Lilypie

Sunday, May 17, 2009

தைரியம்

தேசியக்கல்லூரி.

மாணவர்கள் சிலர் வகுப்பறைக்கும் பலர் கேன்டீனுக்கும் சென்றுகொண்டிருந்த நேரம். அதிகாலைப் பெய்த கனத்த மழையின் மிச்சங்களாய் இன்னமும் காற்று சில்லென்று இருந்தது.

ரமேஷும் பாலாவும் கேண்டீனை விட்டு வெளியில் வந்தனர். "சொன்னதெல்லாம் புரிஞ்சுதுல்ல, சொதப்பாம பேசு மச்சான்" என்றான் பாலா. "டேய், வேணாம் மச்சான். பயமா இருக்குடா". கலவரத்தோடு சொன்னான் ரமேஷ். "ஒன்னும் கவலைப்படாதே. தைரியமா போடா. நீ எதுவும் பண்ண வேணாம். ஒரு அஞ்சு நிமிஷம் ரியா கிட்ட பேசு. போதும்" இது பாலா.

"இல்லடா, ரொம்ப கஷ்டம்டா. என்னால முடியும்னு எனக்கு தோணல"". என்றவாறே கைக்குட்டையால் முகம் துடைத்தான் ரமேஷ்.

ரமேஷும் பாலாவும் தொடக்கப்பள்ளி முதல் ஒன்றாக பயின்று வருபவர்கள். பள்ளியில் தோழர்களாய், +2-வில் நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள், கல்லூரி சென்றதும் உற்ற நண்பர்களாய் ஆனார்கள். எவருக்காகவும், எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காதவர்கள்.

"மச்சான், இங்கே பார், நான் உன்னை அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லவில்லை. ஒரு அஞ்சு நிமிஷம் பேசு, அது போதும். எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால முடியும். போ. உன்ன ஒன்னும் கடிச்சு தின்னப் போறதில்ல அவள்". பாலா அவனை உற்சாகப்படுத்தினான்.

"மச்சான், ஒருவேளை அவள்" என்று ரமேஷ் இழுக்க, "ஒன்னும் இல்ல, ரெண்டும் இல்ல. ஜஸ்ட் போயி பேசு." என்று பாலா சொல்ல, ஒரு வழியாக ரியாவை நோக்கி தயங்கி தயங்கி நடக்கத் தொடங்கினான். அவள் அருகில் சென்றதும் பாலாவைத் மீண்டும் ஒருமுறைத் திரும்பிப் பார்த்தான். அவன் "தைரியமா போடா" என்று காற்றில் சைகை செய்தான். பாலாவும் ரமேஷின் பயத்தை பார்த்து லேசாக கொஞ்சம் கலங்கத்தான் செய்தான்.

கேன்டீனின் எதிரே இருந்த சிமெண்ட் பெஞ்சில் ரியா அமர்ந்து இருந்தாள். தன்னுடைய கைப்பையில் எதையோ தேடி அது இருப்பது கண்டதும் திருப்தி அடைந்து முகம் மலர, ரமேஷ் அவள் முன்னே சென்று நின்றான்.

ரியா, மொத்த கல்லூரியே அவள் பின்னால் சுற்றும் அளவிற்கு பேரழகி இல்லையென்றாலும், அவள் வகுப்பில் அவள்தான் கூடுதல் மதிப்பெண் பெற்றவள், மதிப்பிட்டவர்கள் மாணவர்கள் என்று சொல்லத் தேவையில்லை. எல்லோரோடும் இனிமையாகப் பேசுவாள்.

ரமேஷ் அவள் அருகில் சென்றதும், இருவரும் பேசிக்கொண்டதும், முதலில் அவள் முகத்தில் ஏற்பட்ட கலவரம், பின்னர் இருவரும் சாதரணமாகப் பேசிக்கொண்டது அனைத்தையும் தூரத்தில் இருந்து பாலா பார்த்துக்கொண்டிருந்தான். "என்ன பாலா கிளாசுக்கு போகல?" H.O.D. கேட்டுக்கொண்டே அவனைக்கடந்து போனபோது காதில் விழுந்தாலும் கவனம் இல்லை. அவனது கவனம் எல்லாம் செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பரபரப்பான பதினைந்து நிமிடங்கள். அதோ சிரித்துக்கொண்டே இருவரும் எழுந்து விட்டனர். இருவரும் விடைபெற்று ரமேஷ் பாலாவை நோக்கி வந்தான். பாலாவால் இருப்பு கொள்ள முடியவில்லை. என்னடா ஓகேயா? என்று கேட்டுக் கொண்டே அவனை சந்தோஷத்தில் கட்டிப் பிடித்தான். சொல்லு மச்சான். என்ன ஆச்சு?.

