Sunday, July 19, 2009

விடை தெரிந்த புதிராய்


ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்,

காலை வெயில் கடப்பது போலவே
எங்களின் எல்லா பண்டிகையும்,
மழை நீரும் நதி நீரும்
பிரித்தறியத் தெரியாத
உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள்

புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து

எங்களின் ஆறுதலாய்
விரல் பிடித்து நடப்பது
உங்களின் நினைவுகள் தான்.

நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில்

மெல்ல இரவு சாக,
மீண்டும்
வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி
விடை தெரிந்த
புதிராய் நாங்கள்.


S.A. Navas.

நண்பர்களே இதையும் கொஞ்சம் படிங்க ப்ளீஸ்.

73 comments:

அபுஅஃப்ஸர் said...

மச்சான் பின்னிட்டே

எங்கேப்பா அடக்கிவெச்சிருந்தே இதையெல்லாம்

அபுஅஃப்ஸர் said...

//ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய், //

ஆமாம் மனதிற்குள்

அபுஅஃப்ஸர் said...

//காலை வெயில் கடப்பது போலவே
எங்களின் எல்லா பண்டிகையும்,
/

சிலபேருக்கு வெயிலே தெரியாதப்பூ, அவர்கள் பண்டிகைகளும் நான்கு சுவற்றிர்குள் ஏஸிக்காற்றினூடே அடங்கிப்போகும்

ஷ‌ஃபிக்ஸ் said...

ஆரம்பமே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு நவாஸ்...படிச்சுட்டு வருகிறேன்.

ஷ‌ஃபிக்ஸ் said...

//ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்//

சோகத்தின் மொத்த உருவத்தையும் ஒவ்வொரு பரிமாணத்தில் சொல்லி இருக்ககீங்க‌

ஷ‌ஃபிக்ஸ் said...

//காலை வெயில் கடப்பது போலவே
எங்களின் எல்லா பண்டிகையும்,
மழை நீரும் நதி நீரும்
பிரித்தறியத் தெரியாத
உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள் //

நிதர்சனமான உண்மை, தொலைப்பேசியும் நெட்டும் ஒரு ஆறுதல்!!

அபுஅஃப்ஸர் said...

//புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்./

ஃபிளைட் ஏறும்போது இந்த வருத்தங்களும், பிரிவுத்துயரும் வருவதில்லையே ஏன்

ஷ‌ஃபிக்ஸ் said...

//புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து//

எப்பா நவாஸ், எங்கிருந்துய்யா கண்டுபிடிச்சீங்க‌ இந்த வார்த்தைகளை!!

அபுஅஃப்ஸர் said...

//நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக//

சந்தோஷத்தை சில்லறைகளாக சிதறவிட்டு......

அபுஅஃப்ஸர் said...

//மெல்ல இரவு சாக,
மீண்டும்
வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி
//

புலம்ப நேரமிருந்தால் மனது பைத்தியமாகவல்லவா அலையும்

ஷ‌ஃபிக்ஸ் said...

உணர்வுகள் புரிந்தது!! ஆறுதலாய் நட்புக்களான நாங்களும் இருக்கின்றோம் நன்பரே!!

அபுஅஃப்ஸர் said...

அலைகடல் ஓடியும் திரவியம் தேடுனு சொல்லிபோட்டு போய்ட்டாங்க

இன்று இது மாதிரி கவிதைகளுக்கெல்லாம் மேற்சொன்னதுதான் முன்னோடி

குடும்பத்தையும், நண்பர்களையும் பிரிந்து பணத்துக்காக அலைகடல் தாண்டி தவிக்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் இந்த வரிகள்

கலக்கிட்டே மச்சான், வாழ்த்துக்கள்

ஷ‌ஃபிக்ஸ் said...

//அபுஅஃப்ஸர் said...
//மெல்ல இரவு சாக,
மீண்டும்
வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி
//

புலம்ப நேரமிருந்தால் மனது பைத்தியமாகவல்லவா அலையும்//

வலை இருப்பதனால் அதன் தாக்கம் சற்று குறைவுன்னு சொல்லலாம்

sakthi said...

