Lilypie

Thursday, June 11, 2009

ஏதோ உங்ககிட்ட சொல்லனும்னு தோணிச்சு

வழக்கம்போல் மனசில்லாமல் எழுந்து, தயாராகி அலுவலகம் செல்ல காரில் அமரும்போதே மனதில் ஏதோ ஒரு குழப்பம். இரவு கண்ட கனவின் பாதிப்பு. என்ன கனவு என்பது அறவே நினைவில் இல்லை. ஆனால் அதனுடைய பாதிப்பை மனதளவில் உணர முடிந்தது.

நேற்று இரவு உறங்கப்போகும் வரை மனதில் எந்த குழப்பமும் இல்லை. மாறாக உறங்கும்முன் என் மகளிடம் பேசியதும், அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதையும் நினைத்து (வாப்பா, தம்பிக்குத்தான் சிலேட்டுல எழுதவே தெரியலையே அப்புறம் ஏன் உம்மா அவனை ஸ்கூலுக்கு அனுப்புது?) புன்முருவலோடுதான் உறங்கப்போனேன்.

விழித்த பிறகு தான் இந்த மனநிலை. அறையில் எதையோ தவற விட்டதைப்போல. மொபைல், பர்ஸ், அதன் உள்ளே அடையாள அட்டை, எல்லாம் சரிபார்த்தேன். சரியாக இருக்கிறது. வேறு என்னவாக இருக்கும், சட்டென்று நினைவில் வராததால் மீண்டும் மாடியேறிச் செல்ல எரிச்சலாக இருந்ததாலும் டிரைவரை வண்டியை எடுக்கச் சொன்னேன்.

நான்கு சிக்னல் தான் கடக்கவேண்டும். காலை நேரத்தில் அதிகம் டிராபிக் இருப்பதால் அலுவலகத்தை அடைய இருபது நிமிடங்கள் எடுக்கும். முதல் சிக்னலில் வண்டியை நிறுத்தியபோது என் கண்கள் அந்த சிறுவனைத் தேடின. இன்று அவனைக் காணவில்லை.

அவன், ஏதோ ஒரு ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவன் என்பது அவனைப் பார்த்தாலே தெரியும். நல்ல கருத்த நிறத்தில், மிகவும் மெலிந்த தேகத்துடன் அதிக அழுக்குடன் இருப்பான். இரண்டு கைகளும் அவனுக்கு முழங்கை வரை மட்டும்தான். கழுத்தில் மாட்டிய பிளாஸ்டிக் பை, அதில் கொஞ்சம் ஒரு ரியால் நோட்டுக்கள், எப்போதும் முகத்தில் ஒரு சோகம். கொளுத்தும் வெயிலில், சிக்னலில் வண்டிகள் நிற்கும்போது கார் கண்ணாடியை தட்டி காசு கேட்க்கும் அவனை இன்று காணவில்லை. சட்டைப் பாக்கெட்டில் அவனுக்காக எடுத்து வைத்த ரியாலுக்கு இன்று வேலையில்லை. என்னுடைய குஜராத்தி டிரைவரிடம் நான் "எங்க அலிபாய் இன்னைக்கு பையனைக் காணோம்?' என்றேன். "ஒருவேளை இங்கு கலெக்சன் கம்மியா இருந்திருக்கும், வேறு எங்காவது கொண்டுபோய் விட்டிருப்பார்கள்" ரொம்ப சாதரணமாக சொன்னார்.

என்ன பாய் சொல்றீங்க, விட்டுருப்பாங்களா? அப்படின்னா? அப்போது தான் அவர் எனக்கு விளக்கினார். இது ஒரு பெரிய நெட்வொர்க் என்றும், தினமும் இது போன்ற சிறுவர்களை ஒவ்வொரு சிக்னலிலும் காலையில் இறக்கி விடுவதும், மாலையில் அவர்களை வந்து அழைத்துச் செல்வதும் வழமை என்றார். அவர் பலமுறை அதை தானே பார்த்ததாகவும் சொன்னார். அந்த சிறுவனின் உருவம் என் கண் முன்னே வந்து சென்றது. அவன் பிறக்கும் வரை அவள் தாய் அவனை வயிற்றில் சுமந்தபடி என்னென்ன அவஸ்தைகள் அடைந்திருப்பாள். அவளுக்கு இப்போது தெரியுமோ தெரியாதோ அல்லது அவளும் இதில் உடந்தையா, அவனது கைகள் இரண்டும் இயற்கையிலேயே அப்படித்தானா அல்லது நினைக்கவே பயமாக இருந்தது.