நான் அவகிட்டே சொல்லிட்டேன் மச்சான். திடீர்னு சொன்னதும் முதல்ல கொஞ்சம் மிரண்டா. அப்புறம் முகம் வெக்கத்துல சிவக்க ஆரம்பிச்சது. அவளுக்குள்ளும் காதல் இருக்குடா. ஆனால் ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லிட்டா மச்சான்.

என்னடா சொன்னாள்?

தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லுன்னு வெக்கப்பட்டுகிட்டே சொன்னாடா. இப்போ தைரியமா போய் சொல்லு மச்சான் என்றான் ரமேஷ் பாலாவிடம்.

69 comments:

நட்புடன் ஜமால் said...

கதையா

கதை மாதிரியாப்பா

S.A. நவாஸுதீன் said...

மாதிரிதான் மாப்ள

அ.மு.செய்யது said...

ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை...

இது போன்ற அனுபவங்கள் நிறைய கைவசம் இருக்கு போல..

அதான் ப்ளோ நல்லா வந்திருக்குனு நினைக்கிறேன்.

rose said...

சொன்னதெல்லாம் புரிஞ்சுதுல்ல, சொதப்பாம பேசு மச்சான்" என்றான்
\\
அட உங்கள சொல்லுறிங்களா........

rose said...

"ஒன்னும் கவலைப்படாதே. தைரியமா போடா
\\
ஆமா ஆமா

rose said...

எவருக்காகவும், எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காதவர்கள்.
\\
அப்படிபோடு

rose said...

தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லுன்னு வெக்கப்பட்டுகிட்டே சொன்னாடா. இப்போ தைரியமா போய் சொல்லு மச்சான் என்றான் ரமேஷ் பாலாவிடம்.
\\
சூப்பர் தலைவா.சிரித்த வரிகள்

rose said...

கதைலாம் எழுதுறீங்க keep it up

sarathy said...

// அவள் வகுப்பில் அவள்தான் கூடுதல் மதிப்பெண் பெற்றவள், மதிப்பிட்டவர்கள் மாணவர்கள் என்று சொல்லத் தேவையில்லை //

3 வது தடவையா படிக்கும்போதுதான்
எனக்கு மேல உள்ளது விளங்கிச்சு நவாஸ்...

நட்புடன் ஜமால் said...

காதல்ல ‘காலிங்' மட்டும் கூடாது மச்சான் ...

SUFFIX said...

உலகத்தில் இப்படியும் சில ரமேஷ்கள் (ரொம்ப அப்பாவியா இருப்பாரோ?)

அப்துல்மாலிக் said...

அது எப்படிப்பா வித்தியாசமான ரசனை உனக்கு

ரசிச்சேன் மொத்த கதையையும்

cute baby said...

ஆஹா! கதை சூப்பரா இருக்குங்க நல்லா ரசித்தேன்

அப்துல்மாலிக் said...

//அதிகாலைப் பெய்த கனத்த மழையின் மிச்சங்களாய் இன்னமும் காற்று சில்லென்று இருந்தது//

காலைப்பொழுதை வர்ணித்த விதம் அருமை

அப்துல்மாலிக் said...

//இல்லடா, ரொம்ப கஷ்டம்டா. என்னால முடியும்னு எனக்கு தோணல"". என்றவாறே கைக்குட்டையால் முகம் துடைத்தான் ரமேஷ்/

வேர்த்து விறுவிறுத்திருக்கும்...

அப்துல்மாலிக் said...

//ஒரு அஞ்சு நிமிஷம் பேசு, அது போதும். எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால முடியும். போ. உன்ன ஒன்னும் கடிச்சு தின்னப் போறதில்ல அவள்". பாலா அவனை உற்சாகப்படுத்தினான்/

இப்படி உசுப்பேத்திதான் ரணகளமாகி இருக்கு ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...