சூப்பர்ப் நவாஸ் அண்ணா

அபுஅஃப்ஸர் said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
//அபுஅஃப்ஸர் said...
//மெல்ல இரவு சாக,
மீண்டும்
வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி
//

புலம்ப நேரமிருந்தால் மனது பைத்தியமாகவல்லவா அலையும்//

வலை இருப்பதனால் அதன் தாக்கம் சற்று குறைவுன்னு சொல்லலாம்
//

இப்படிதான் வலை போட்டு புடிக்கிறியலோ

♫சோம்பேறி♫ said...

சுவாரஸிய வலைப்பதிவிற்கான விருதுக்கு நன்றி நவாஸ்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..

பட், தாமதத்துக்கு ரியலி வெரி ஸாரி நவாஸ்.. நான் சென்னைல இருந்ததால நீங்கள் விருது கொடுத்த விஷயம் தெரியாம போயிடுச்சு.

என் பேருக்கான அர்த்தத்தைப் புரிஞ்சுகிட்டு, சந்தனமுல்லை விருது கொடுத்த விஷயத்தை பின்னூட்டி இருந்ததால, வந்ததும் அவசரமா ஒரு பதிவு போட்டு அவங்களுக்கு மட்டும் நன்றி சொல்லிருந்தேன்.

இப்போ அந்த இடுகையில உங்க பேரையும் அப்டேட் பண்ணிட்டேன். பை த வே, கவிதை நல்லா இருக்கு.

வெரி வெரி ஸாரி அகெய்ன்..

பிரியமுடன்.........வசந்த் said...

நவாஸ் ராயல் சல்யூட்.......

கவிதையில் நிதர்சன உண்மையை அழக எழுதி வடிவம் தந்துட்டீங்க......

syed said...

சூப்பரு இது ரொம்ப சூப்பரு

rose said...

ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்,
\\
ஆரம்பமே அசத்தல் தலைவா

rose said...

காலை வெயில் கடப்பது போலவே
எங்களின் எல்லா பண்டிகையும்,
மழை நீரும் நதி நீரும்
பிரித்தறியத் தெரியாத
உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள்
\\
அழகிய வரிகள்

rose said...

புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து

\\
உங்களுக்காக உங்களையே நம்பி வந்த ஜீவனுக்காக உழைப்பதை நினைத்து ஹேப்பியா இருங்க தலைவா

rose said...

எங்களின் ஆறுதலாய்
விரல் பிடித்து நடப்பது
உங்களின் நினைவுகள் தான்.
\\
ரசித்த வரிகள்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//காலை வெயில் கடப்பது போலவே
எங்களின் எல்லா பண்டிகையும்,
/

சிலபேருக்கு வெயிலே தெரியாதப்பூ, அவர்கள் பண்டிகைகளும் நான்கு சுவற்றிர்குள் ஏஸிக்காற்றினூடே அடங்கிப்போகும்

\\
அட நீங்க உங்களை சொல்லுறீங்களா அபு

rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
//புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து//

எப்பா நவாஸ், எங்கிருந்துய்யா கண்டுபிடிச்சீங்க‌ இந்த வார்த்தைகளை!!
\\
எல்லாம் அனுபவம் கற்று தரும் பாடம்தான்

rose said...

பல லட்சம் மனிதர்களின் வேதனையை அற்புதமாய் சொல்லிருக்கிங்க தலைவா

நட்புடன் ஜமால் said...

டேய் மாப்ள கலக்கிட்ட.

விடை தெரிந்தும் புதிராய் ...

[[ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்]]

அருமை
-------------------

[[உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள் ]]

வேதனையின் வார்த்தைகள்

----------------------------

நட்புடன் ஜமால் said...

புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து ]]

அனுபவ வலிகள்.

நட்புடன் ஜமால் said...

நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில் ]]


பின்னிட்ட மாப்ள

நட்புடன் ஜமால் said...

வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி ]]

நிதர்சணம் மச்சான்.

Anonymous said...

இனம் புரியாத வலி விரல்கள் மறுக்கிறது இந்த கவிதை வீணையை சுருதி சேர்த்து மீட்ட....கருத்திடும் போது கண்ணீர் திரை..... நாங்களும் இருக்கிறோம் வருந்தாதீர்கள்....

இங்கு உறவுகளுடன் வாழும் நாங்கள் கூட உள்ளம் நிறைந்து வாழ்வதில்லை...

Anonymous said...