ஏற்கனவே உள்ள குழப்பம் போதாதென்று இன்று இதுவேறு என்னைக் குடையத் துவங்கியது.

46 comments:

gayathri said...

me they 1 st anna

konjam vela iruku naan apparam padikiren anna

நட்புடன் ஜமால் said...

என்னப்பு சொல்ல தோணிச்சு

நட்புடன் ஜமால் said...

அகோரிகளா!

நட்புடன் ஜமால் said...

இந்த கொடும அங்குட்டு உண்டா!

உங்கள் தோழி said...

கண் கலங்கிடிச்சு அண்ணா..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..

//அவனது கைகள் இரண்டும் இயற்கையிலேயே அப்படித்தானா அல்லது நினைக்கவே பயமாக இருந்தது.//

நிஜமாவே பயமா தான் இருக்கு அண்ணா ..குழந்தைங்க அழுதாலே கஷ்டமா இருக்கும் அப்பிடி இருக்க அவங்கள காய படுத்த எப்பிடி தான் முடியுதோ?

gayathri said...

ada intha mathiri kodumaiellam unmayave nadakkutha

அ.மு.செய்யது said...

குறுகிய பதிவில் மனதை பிழிந்த எழுத்துக்கள்.

இந்த கொடுமைகள் அரேபிய நாடுகளிலும் இருக்கிறதா என்ன ??

அதுவும் சவுதி போன்ற‌ செழிப்பான‌ நாடுக‌ளில் கூட‌வா ??

அதிர்ச்சி த‌ர‌க்கூடிய‌ செய்தி.

பாலா said...

nalla nadai athe samayam

visayamum azhuththam

rasiththen + valiyai unarnthen

இராகவன் நைஜிரியா said...

வேதனை மனதைத் தொற்றிக் கொண்டது. சிறு குழந்தைகளை வைத்து இதை ஒரு வியாபாரமே செய்கின்றார்கள்.

கொடுமையடா சாமி...

புதியவன் said...

மனதை கனக்கச் செய்த பதிவு நவாஸுதீன்,
அரபு நாடுகளில் இது போன்ற கொடுமைகள்
இல்லை என்று நினைந்த்திருந்தேன்.

இந்த மாதிரி அவல நிலைகள் கண்டறியப்பட்டு களையெடுக்கப் படவேண்டும்...

Anonymous said...

அவலங்கள் அவலங்கள் அவலங்கள்... என் செய்ய தீர்வு தெரியலை....கழிவிரக்கம் இல்லாத களவானிகள்....ஒன்று கூடினால் ஒளி வட்டம் தெரியும் கூடுவோமா?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைந்து விட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

rose said...

இந்த சிறுவர்களுக்காகவும் இதுபோல் சம்பவம் இனி அறவே நடைபெறாமல் இறுக்கவும் நாம் இறைவனிடம் துவா செய்வோம்.

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

me they 1 st anna

konjam vela iruku naan apparam padikiren anna

வேலையெல்லாம் முடிச்சிட்டு மெதுவா வா காயு

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

என்னப்பு சொல்ல தோணிச்சு

அகோரிகளா!

இந்த கொடும அங்குட்டு உண்டா!

இருக்குது மாப்ள.

S.A. நவாஸுதீன் said...

உங்கள் தோழி said...

கண் கலங்கிடிச்சு அண்ணா..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..

நிஜமாவே பயமா தான் இருக்கு அண்ணா ..குழந்தைங்க அழுதாலே கஷ்டமா இருக்கும் அப்பிடி இருக்க அவங்கள காய படுத்த எப்பிடி தான் முடியுதோ?

கடினமான (தேவையான) சட்டதிட்டம் நிறைந்த இந்த ஊரிலும் (சவுதி அரேபியா) இப்படி நடக்கிறது என்பதை அறியும்போது தான் மனது ரொம்ப வேதனைப் படுகிறது சகோதரி

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

ada intha mathiri kodumaiellam unmayave nadakkutha

ஆமா காயு.

சில இடங்களில் பெண்கள் பச்சிளம் குழந்தைகளை முதுகில் கட்டிக் கொண்டு கொடும் வெயிலில் கையேந்தி நிற்பதைப் பார்த்தால் அவர்கள் மேல் இறக்கப்படுவதா இல்லை பிஞ்சுக் குழந்தையை அடுத்தவர்கள் இறக்கப்படவேண்டும் என்பதற்காக கொடுமைப் படுத்துகிறார்கள் என்று கோபப்படுவதா தெரியவில்லை

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

குறுகிய பதிவில் மனதை பிழிந்த எழுத்துக்கள்.

