Lilypie

Monday, February 8, 2010

சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது



நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன்.  ஒரு வழியா தேதி முடிவு பண்ணியாச்சு.

நாளை (09-02-2010) சௌதியிலிருந்து புறப்படுகிறேன். இனி கொஞ்ச நாளைக்கு (குறைந்த பட்சம் 3 மாதத்திற்கு) என் தொந்தரவு இருக்காது உங்களுக்கு. அதுவரைக்கும் சந்தோசமா இருங்க மக்கா.

நானும் கொஞ்சநாள் ஆணி புடுங்காம இருந்துட்டு வரேன் (நீ எப்பதான் ஆணி புடுங்கியிருக்கேன்னு கேக்குறதும் கேக்குது).



நீங்களாவது ஒழுங்கா வேலையைப் பாருங்க. நூறு சதவிகித உழைப்பு இருக்கனும். அது எப்புடின்னு கேக்குறவங்க படத்தை பெருசாக்கிப் பார்த்துக்குங்க. அப்பதான் எல்லாருக்கும் நல்லது.



இந்தியாவில் இருக்கும் நண்பர்களை அங்கு வந்ததும் தொடர்பு கொ(ல்)ள்கிறேன்.

வாழ்க வளமுடன்.

என்றென்றும் அன்புடன்

நவாஸ்


69 comments:

Unknown said...

நல்லபடியாக ஊர் போயிட்டு சந்தோஷமாக திரும்பி வாங்க. இன்ஷா அல்லாஹ் எங்க ஊருக்கு வரும்பொழுது கட்டாயம் குடும்பத்துடன் வீட்டுக்கு வாங்க...

தமிழ் அமுதன் said...

வாங்க பாஸ்...!

சென்னை க்கு வருவீங்களா ...?

நான் ஊருக்கு வந்தா உங்கள சந்திக்கிறேன்...!

ஜமால் சொன்ன மாதிரி மல்லிபட்டினத்துக்கு மீன் வாங்க போவோம் ...!

SUFFIX said...

ஒரே ஊராக இருந்தும், ஜித்தாவில் இருந்து கொண்டும் அது என்னவோ இந்த நல்ல நண்பரை சென்ற ஆண்டு மே மாதம் பதிவின் ஊடாக சந்திக்க நேர்ந்தது. இவரும், இவர் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட நல்ல பல நண்பர்களின் ஊக்கமே எனது பதிவுகளும், இன்னும் தொடரும் நட்புகளும். இவர் பிரிந்து செல்வது சிறிது வருத்தம் தான்,இருந்தாலும் எல்லாம் நன்மைக்கே நவாஸ், தங்களது எதிர்காலம் இன்னும் ஒளிர எனது வாழ்த்துக்களும், பிராத்தணைகளும். மீண்டும் சந்திபோம்.

S.A. நவாஸுதீன் said...

Mrs.Faizakader said...
நல்லபடியாக ஊர் போயிட்டு சந்தோஷமாக திரும்பி வாங்க. இன்ஷா அல்லாஹ் எங்க ஊருக்கு வரும்பொழுது கட்டாயம் குடும்பத்துடன் வீட்டுக்கு வாங்க...

ரொம்ப நன்றிமா. கண்டிப்பா வருவேன் தங்கச்சி

S.A. நவாஸுதீன் said...

ஜீவன் said...
வாங்க பாஸ்...!

சென்னை க்கு வருவீங்களா ...?

நான் ஊருக்கு வந்தா உங்கள சந்திக்கிறேன்...!

ஜமால் சொன்ன மாதிரி மல்லிபட்டினத்துக்கு மீன் வாங்க போவோம்

சென்னை வருவேன் தல. மல்லிப்பட்டினத்துக்கு போவோம் தல கண்டிப்பா.

SUFFIX said...

இந்த நூற்றுக்கு நூறு படம் எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சே நவாஸ், இதை கட்டாயமா எல்லோரும் கடைபிடிக்கணும்.

vasu balaji said...

வாங்க வாங்க:)

Anonymous said...

உண்மையை சொல்லனும்னா ரொம்ப சந்தோஷம் அப்பு யார் எப்படியோ நான் கொஞ்ச நாள் நல்லாயிருப்பேன்..ஆனாலும் பழகிய தோஷம் உன் இம்சை இல்லாவிட்டாலும் கஷ்டம் தான்...


இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்
விடுமுறை நாட்கள் உற்றார் உறவினர் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக செலவிடுங்கள்....எல்லாம் வல்ல இறைவன் நன்மையே பயப்பான் என்றும் உமக்கு....

சிநேகிதன் அக்பர் said...

நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க நவாஸ்.

எத்தனை மாதம் லீவு.

வீட்டில் அனைவரின் நலத்தையும் விசாரித்ததாக சொல்லவும்.

மாதேவி said...

பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

அப்பாடா ஒரு வழியா கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு ஒரு மாதத்துக்கு முன்னாலயே ஊர்ல இருக்குறதா நினைச்சேன் நான்

Menaga Sathia said...