பேசும் போது உங்கள் வார்த்தையில் பிரதிபலிக்காத இந்த வலி இங்கு கவிதையாய் பிரசவித்திருக்கிறது...

அ.மு.செய்யது said...

//புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.//

பிரிவின் வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே இப்படி எழுத முடியும்.

//சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில்
//

கிளாஸ்..உருவகம்...........சான்ஸே இல்ல...

அ.மு.செய்யது said...

சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் பெஸ்ட் இதுவாகத் தானிருக்கும்.

உணர்வின் வலியோடு எழுதப்படும் எந்த ஒரு ஆக்கமும் அதன் கனத்தை இயல்பாகவே
பெற்று விடுகிறது.

அபு கூறியது போல, ஒளித்து வைக்கப்பட்டிருந்த திறமைகள் இப்போது உங்களை உடைத்து வெளி வரத்துவங்கியிருக்கின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!!!!!

விடை தெரிந்த புதிர் இனி காலத்துக்கும் நினைவிருக்கும்.

பாலா said...

நான் எதிர்பார்த்த விட அருமைங்கோ
புழிஞ்சு குடுத்துடீங்க நவாஸ்
ரசிச்சாசு , குடிச்சாச்சு

அதுலையும் இந்த வரி

நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில்

இந்த கவிதையோட ஆதார சுருதி

அருமை அருமை

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

மச்சான் பின்னிட்டே

எங்கேப்பா அடக்கிவெச்சிருந்தே இதையெல்லாம்

வா மச்சான். பாலா தந்த ஊக்கம்தான் காரணம். தங்கை சக்தி வலைச்சர ஆசிரியரா இருந்தப்பவே என்னை எழுத சொன்னதும் நினைவில இருந்துகிட்டே இருந்துச்சு. இதோ இப்போ முதல் அடி வச்சிருக்கேன்.

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ் said...

சோகத்தின் மொத்த உருவத்தையும் ஒவ்வொரு பரிமாணத்தில் சொல்லி இருக்ககீங்க‌

வாங்க ஷ‌ஃபி. நிதர்சனம் எதுகை மோனையோடு எதிரே நிற்கிறது. அதுல கொஞ்சம்.

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்./

ஃபிளைட் ஏறும்போது இந்த வருத்தங்களும், பிரிவுத்துயரும் வருவதில்லையே ஏன்

வாழ்க்கைத்தரம் உயர புறப்படுகிறோம் என்பதால் தூரம் தெரியாமல் இருந்திருக்கலாம். அதற்காக, தூரம் இல்லை என்று போகாதல்லவா

அதிரை அபூபக்கர் said...

/// மெல்ல இரவு சாக,
மீண்டும்
வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி
விடை தெரிந்த
புதிராய் நாங்கள். ///

உண்மையாய் உணர்த்தியுள்ளீர்கள்...

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ் said...

உணர்வுகள் புரிந்தது!! ஆறுதலாய் நட்புக்களான நாங்களும் இருக்கின்றோம் நன்பரே!!

ரொம்ப நன்றி ஷ‌ஃபி

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

சூப்பர்ப் நவாஸ் அண்ணா

நன்றி சக்தி. நீ வலைச்சர ஆசிரியரா இருந்தப்ப சொன்னதுக்கு இப்பதான் முதல் அடி.

S.A. நவாஸுதீன் said...

♫சோம்பேறி♫ said...

சுவாரஸிய வலைப்பதிவிற்கான விருதுக்கு நன்றி நவாஸ்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..

இப்போ அந்த இடுகையில உங்க பேரையும் அப்டேட் பண்ணிட்டேன். பை த வே, கவிதை நல்லா இருக்கு.

வெரி வெரி ஸாரி அகெய்ன்..

ஐயோ நண்பா. என்ன இது பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு. எனக்கு புரியும் தல. No Sorry again.

கவிதை பிடிச்சிருக்குன்னு சொன்னது தான் தல எனக்கு வேணும்.

S.A. நவாஸுதீன் said...

பிரியமுடன்.........வசந்த் said...

நவாஸ் ராயல் சல்யூட்.......

கவிதையில் நிதர்சன உண்மையை அழக எழுதி வடிவம் தந்துட்டீங்க......

ரொம்ப நன்றி வசந்த். சந்தோசமா இருக்கு.