இந்த கொடுமைகள் அரேபிய நாடுகளிலும் இருக்கிறதா என்ன ??

அதுவும் சவுதி போன்ற‌ செழிப்பான‌ நாடுக‌ளில் கூட‌வா ??

அதிர்ச்சி த‌ர‌க்கூடிய‌ செய்தி.

இஸ்லாமிய சட்டதிட்டம் நிறைந்த இந்த ஊரிலும் (சவுதி அரேபியா) இப்படியும் ஒரு கூட்டம் இருக்கிறதுதான் கொடுமை.

S.A. நவாஸுதீன் said...

பாலா said...

nalla nadai athe samayam

visayamum azhuththam

rasiththen + valiyai unarnthen

வாங்க பாலா

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...

வேதனை மனதைத் தொற்றிக் கொண்டது. சிறு குழந்தைகளை வைத்து இதை ஒரு வியாபாரமே செய்கின்றார்கள்.

கொடுமையடா சாமி...

ஆமாண்ணே. அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்தும் இதுபோன்ற கொடியவர்கள் மீண்டும் முளைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

மனதை கனக்கச் செய்த பதிவு நவாஸுதீன்,
அரபு நாடுகளில் இது போன்ற கொடுமைகள்
இல்லை என்று நினைந்த்திருந்தேன்.

இந்த மாதிரி அவல நிலைகள் கண்டறியப்பட்டு களையெடுக்கப் படவேண்டும்...

அதுமட்டுமன்றி போதை மருந்து போன்ற குற்றங்களுக்கு தலையே போகும் என்று அறிந்தும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

அவலங்கள் அவலங்கள் அவலங்கள்... என் செய்ய தீர்வு தெரியலை....கழிவிரக்கம் இல்லாத களவானிகள்....ஒன்று கூடினால் ஒளி வட்டம் தெரியும் கூடுவோமா?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைந்து விட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

என்ன சொல்றதுன்னே தெரியலை தமிழ். பிச்சை எடுப்பதே குற்றம் என்ற இந்த ஊர்லயும் இதுபோன்ற கயவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

S.A. நவாஸுதீன் said...

rose said...

இந்த சிறுவர்களுக்காகவும் இதுபோல் சம்பவம் இனி அறவே நடைபெறாமல் இறுக்கவும் நாம் இறைவனிடம் துவா செய்வோம்.

நிச்சயமாக ரோஸ்.

SUFFIX said...

//இது ஒரு பெரிய நெட்வொர்க் என்றும், தினமும் இது போன்ற சிறுவர்களை ஒவ்வொரு சிக்னலிலும் காலையில் இறக்கி விடுவதும், மாலையில் அவர்களை வந்து அழைத்துச் செல்வதும் வழமை என்றார்//

ஆமாம் இது ஒரு கொடுமையான, கொடுரமான ஒரு வியாபாரம், இவர்களுக்கு ஒவ்வொரு நாளைக்கும் இத்தனை ரியால்கள் சம்பாதித்தே ஆக வேன்டும் என டார்கெட் இருக்குமாம், அப்படி இந்த சிறார்கள் அவ்வளவு கொன்டு வரவில்லை என்றால், அவர்களுடைய கொடூரமான பாஸ் சித்ரவதை செய்வானாம். இவர்களுக்கு நாம் உதவி செய்தாலும், அந்த காசு இவர்களுக்கு உதவப்போவது இல்லை, ஆனால் இந்த சிறுவனை சித்ரவதையிலிருந்து தப்பிக்க உதவும். இது போன்ற சில சிறார்களை கானும்போது நான் பலமுறை கன்கலங்கியது உண்டு, இறைவா நீ தான் நல்ல வழியை காட்ட வேண்டும்.

Unknown said...

அதிர்ச்சி த‌ர‌க்கூடிய‌ செய்தி.
இவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்

VISA said...

touchin one :)

scharu said...

atharchiya erukkunga angaiuma?
iraivan than nalla vali kaatanum ellorukum

S.A. நவாஸுதீன் said...

"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் said...

சரியாச் சொன்னீங்க ஷ‌ஃபி. எல்லாம் வல்ல இறைவன் தான் இவர்களைக் காக்கவேண்டும்

S.A. நவாஸுதீன் said...

syed said...