//ரியா, மொத்த கல்லூரியே அவள் பின்னால் சுற்றும் அளவிற்கு பேரழகி இல்லையென்றாலும், அவள் வகுப்பில் அவள்தான் கூடுதல் மதிப்பெண் பெற்றவள், மதிப்பிட்டவர்கள் மாணவர்கள் என்று சொல்லத் தேவையில்லை. எல்லோரோடும் இனிமையாகப் பேசுவாள்.///

தனி ஆராய்சியே நடந்திருக்குபோல‌

இதுக்கு பிராக்டிகல் மார்கெல்லாம் உண்டோ

அப்துல்மாலிக் said...

//அவனது கவனம் எல்லாம் செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

/

ம்ம் நல்ல முன்னேற்றம் தெரியுது நவாஸ் வாழ்த்துக்கள்

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
//ஒரு அஞ்சு நிமிஷம் பேசு, அது போதும். எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால முடியும். போ. உன்ன ஒன்னும் கடிச்சு தின்னப் போறதில்ல அவள்". பாலா அவனை உற்சாகப்படுத்தினான்/

இப்படி உசுப்பேத்திதான் ரணகளமாகி இருக்கு ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்

\\
கூட இருக்குரவங்களுக்கு வேர என்னாதான் வேலை

அப்துல்மாலிக் said...

//இப்போ தைரியமா போய் சொல்லு மச்சான் என்றான் ரமேஷ் பாலாவிடம்.
/
இது ட்விஸ்ட்

நல்லாயிருக்குப்பா வித்தியாசமான முடிவு

வாழ்த்துக்கள் நண்பா

அப்துல்மாலிக் said...

//rose said...
சொன்னதெல்லாம் புரிஞ்சுதுல்ல, சொதப்பாம பேசு மச்சான்" என்றான்
\\
அட உங்கள சொல்லுறிங்களா........
/

நல்லா சொதப்புனியோ

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
//அவனது கவனம் எல்லாம் செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

/

ம்ம் நல்ல முன்னேற்றம் தெரியுது நவாஸ் வாழ்த்துக்கள்
\\
ஆமா! ஆமா! நல்ல முன்னேற்றம் தான்

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
காதல்ல ‘காலிங்' மட்டும் கூடாது மச்சான் ...
/

ஹா ஹா ரிப்பீட்டோய்

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
காதல்ல ‘காலிங்' மட்டும் கூடாது மச்சான் ...
/

ஹா ஹா ரிப்பீட்டோய்

\\
அனுபவமோ

cute baby said...

25

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை...

இது போன்ற அனுபவங்கள் நிறைய கைவசம் இருக்கு போல..

அதான் ப்ளோ நல்லா வந்திருக்குனு நினைக்கிறேன்.

நன்றி செய்யது. எல்லாம் நீங்க கொடுத்த உற்சாகம்தான். அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு.

S.A. நவாஸுதீன் said...

rose said...

சொன்னதெல்லாம் புரிஞ்சுதுல்ல, சொதப்பாம பேசு மச்சான்" என்றான்
\\
அட உங்கள சொல்லுறிங்களா........

இல்லாத அனுபவம்ங்க ரோஸ்

S.A. நவாஸுதீன் said...

rose said...

தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லுன்னு வெக்கப்பட்டுகிட்டே சொன்னாடா. இப்போ தைரியமா போய் சொல்லு மச்சான் என்றான் ரமேஷ் பாலாவிடம்.
\\
சூப்பர் தலைவா.சிரித்த வரிகள்

ரொம்ப நன்றி ரோஸ்

S.A. நவாஸுதீன் said...

rose said...

கதைலாம் எழுதுறீங்க keep it up

Thank you

S.A. நவாஸுதீன் said...

sarathy said...

// அவள் வகுப்பில் அவள்தான் கூடுதல் மதிப்பெண் பெற்றவள், மதிப்பிட்டவர்கள் மாணவர்கள் என்று சொல்லத் தேவையில்லை //
3 வது தடவையா படிக்கும்போதுதான்
எனக்கு மேல உள்ளது விளங்கிச்சு நவாஸ்...

என்ன சாரதி, பொண்ணுங்களுக்கு மார்க் போட்ட அனுபவம் இல்லையோ!

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

காதல்ல ‘காலிங்' மட்டும் கூடாது மச்சான் ...

அச்செப்ட்டிக்கிறேன் மாப்ள

S.A. நவாஸுதீன் said...

Shafi Blogs Here said...

உலகத்தில் இப்படியும் சில ரமேஷ்கள் (ரொம்ப அப்பாவியா இருப்பாரோ?)