நல்லபடியாக ஊருக்கு போய்ட்டு வாங்க அண்ணா.இனிய பயண வாழ்த்துக்கள்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

சென்னைக்கு வந்தா தொடர்பு கொள்ளுங்க

செ.சரவணக்குமார் said...

ஊருக்குப் போறேன்னு போன்ல சொல்லும்போது அந்தக் குரலில்தான் எவ்வளவு குளுமை..
நல்லது நவாஸ்ஜி, பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் நானும் இதே மாதிரி ஒரு பதிவு போடுவேன்னு நினைக்கிறேன். ஊர்ல சந்திக்கலாம் தலைவரே.

வினோத் கெளதம் said...

தல என்ஜாய் பண்ணுங்க இந்த தம்பியின் அன்பார்ந்த வாழ்த்துக்கள் ..:)

அன்புடன் அருணா said...

அட இந்தியா வர்றீங்களா? வாங்க...வாங்க!

பனித்துளி சங்கர் said...

எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் . அருமை .

தேவன் மாயம் said...

வருக! வருக!!

Paleo God said...

welcome back ..:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நவாஸ்

ஊருக்கு சென்று நல்லபடியாக விடுமுறையை கொண்டாடுங்க ...

நல்வாழ்த்துக்கள்

VISA said...

welcome to India.

Ashok D said...

வாங்க :)

sarathy said...

Have a nice trip....

Soon i will meet u in India..

Convey my regards to your family..

ஜெய்லானி said...

பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஷாகுல் said...

நல்லபடியா ஊருக்கு போய்ட்டு வாங்க இன்ஷா அல்லாஹ்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சேமமே போய் வாருங்கள். கொஞ்சக் காலம் என் பதிவுகளுக்கு ஒரு ஓட்டுக் குறையப் போகுதென்று தெரிகிறது. ஹ ஹ ஹா....

எம்.எம்.அப்துல்லா said...

வாடா..வாடா..வாடா :)

thiyaa said...

நல்வரவாகுக

na.jothi said...

நல்லபடியாக ஊர் போயிட்டு வாங்க

மே மாதம் வரை ஊரில் இருப்பிங்களா

மே மாதம் நானும் வருகிறேன் சந்திப்போம்

அப்துல்மாலிக் said...

மச்சான் கிளம்பிட்டியா
நம்ம பதிவர்களை எல்லோரையும் கேட்டதா சொல்லு

have a pleasant journey

அப்துல்மாலிக் said...

//ஜீவன் said...
வாங்க பாஸ்...!

சென்னை க்கு வருவீங்களா ...?

நான் ஊருக்கு வந்தா உங்கள சந்திக்கிறேன்...!

ஜமால் சொன்ன மாதிரி மல்லிபட்டினத்துக்கு மீன் வாங்க போவோம் ...!
//

இப்புடியெல்லாம் பிளான் போட்டாச்சா ம்ம் நடத்துங்க‌

ஹேமா said...

நவாஸ் சுகமா போய்ட்டு வாங்க.நாங்களும் காத்திட்டு இருப்போம்.மறந்திடாதீங்க.

Chitra said...

எங்களையும் மறந்துடாதீங்க. அப்போ அப்போ, வந்து ஹலோ சொல்லுங்க.
Have a safe and fun trip!

பா.ராஜாராம் said...

போய்ட்டு வாங்க மக்கா.

பாலை நினைப்பே வேணாம்.சந்தோசமாய் இருந்துட்டு வாங்க.வீட்டு வேலைகள் எல்லாம் முடிங்க.கிரகபிரவேசத்திற்கு ராஜா மக்காவிற்கு என ஒரு மிடறு தண்ணி குடிங்க.(என் தண்ணி இல்லை.உங்க தண்ணி.)புரை ஏறிக் கொள்கிறேன்.வீட்டில் யாவருக்கும் என அன்பு.

ஸ்பெசல் அன்பு நதீம் நூராவிற்கு!

அன்புடன் மலிக்கா said...

அண்ணா ஊருக்கா ஹையா ஜாலிதான்.

மச்சி, பிள்ளைகளை கேட்டதாகவும் சலாம் சொன்னதாகவும் சொல்லவும்.

3. மாசத்துக்கா ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா நல்லபடியாக சென்றுவாருங்கள். இந்த தங்கையையும் நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால் அங்கிருந்து மெயில் பண்ணுங்க.

என் பதிவுகள் அண்ணாவின் கருத்துக்களுக்காக காத்திரூக்கும்

என்றும் அன்புடன்
தங்கை மலிக்கா

ஹுஸைனம்மா said...

கிளம்பியாச்சா? நல்லபடி போய்வாங்க. மூணு மாசம் எங்களுக்கு அதிகமாத் தெரிஞ்சாலும், உங்களுக்கும், பிள்ளைங்களுக்கும் அது இப்ப ஓடிப் போய்டும். எஞ்சாய்!!

பித்தனின் வாக்கு said...