அதிர்ச்சி த‌ர‌க்கூடிய‌ செய்தி.
இவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்

சரியா சொன்னே மச்சான்

S.A. நவாஸுதீன் said...

VISA said...

touchin one :)

நன்றி விசா

S.A. நவாஸுதீன் said...

scharu said...

atharchiya erukkunga angaiuma?
iraivan than nalla vali kaatanum ellorukum

வாங்க ச.சாரு. இந்த அநியாயம் எல்லா இடத்துலயும் இருக்குங்க. இறைவன் தான் இவர்களைக் காக்கவேண்டும்

sakthi said...

மனதை என்னவோ செய்கின்றது நவாஸ் அண்ணா

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

மனதை என்னவோ செய்கின்றது நவாஸ் அண்ணா

எனக்கும் அதேதான் சக்தி. சட்டதிட்டங்கள் கடுமையாகப் பேணப்படும் இந்நாட்டிலும் இப்படி நடக்கிறதே என்பது தான் ரொம்ப வேதனைக்குரிய விடயம்

M.Rishan Shareef said...

பதிவு மனதைக் கனக்கச் செய்தது நண்பரே !

S.A. நவாஸுதீன் said...

எம்.ரிஷான் ஷெரீப் said...

பதிவு மனதைக் கனக்கச் செய்தது நண்பரே !

வாங்க ரிஷான். இதை இங்குள்ளவர்கள் சாதரணமாக எடுத்துக்கொள்ளும்போது மனது ரொம்பவும் வேதனிக்கிறது. இவர்கள் சிக்னலில் நிற்கும்போது எத்தனை அரசு அதிகாரிகளும், காவலர்களும் இதுபோன்றவர்களைக் கண்டும் கடந்தவன்னம் சென்றிருப்பார்கள். இருந்தும் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அதைவிட வேதனைக்குரிய விஷயம்.

Jaleela Kamal said...

இது நிறைய இடத்தில் நடக்குது.

இந்த கொடுமை எல்லா இடத்திலும் உண்டு,
இத மாதிரி பார்க்கும் பிள்ளைகளுக்கு காசு கொடுக்காமல் ஏதாவது சாப்பிட வாங்கி கொடுக்கலாம்.

Jaleela Kamal said...

இது சவுதியில் மக்காவில் தான் அதிகம் நாம் போகும் ஒவ்வொரு இடத்திலும் இதை பார்த்தேன். ரொம்ப கழ்டமா இருந்து சாப்பிடும் சாப்பாடு கூட உள்ள போகாது.
இதேல்லாம் ஹஜ் உம்ரா செய்ய வந்தவர்கள் தவற விட்ட குழந்தைகள் என்று கேள்வி பட்டேன்.

Jaleela Kamal said...

அங்கு பிச்சை எடுக்கும் பிள்ளைக‌ள் அந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் இல்லை.
இங்கு த‌வ‌ற‌விட்டு செல்லும் பிள்ளைக‌ளாம்.
எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் அவருடன் வேலை பார்ப்பவர்.

ஒரு முறை ஹ‌ஜ் போன‌ போது கூட்ட‌த்தில் தொலைத்து விட்டு அவ‌ர்க‌ள் எங்கு தேடியும் கிடைக்காம‌ல். நாடு திரும்பி விட்டார்க‌ள்.

இத‌ற்காக‌வே அவ‌ர்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் ஹ‌ஜ் சென்று தேடினார்க‌ளாம்.

க‌டைசியில் ஐந்தாவ‌து வ‌ருட‌ம் அந்த‌ விட்டு சென்ற‌ பிள்ளையை க‌ண்டெடுத்தார்க‌ள் அய்யோ என்னால் சொல்ல‌ முடிய‌லையே இந்த‌ கொடுமையை, கை துண்டிக்க‌ ப‌ட்டு ந‌ல்ல‌ அழ‌காக‌ இருந்த‌ பிளளை ரோட்டில் போட்டு பிச்சை எடுக்க‌ விட்ட‌தால் க‌ருத்து அந்த‌ க‌ருபின‌ ஆட்க‌ள் போல‌ வே ஆகிவிட்ட‌தாம், எப்ப‌டியே வாத‌டி அந்த‌ க‌வர்ன்மென்ட்டில்
போய் வாதாடி பிள்ளை மீட்டு வ‌ந்த்தார்க‌ளாம்..