நண்பனுக்காக

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

அது எப்படிப்பா வித்தியாசமான ரசனை உனக்கு

ரசிச்சேன் மொத்த கதையையும்

அடடா!!! இந்த மாதிரி கொடுக்குற உற்சாகத்துல தானா வருது மச்சான்

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

ஆஹா! கதை சூப்பரா இருக்குங்க நல்லா ரசித்தேன்

நன்றி Cute. எங்கே கொஞ்ச நாளாக் காணோம்?

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//ஒரு அஞ்சு நிமிஷம் பேசு, அது போதும். எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால முடியும். போ. உன்ன ஒன்னும் கடிச்சு தின்னப் போறதில்ல அவள்". பாலா அவனை உற்சாகப்படுத்தினான்/

இப்படி உசுப்பேத்திதான் ரணகளமாகி இருக்கு ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்

ஹா ஹா ஹா

sakthi said...

அதிகாலைப் பெய்த கனத்த மழையின் மிச்சங்களாய் இன்னமும் காற்று சில்லென்று இருந்தது.

ஆரம்பம் அருமை நவாஸ் அண்ணா

sakthi said...

மதிப்பிட்டவர்கள் மாணவர்கள் என்று சொல்லத் தேவையில்லை. எல்லோரோடும் இனிமையாகப் பேசுவாள்.

ஹ ஹ ஹ ஹ

ரசித்தேன் இந்த வரிகளை

sakthi said...

தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லுன்னு வெக்கப்பட்டுகிட்டே சொன்னாடா

நல்ல பொண்ணு

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

அதிகாலைப் பெய்த கனத்த மழையின் மிச்சங்களாய் இன்னமும் காற்று சில்லென்று இருந்தது.

ஆரம்பம் அருமை நவாஸ் அண்ணா

வாம்மா சக்தி.

புதியவன் said...

பூகிக்க முடியாத முடிவு நவாஸுதீன் நாளுக்கு நாள் மெருகேறுகிறது உங்கள் எழுத்து நடை...

புதியவன் said...

//செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் //

இந்த வரியை மிகவும் ரசித்தேன்....வாழ்த்துக்கள் நவாஸுதீன்...

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

பூகிக்க முடியாத முடிவு நவாஸுதீன் நாளுக்கு நாள் மெருகேறுகிறது உங்கள் எழுத்து நடை...

ஒஹ். ரொம்ப நன்றி புதியவன். அதன் சூத்திரம் உங்களைபோன்றவர்களிடம் பயின்றுகொண்டு தான் இருக்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

//செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் //

இந்த வரியை மிகவும் ரசித்தேன்....வாழ்த்துக்கள் நவாஸுதீன்...

ரொம்ப நன்றி புதியவன்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
காதல்ல ‘காலிங்' மட்டும் கூடாது மச்சான் ...
/

ஹா ஹா ரிப்பீட்டோய்

மச்சான் அபு, ஜமால் "காலிங்" சொன்னதன் நேரடி அர்த்தம் எனக்கு புரியல. உனக்கு புரிஞ்சுதா?

Revathyrkrishnan said...

கதையா

அனுபவமாப்பா?

:))னல்ல எழுத்து நடை... வாழ்த்துக்கள். இன்டெரெஸ்ட்டிங்கா படிச்சேன்

Revathyrkrishnan said...

கதையா

அனுபவமாப்பா?

:))னல்ல எழுத்து நடை... வாழ்த்துக்கள். இன்டெரெஸ்ட்டிங்கா படிச்சேன்

S.A. நவாஸுதீன் said...

reena said...

கதையா

அனுபவமாப்பா?

:))னல்ல எழுத்து நடை... வாழ்த்துக்கள். இன்டெரெஸ்ட்டிங்கா படிச்சேன்

வாங்க ரீனா. ரொம்ப நன்றி. உங்க டெம்ப்ளேட் சிம்பிளா நல்லா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

reena said...

கதையா

அனுபவமாப்பா?

கதையும் இல்ல, அனுபவமும் இல்ல. கதை மாதிரி ரீனா

gayathri said...

anna டெம்ப்ளேட் super ippa kathaikku varen

gayathri said...

me they 50

gayathri said...

நட்புடன் ஜமால் said...
காதல்ல ‘காலிங்' மட்டும் கூடாது மச்சான் ...

sariya sonnega anna athulaum ponnuga vezayathula koodave koodathu

gayathri said...

தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லு

athan pa eppa than intha pasanga thiriyama avanga loveva avangale solla porangalo

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

anna டெம்ப்ளேட் super ippa kathaikku varen

வாம்மா காயு. நல்லா இருக்கா. நீ சொன்னால் சரிதான்

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

me they 50

பரவாயில்லை காயுமா, கரெக்ட் டைம்ல தான் வந்திருக்க

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லு

athan pa eppa than intha pasanga thairiyama avanga loveva avangale solla porangalo

ரொம்ப கஷ்டம்.

எம்.எம்.அப்துல்லா said...

miga miga rasiththen nawaz...super.

(sorry for not write in tamil)

S.A. நவாஸுதீன் said...

ப்லோக் ஓபன் பண்ணினது வீண் போகலைப்பா. அப்துல்லாஹ் முதல் தடவ வந்து வாழ்த்தியது "படிக்க படிக்க இனிக்குதே"

Suresh said...

Suresh said...

//மாணவர்கள் சிலர் வகுப்பறைக்கும் பலர் கேன்டீனுக்கும் சென்றுகொண்டிருந்த நேரம்.//

நாங்க எல்லாம் கேண்டின் தம்பி கடைனு ;) இருந்த காலம்

/அதிகாலைப் பெய்த கனத்த மழையின் மிச்சங்களாய் இன்னமும் காற்று சில்லென்று இருந்தது.//

இந்த சூழ்நிலை அழகாய் இருக்கு

Suresh said...

//எல்லோரோடும் இனிமையாகப் பேசுவாள். //

இது ஒன்னு போதுமே ;) பசங்களுக்கு ரொம்ப இனிமையாய் பேசின நல்ல பெண்ணுனா கேட்கவா வேணும்

Suresh said...

//செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.//

செம டைமிங் புதுசா இருக்கு இந்த உவமை ;)

Suresh said...

//தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லுன்னு வெக்கப்பட்டுகிட்டே சொன்னாடா. இப்போ தைரியமா போய் சொல்லு மச்சான் என்றான் ரமேஷ் பாலாவிடம்.//

செம டுவிஸ்ட் ;) ஹா ஹா நல்லா இருந்தது.. ஒரு மிக சிறந்த எழுத்தாளர் கைவண்ணம் இருக்கு நண்பா பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள்

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

நாங்க எல்லாம் கேண்டின் தம்பி கடைனு ;) இருந்த காலம்

இந்த சூழ்நிலை அழகாய் இருக்கு

வாங்க சுரேஷ். அது ஒரு கனாக்காலம்

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

//செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.//

செம டைமிங் புதுசா இருக்கு இந்த உவமை

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான்

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

செம டுவிஸ்ட் ;) ஹா ஹா நல்லா இருந்தது.. ஒரு மிக சிறந்த எழுத்தாளர் கைவண்ணம் இருக்கு நண்பா பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள்.

ரொம்ப நன்றி சுரேஷ். நீங்களெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றதே ரொம்ப சந்தோசமா இருக்கு. ஜித்தாவில் இருந்து பத்திரிக்கைகளுக்கு அனுப்ப நேரமின்மையும் அதைவிட கூடுதலாக தயக்கமும் மிரட்டுகிறது.

Anonymous said...

வட்டமிட வந்த வண்ணத்துப்பூச்சி வலை மலருடன் வாசம் செய்கிறதோ அத்தனை அழகு.... நான் இப்போது தான் முதல் முறையாய் இங்கு வருகிறேன்......

கதை..ரொம்ப விறுவிறுப்பாய் நகர்ந்தது கடைசியில் எதிர்பாராத twist ஹஹஹஹஹ...இருப்பினும் படித்து முடிக்கும் முன் நான் எத்தனையே முடிவை கற்பனை பண்ணேன் ஆனால் அதில் எதுவேமே இல்லாமல் வித்தியாசமா இருந்தது....தொடரட்டும் ....
வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

ஆரத்தியோடு தமிழை வரவேற்கிறேன். டெம்ப்ளேட்டை நீங்கள் ரசித்தவிதம் கண்டு நானும் (உங்கள் வரிகளை) ரசித்தேன்.

தமிழே சொல்லியாச்சு. இனி "தைரியமா' எழுதலாம்

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

நன்றி
தமிழ்ர்ஸ்

SUFFIX said...

வலைச்சரத்தின் மூலம் வந்து வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன், நவாஸ்

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ் said...

வலைச்சரத்தின் மூலம் வந்து வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன், நவாஸ்

சும்மா சுத்தி சுத்தி வர்றீங்க போங்க