இனிய பயணம் வளமாகவும், நிறைவாகவும் அமைய வாழ்த்துக்கள். எப்ப நேரம் கிடைத்தாலும் பதிவுகள் படித்து பின்னூட்டம் இடுங்கள். படிக்கும் வழக்கத்தை நிறுத்தக் கூடாது. நன்றி.
புகைப் படங்களுடன் கூடிய பயண அனுபவப் பதிவுகள் படிக்க ஆவலாக உள்ளேம். நன்றி.

சத்ரியன் said...

மாப்ள நவாஸூ,

பயணம் இனிதாய் அமை(ந்திருக்கும்)ய வாழ்த்துகள்.

உறவுகள் அனைவரையும் நலம் கேட்டதாகச் சொல்லவும்.

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

gayathri said...

நல்லபடியாக ஊருக்கு போய்ட்டு வாங்க அண்ணா.

Abu Khadijah said...

Have a nice journey, convey my regards to all. Enjoy your holiday and dont forget to post the information about the status of adirai, especially sekkadi medu

நிஜாம் கான் said...
This comment has been removed by the author.
நிஜாம் கான் said...

நவாஸ் உங்க பயணம் இனிதே அமைய என் பிரார்த்தனைகள். உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் என் சலாம். மகிழ்ச்சி பொங்கட்டும்.அதுக்குள்ள குளிர் அடிச்சிருச்சா?????

டவுசர் பாண்டி said...

வாங்க தல !! சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது , அப்பிடியே நம்ப ஏரியாவும் சேந்து
அழைக்கிறோம் !!

Jaleela Kamal said...

ஊருக்கு போயாச்சா? ரொம்ப சந்தோஷம்/
முன்று மாதம் முன்று வாரம் போல் புஸுன்னு போய் விடுமே/

ந‌ல்ல‌ ப‌டியாக‌ குடும்ப‌த்துட‌ன் ச‌ந்தோஷ‌மாய் இருந்துட்டு வாங்க‌//

இன்றைய கவிதை said...

வாழ்த்துக்கள் நண்பரே , நமக்கு தெரிந்தவர் யாரேனும் இந்தியா சென்றால் நாம் செல்வது போல் உண்ர்வு மகிழ்வு

உங்கள் விடுமுறை இனிதே அமைய என் வாழ்த்துக்கள்

ஜேகே

shortfilmindia.com said...

வாங்க பாஸ் வருவதுக்கு முன்னாடி நம்ம பலாபட்ட்றை சங்கரிடம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கேட்டுட்டு வரவும்..:)

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்
அன்பு
கேபிள் சங்கர்..

பனித்துளி சங்கர் said...

பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !

Thenammai Lakshmanan said...

Nawas...

How r u and ur family..?

Plz write even 4 lines in ur blog

enjoy holodays with ur family ..

wishes from akka

Thenu

rose said...

அண்ணா ...........ஊருலதான் இருக்கீங்களா.........

இரசிகை said...

happy and safe journey.........:)

ஜெய்லானி said...

#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Thenammai Lakshmanan said...

எப்ப வருவீங்க நவாஸ்... சீக்கிரம் வாங்க...

Jaleela Kamal said...

சகோ. நவாஸ் ஊரில் தான் இருக்கீங்களா? ஒரு பதிவையும் கானும்.
எப்படி பிலாக் பார்க்காம
...

Thenammai Lakshmanan said...

ஆ நவாஸ் வந்துட்டீங்கன்னு ஓடி வந்தேன்.. ஏமாற்றம்

mohamedali jinnah said...

RAMADAN KAREEM

Assalamuallikum.
May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
Jazakkallahu khairan
Mohamed Ali jinnah

பித்தனின் வாக்கு said...

eid mubarakk. vallthukkal

Jaleela Kamal said...

எப்படி இருக்கீங்க நவாஸ் ஒரு வருடம் ஆக போகுது.

sakthi said...

welcome welcome

சந்தான சங்கர் said...

உங்களை சந்தித்து
வெகு நாட்கள் ஆகிவிட்டது
நவாஸ்..

அனைவரும் நலம்தானே..

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோ இன்றுதான் உங்களின் தளம் பார்த்தேன் இனி தொடர்கிறேன்

Jaleela Kamal said...

என்ன ஆச்சு ஒரு வருடம் ஆச்சு இன்னும் ஊர் போய் திரும்பலையா?

சிநேகிதன் அக்பர் said...

என்ன தல எப்படி இருக்கீங்க.

சந்தான சங்கர் said...

இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..

சங்கர்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
சகோ ரமலான் வாழ்த்துக்கள்

jiff0777 said...

எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

Unknown said...

இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

ஹேமா said...

உங்களை மறக்கமுடியுமா நவாஸ்.சுகமா இருக்கிறீங்களா.பழைய பதிவுகளில் ஞாபகங்கள் இருக்கும் எப்பவும்.அடிக்கடி புரட்டிக்கொள்வேன்.இன்று கண்டது மிக்க சந்தோஷம்.நானும் முகப்புத்தகம் கிட்டத்தட 2 மாதம்தான்.இனிச் சந்திக்கலாம் அடிக்கடி !