யார் ஹஜ் உம்ரா சென்றாலும் பத்து முறை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்புங்கள்.
குழந்தைகளை உஷாரா பிடிக்கும் படி சொல்லி அனுப்புங்கள்.

♫சோம்பேறி♫ said...

அடப் பாவமே! நான் கடவுள், ஸ்லம்டாக் மில்லியனர் பாக்கும்போது கூட இது கற்பனைனு தான் நினைச்சேன்..

ரொம்ப கஷ்டமா இருக்கு நவாஸ் :-(

S.A. நவாஸுதீன் said...

Jaleela said...

இது சவுதியில் மக்காவில் தான் அதிகம் நாம் போகும் ஒவ்வொரு இடத்திலும் இதை பார்த்தேன். ரொம்ப கழ்டமா இருந்து சாப்பிடும் சாப்பாடு கூட உள்ள போகாது.

இதேல்லாம் ஹஜ் உம்ரா செய்ய வந்தவர்கள் தவற விட்ட குழந்தைகள் என்று கேள்வி பட்டேன்.

வாங்க சகோதரி. நீங்கள் கேள்விப்பட்டதும் ஓரளவுக்கு உண்மைதான்

S.A. நவாஸுதீன் said...

Jaleela said...

அங்கு பிச்சை எடுக்கும் பிள்ளைக‌ள் அந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் இல்லை.
இங்கு த‌வ‌ற‌விட்டு செல்லும் பிள்ளைக‌ளாம்.
எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் அவருடன் வேலை பார்ப்பவர்.

ஒரு முறை ஹ‌ஜ் போன‌ போது கூட்ட‌த்தில் தொலைத்து விட்டு அவ‌ர்க‌ள் எங்கு தேடியும் கிடைக்காம‌ல். நாடு திரும்பி விட்டார்க‌ள்.

இத‌ற்காக‌வே அவ‌ர்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் ஹ‌ஜ் சென்று தேடினார்க‌ளாம்.

க‌டைசியில் ஐந்தாவ‌து வ‌ருட‌ம் அந்த‌ விட்டு சென்ற‌ பிள்ளையை க‌ண்டெடுத்தார்க‌ள் அய்யோ என்னால் சொல்ல‌ முடிய‌லையே இந்த‌ கொடுமையை, கை துண்டிக்க‌ ப‌ட்டு ந‌ல்ல‌ அழ‌காக‌ இருந்த‌ பிளளை ரோட்டில் போட்டு பிச்சை எடுக்க‌ விட்ட‌தால் க‌ருத்து அந்த‌ க‌ருபின‌ ஆட்க‌ள் போல‌ வே ஆகிவிட்ட‌தாம், எப்ப‌டியே வாத‌டி அந்த‌ க‌வர்ன்மென்ட்டில்
போய் வாதாடி பிள்ளை மீட்டு வ‌ந்த்தார்க‌ளாம்..

அடப்பாவமே. என்ன கொடுமைங்க. அல்லாஹ்தான் நம் அனைவரையும் காக்கவேண்டும்

S.A. நவாஸுதீன் said...

♫சோம்பேறி♫ said...

அடப் பாவமே! நான் கடவுள், ஸ்லம்டாக் மில்லியனர் பாக்கும்போது கூட இது கற்பனைனு தான் நினைச்சேன்..

ரொம்ப கஷ்டமா இருக்கு நவாஸ் :-(

வாங்க தல. ஜீரணிக்கமுடியாத குற்றங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எத்தனை கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பலனின்றி மனிதாபிமானம் செத்துக்கொண்டுதான் இருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

எல்லா நாட்டுலயும் இந்தக் கொடுமை இருக்கோ? அங்கயும் நம்மள மாதிரி மனுசங்கதான இருக்காங்க. அதான் இப்படி.

sarathy said...

நன்றி நவாஸ்...

எல்லாவற்றுக்கும்...

என் கடினமான நேரங்களில் எனக்கு தோள் கொடுத்த உங்கள் தோழமைக்கு...

Menaga Sathia said...

ரொம்ப கொடுமை.படிக்கும் போதே மனம் கலங்கிவிட்டது.எல்லா நாட்டிலயும் இப்படி நடக்குது..

Anisha Yunus said...

மக்காவிலேயே இப்படின்னா.....சுப்ஹானல்லாஹ்...

இராஜராஜேஸ்வரி said...

அதிர்ச்சி த‌ர‌க்கூடிய‌ செய்தி.