயமா. இன்ஷா அல்லாஹ் புதுவீடு வேற குடி போகனும் துஆ செய்ங்க தங்கச்சி.
thenammailakshmanan said...
நன்றி நவாஸ் சீக்கிரம் நூராவைப் பார்க்கப் போறீங்க ..வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி சகோதரி.
" உழவன் " " Uzhavan " said...
கவிதையில் நல்ல ஒரு ஃபீல் இருக்கு.
நன்றி நண்பா. (உங்க அலைபேசி எண்ணை மெயில் பண்ணுங்க நண்பா. ஊருக்கு வந்ததும் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும்)
/// இப்படிக்கு நிஜாம்.., said...
Mee the too late
நவாஸ்! கவிதை பழைய இடியாப்ப நடை வந்துவிட்டது. சிந்திக்கிறேன்..சிந்திக்கிறேன்
படம் சூப்பரோ சூப்பர்.
எல்லாருக்கும் வருவதே! சில நேரங்களில் தூக்கம் கூடத் தொலைந்து போகும்..,
என்.ஆர்.ஐ இதயம் நல்லாத்தான் இருக்கு///
ஊருக்கு போகப்போற சந்தோசம்தான் நிஜாம். ஆனா பாருங்க நாள் நகருவேனாங்குது. எப்படா 2-ஆம் தேதி வரும்னு இருக்கு.
:((
94443 59993
என்னோட புரொபைல்லயே என் நம்பர் இருக்கே தலைவா.. எப்ப இங்க வர்ரீங்க? சென்னை வந்தா சொல்லுங்க. சந்திக்கலாம்
///வித்யா said...
:(( ///
ஹா ஹா நன்றி வித்யா.
///" உழவன் " " Uzhavan " said...
94443 59993
என்னோட புரொபைல்லயே என் நம்பர் இருக்கே தலைவா.. எப்ப இங்க வர்ரீங்க? சென்னை வந்தா சொல்லுங்க. சந்திக்கலாம்///
பிப்ரவரி இரண்டாம் தேதி டிக்கெட் போட்டிருக்கேன் பாஸ். ஊருக்கு வந்ததும் நிச்சயம் தொடர்பு கொள்கிறேன். சில நாட்கள் கழித்து சென்னையும் வருவேன். நிச்சயம் சந்திப்போம்.
/இப்படியாய் ஒவ்வொர் இரவும்
அராஜக நிசிகளின் குரல்வளை நெரிக்க
வளிம மிருகமேறி சென்றேயாகவேண்டும்
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர...//
தேடும் பொருளில்
தேயும் நினைவுகளாய்
வாடும் உறவுகளுக்கு
வாய்த்திடும் இன்பமெல்லாம்
காய்த்து கனியும் காலம்
கிடைக்கப்பெறும்வரை..
வாழ்த்துக்கள் நண்பா..
கனத்தது
பிரிவின் வேதனை வார்த்தைகளில்...
வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டு பிரிபவர்களுக்காக ....
அற்புதமான கவிதை..
///// சந்தான சங்கர் said...
தேடும் பொருளில்
தேயும் நினைவுகளாய்
வாடும் உறவுகளுக்கு
வாய்த்திடும் இன்பமெல்லாம்
காய்த்து கனியும் காலம்
கிடைக்கப்பெறும்வரை..
வாழ்த்துக்கள் நண்பா./////
வாங்க நண்பா. அழகான பின்னூட்டம். ரொம்ப நன்றி நண்பா.
////D.R.Ashok said...
கனத்தது////
வாங்க அஷோக். நன்றி.
////தெய்வா said...
பிரிவின் வேதனை வார்த்தைகளில்...
வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டு பிரிபவர்களுக்காக ....
அற்புதமான கவிதை..////
வாங்க தெய்வா சார். ரொம்ப நன்றி.
apdiye touch panniteenga brother...
eppudi ipdilam...
anbutholan.blogspot.com
////// Anbu Thozhan said...
apdiye touch panniteenga brother...
eppudi ipdilam...
anbutholan.blogspot.com//////
வாங்க அன்புத்தோழா! ரொம்ப நன்றி.
அண்ணே மிக அருமை......மனதின் வலியை மிக நாசுக்காய் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.....
அண்ணே இன்று தான் ஊருக்கு வந்தேன்....ஆபீஸ் இல் ப்ளாக் போன்ற சமாச்சாரங்கள் அனுமதி இல்லை.....இன்னும் இரண்டு நாட்களில் அங்கு என் அறையில் இணைப்பு வாங்கி விடுவோம் இனி என் மொக்கை தொடரும் அண்ணே.....மிக்க நன்றி....
பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும்
மளுங்கிய பார்வை
மெல்ல விலக
தெளிவான பார்வைக்குள்
பல்வேறு பிம்பங்களாய் நான்
தூக்கம்
இருண்ட மா மரமாய்
மின்மினிகளாய் //
nice one.
//////coolzkarthi said...
அண்ணே மிக அருமை......மனதின் வலியை மிக நாசுக்காய் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.....
அண்ணே இன்று தான் ஊருக்கு வந்தேன்....ஆபீஸ் இல் ப்ளாக் போன்ற சமாச்சாரங்கள் அனுமதி இல்லை.....இன்னும் இரண்டு நாட்களில் அங்கு என் அறையில் இணைப்பு வாங்கி விடுவோம் இனி என் மொக்கை தொடரும் அண்ணே.....மிக்க நன்றி....////
வாங்க தம்பி. ரொம்ப நாள் ஆச்சு. வீட்டில் எல்லோரும் நலமா. இணைப்பு வந்ததும் வழக்கம்போல் கலக்குங்க. ரொம்ப நாள் கழிச்சு பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு கார்த்தி.
//////திவ்யாஹரி said...
nice one.//////
ரொம்ப நன்றிங்க.
வார்தைகளில் வலி உணர்த்தும்
பிரிவின் வாதைகளை
வடித்திருக்கிறீர்...
வாழ்த்துக்கள்...
//// suresh.ekaa said...
வார்தைகளில் வலி உணர்த்தும்
பிரிவின் வாதைகளை
வடித்திருக்கிறீர்...
வாழ்த்துக்கள்...////
ரொம்ப நன்றிங்க சுரேஷ்.
நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக்கிறன்
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவர்களின் ஒருமித்த குரலாய் ஒலிக்கும் கவிதை!
தினந்தோறும் என்று மாற்றிவிடுக.
இறந்த காலத்தின்
நினைவுகள் மட்டும்
இன்னமும் இறக்காமல்
இலேசானவனாய் மிதக்கவிடாமல்
சுமையேற்றப்பட்டு
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவன்.//
நினைவு + வரிகள்.. அருமை..
///ஜெகநாதன் said...
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவர்களின் ஒருமித்த குரலாய் ஒலிக்கும் கவிதை!
தினந்தோறும் என்று மாற்றிவிடுக.///
வாங்க நண்பா. அப்பாடா, இப்பதான் முழுமையடைந்த மாதிரி இருக்கு. (மாற்றிவிட்டேன், நன்றி)
////அதிரை அபூபக்கர் said...
இறந்த காலத்தின்
நினைவுகள் மட்டும்
இன்னமும் இறக்காமல்
இலேசானவனாய் மிதக்கவிடாமல்
சுமையேற்றப்பட்டு
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவன்.//
நினைவு + வரிகள்.. அருமை..////
வாங்க தம்பி, ரொம்ப நன்றி.
////// தியாவின் பேனா said...
நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக்கிறன்//////
Welcome Back Diya
அருமையான கவிதை வார்த்தை யாலங்கள் அருமையாக உள்ளன நவாஸ்.
//////தியாவின் பேனா said...
அருமையான கவிதை வார்த்தை யாலங்கள் அருமையாக உள்ளன நவாஸ்.//////
ரொம்ப நன்றி தியா. (விடுமுறை சிறப்பாக இருந்திருக்குமென்று நம்புகிறேன்).
அடுத்த போஸ்ட் எப்போ வரும் நவாஸ் ..
வீட்டில் அனைவரும் நலமா ..
நூராவுக்கு என் அன்பு முத்தங்கள்!!
/////thenammailakshmanan said...
அடுத்த போஸ்ட் எப்போ வரும் நவாஸ் ..
வீட்டில் அனைவரும் நலமா ..
நூராவுக்கு என் அன்பு முத்தங்கள்!!/////
ஊருக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருக்கிறேன். வீட்டில் எல்லோரும் நலம். புறப்படும் முன் மெயில் அனுப்புகிறேன் சகோ.
ரொம்ப நன்றி.
அருமையான கவிதை சகோ!!
ஊருக்கு நல்லபடியாக போய்ட்டுங்க.நல்லா எஞ்சாய் பண்ணுங்க.பயண வாழ்த்துக்கள்!!
வலிமையான வார்த்தைகள் வலிதரும் வார்த்தைகள்....ம்ம்ம்.....என்ன செய்ய தியாகம்...தேடல்...பிரிவு...வலி என கவிதை கலக்கலாகிறது வாசிப்பவருக்கு...எழுதிய உம் நிலை!!! நவாஸ் அழகா எழுதியிருக்கிங்கப்பா...
Post a Comment