S.A. நவாஸுதீன் said...

syed said...

சூப்பரு இது ரொம்ப சூப்பரு

தேங்க்ஸ் மச்சான்.

S.A. நவாஸுதீன் said...

rose said...

ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்,
\\
ஆரம்பமே அசத்தல் தலைவா

வாங்க ரோஸ். ரொம்ப தேங்க்ஸ்

S.A. நவாஸுதீன் said...

rose said...

புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து

\\
உங்களுக்காக உங்களையே நம்பி வந்த ஜீவனுக்காக உழைப்பதை நினைத்து ஹேப்பியா இருங்க தலைவா

கண்டிப்பாக ரோஸ்

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

டேய் மாப்ள கலக்கிட்ட.

விடை தெரிந்தும் புதிராய் ...

[[ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்]]

அருமை
-------------------

[[உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள் ]]

வேதனையின் வார்த்தைகள்

----------------------------

ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ள.

தேவன் மாயம் said...

ரொம்ப அருமை!!

தேவன் மாயம் said...

ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய் ///

ஆகா! என்ன வரிகள்!!

தேவன் மாயம் said...

நானே 50 !!

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

அனுபவ வலிகள்.

பின்னிட்ட மாப்ள

நிதர்சணம் மச்சான்.

ரொம்ப ரசிச்சிருக்கே மாப்ள, தேங்க்ஸ்டா

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

இனம் புரியாத வலி விரல்கள் மறுக்கிறது இந்த கவிதை வீணையை சுருதி சேர்த்து மீட்ட....கருத்திடும் போது கண்ணீர் திரை..... நாங்களும் இருக்கிறோம் வருந்தாதீர்கள்....

இங்கு உறவுகளுடன் வாழும் நாங்கள் கூட உள்ளம் நிறைந்து வாழ்வதில்லை...

அதற்கும் தூரம்தான் காரணம் தமிழ், மனங்களுக்கிடையில் உள்ள தூரம்.
ரொம்ப நன்றிப்பா

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

பேசும் போது உங்கள் வார்த்தையில் பிரதிபலிக்காத இந்த வலி இங்கு கவிதையாய் பிரசவித்திருக்கிறது...

அதுவும் நிஜம்தான் தமிழ். குளிர் காய நெருப்பு வேண்டும் என்பதற்காக நெருப்பின் மேல் இருக்க முடியாதல்லவா? வலிகளை தள்ளி வழிகள் தேடுவோம்

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.//

பிரிவின் வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே இப்படி எழுத முடியும்.

//சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில்
//
கிளாஸ்..உருவகம்...........சான்ஸே இல்ல...

வாங்க செய்யது. உங்களுக்கு பிடிச்சிருக்குன்னா எனக்கு ரொம்ப சந்தோசம்.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் பெஸ்ட் இதுவாகத் தானிருக்கும்.

உணர்வின் வலியோடு எழுதப்படும் எந்த ஒரு ஆக்கமும் அதன் கனத்தை இயல்பாகவே
பெற்று விடுகிறது.

அபு கூறியது போல, ஒளித்து வைக்கப்பட்டிருந்த திறமைகள் இப்போது உங்களை உடைத்து வெளி வரத்துவங்கியிருக்கின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!!!!!

விடை தெரிந்த புதிர் இனி காலத்துக்கும் நினைவிருக்கும்.

என்ன சொல்றதுன்னு தெரியல செய்யது. ரொம்ப சந்தோசமா இருக்கு. ரொம்ப நன்றிமா

S.A. நவாஸுதீன் said...

பாலா said...

நான் எதிர்பார்த்த விட அருமைங்கோ
புழிஞ்சு குடுத்துடீங்க நவாஸ்
ரசிச்சாசு , குடிச்சாச்சு

அதுலையும் இந்த வரி

நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில்

இந்த கவிதையோட ஆதார சுருதி

அருமை அருமை

அப்பாடா. ஒரு நிம்மதிப் பெருமூச்சு இப்பதான் வந்தது.

நீங்க கொடுத்த ஊட்டம்தான் காரணம் பாலா. ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

அதிரை அபூபக்கர் said...

உண்மையாய் உணர்த்தியுள்ளீர்கள்...

வாங்க அபூபக்கர். ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

தேவன் மாயம் said...

ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய் ///

ஆகா! என்ன வரிகள்!!
ரொம்ப அருமை!!

வாங்க தேவா சார், ரொம்ப நன்றி

ஹேமா said...

நவாஸ்,அருமையான கவிதை.
ஒவ்வொரு வரிகளிலும் மனதின் ஏக்கம்.நீங்கள் எதை நினைத்து எழுதுனீர்களோ என் மனக்கருவில் தூரம்-பிரிவு என்று வேதனையாகவே இருக்கிறது.இது தீராத கேள்விகளும் பதில்களுமாகவே.வாழ்த்துக்கள்.

கீழே"கவுஜ"என்பதை மாத்திடுங்க.
அருமையான மனதின் வலியோடான"கவிதை" இது.

S.A. நவாஸுதீன் said...

வாங்க ஹேமா. வாழ்வாதாரம் தேடி உறவுகளைப் பிரிந்து கிடக்கும் எங்களின் வலி தான் இது.

லேபில் - கவிதைன்னு மாத்திட்டேன் ஹேமா. ரொம்ப நன்றி

reena said...

ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்,

ஆரம்பமே அழகா இருக்கு நவாஸ்

ஜீவன் said...

கவிதை அருமை!!
என்று சொல்ல தடை போடுகிறது
கவிதையில் உள்ள வலி!!

reena said...

மழை நீரும் நதி நீரும்
பிரித்தறியத் தெரியாத
உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள்

அழகான வரிகள் நவாஸ்

reena said...

நெகிழ்வான கவிதை நவாஸ்... தாங்கள் கொடுத்திருந்த சுட்டியும் அருமை

reena said...

ஜீவன் தங்கள் பதிவும் சிறப்பாக இருந்தது

ஜீவன் said...

//reena said...

ஜீவன் தங்கள் பதிவும் சிறப்பாக இருந்தது//


நன்றி! ரீனா!!

S.A. நவாஸுதீன் said...

reena said...

ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்,

ஆரம்பமே அழகா இருக்கு நவாஸ்

நெகிழ்வான கவிதை நவாஸ்... தாங்கள் கொடுத்திருந்த சுட்டியும் அருமை

வாங்க ரீனா. ரொம்ப நன்றி.

" உழவன் " " Uzhavan " said...

/நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில் //
 
சொல்லிய விதம் மிக அருமை.

S.A. நவாஸுதீன் said...

" உழவன் " " Uzhavan " said...

/நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில் //

சொல்லிய விதம் மிக அருமை.

வாங்க உழவன். ரொம்ப நன்றி

sarathy said...

// நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில் //

நான் ரொம்ப லேட்டு...


உப்புக் கண்ணீரில் கடலாய்...
சாரதி கண்ணிரிலும்...

S.A. நவாஸுதீன் said...

sarathy said...

நான் ரொம்ப லேட்டு...

உப்புக் கண்ணீரில் கடலாய்...
சாரதி கண்ணிரிலும்..

வாங்க சாரதி. லீவ் முடிஞ்சுதா இல்லையா

ஷ‌ஃபிக்ஸ் said...

விகடனில் வந்திருக்கு..வாழ்த்துக்கள் நவாஸ்!!

அன்புடன் மலிக்கா said...

நவாஸண்ணா;
கஷ்டங்டங்களைகூட கவிதைகளில் கண்கூடக காட்டமுடியும் என்பதை கனக்கும் வரிகளோடும்
கண்ணீரின் வலிகளோடும்
தந்திருக்கிறீர்கள்..

காலம் கடந்தபோதும் நாம்பட்ட கஷ்டங்களின் வடுகளாய் இக்கவிதை வாழும்..

S.A. நவாஸுதீன் said...

//அன்புடன் மலிக்கா said...
நவாஸண்ணா;
கஷ்டங்டங்களைகூட கவிதைகளில் கண்கூடக காட்டமுடியும் என்பதை கனக்கும் வரிகளோடும்
கண்ணீரின் வலிகளோடும்
தந்திருக்கிறீர்கள்..

காலம் கடந்தபோதும் நாம்பட்ட கஷ்டங்களின் வடுகளாய் இக்கவிதை வாழும்..//

எனது முதல் கவிதை இது (மொத்தமே நாலுதான் எழுதி இருக்கேன்). ரொம்ப நன்றிமா.