Lilypie

Wednesday, April 29, 2009

+2 வாழ்க்கை - மலரும் நினைவுகள். (பகுதி-2)

மலரும் நினைவுகள். (பகுதி-2)

எங்கள் பள்ளியின் சீருடை (வெள்ளை சட்டையும், காப்பி நிற (அதாங்க நம்ம போஸ்ட்மேன் போடுறது) முழுக்கால் சட்டையும்). இந்த நிறம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லியும் பள்ளி நிர்வாகம் கேட்காததால், வேறு வழியின்றி போடுவோம். வீட்டிலிரிந்து கிளம்பும்போது கைலியுடன் கிளம்புவோம். கால்சட்டை சைக்கிளின் பின்புறம் கேரியரில் இருக்கும். வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன்.

வகுப்பு தொடங்கும் முன்னரே எங்கள் அரட்டை தொடங்கும். அது வகுப்பு நடக்கும்போதும் தொடரும். மாணவர்கள் பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்). இருந்தாலும் அது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் கிடையாது. எங்கள் குழுவே வேறு. நான்கு பேர் (நான், அபுஅப்ஸர், சாதிக், முஜிப்) கொண்ட கல்சரைகள் (நாற்காலி என்ற செல்லபெயரும் எங்களுக்கு உண்டு). எங்களின் அரட்டையில் திரைப்படம்தான் முக்கிய கருவாக இருக்கும். ஒரு திரைப்படட்டைப்பற்றி எல்லாவற்றையும் அலசி, ஆராய்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

இந்த வகுப்பு, இந்த ஆசிரியர் என்று இல்லை, எல்லா வகுப்பும் எங்களுக்கு ஒன்றுதான். நாங்கள் எந்த ஆசிரியரையும் விட்டுவைக்கவில்லை. பள்ளி தலைமை ஆசிரியரைக் (எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பார்) கூட விட்டதில்லை.

எங்களின் விலங்கியல் வகுப்பு தொடங்கினால், எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த பொழுதுபோக்கு எங்களுக்கு அதுதான். எங்களின் மதிப்பிற்குரிய விலங்கியல் ஆசிரியர் அவர்களுக்கு, அவரை ஐயா என்றால் அறவே பிடிக்காது. அதனால்தான் எங்களுக்கு அதை சொல்வதற்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு முறை அவர் வகுப்பில் இனப்பெருக்கத்தைப்பற்றி தொடங்க ஆரம்பித்த அடுத்த நொடி குபுக் என்று ஒரு சிரிப்பு சப்தம். பின்னர் அமைதி. அவர் கோபத்துடன் எவைன்யா சிரித்தது என்று கேட்டுவிட்டு மீண்டும் பலகையில் எழுதத்தொடங்க மீண்டும் அதே சிரிப்பு சத்தம். இம்முறை அவரின் கோபம் அதிகரிக்க, அதனால் எங்களின் சிரிப்பும் அதிகரிக்க, ஆரம்பித்த நாங்கள் உள்ளே, மற்ற மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியே. ஆனால் வகுப்பில் சிரிப்பு ஓயவில்லை. இறுதியில் நாற்காலியும் (நாங்கதான்) வகுப்பைவிட்டு வெளியே. வகுப்பை விட்டு வெளியே வந்ததும் மீதம் இருந்தவர்களையும் வெளியே கொண்டு வரணுமே. வெளியில் வந்தும் ஒரே சிரிப்புதான். எங்களைப்பார்த்து மற்றவர்கள் சிரிக்க பதினெட்டில் பதினைந்து வெளியே. இது எங்களின் பள்ளி வாழ்வில் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி.

(இன்னும் வரும்)

78 comments:

ivingobi said...

ada neengalum sirichu thaan veliyila varuvingala.... naangalum apdi thaan... enna ipppo enga polappu sirippa sirikkuthu enga ooru....

அப்துல்மாலிக் said...

மச்சான்.. கலக்கல்

மறுபடியும் என்னை பள்ளிக்கே (நம் சோலைவனம்) கூட்டிக்கினுப்போறே.....

எதையோ இழந்தாமாதிரி............ இருக்கு

அப்துல்மாலிக் said...

நம் வாழ்க்கையிலேயே பசுமையை மீண்டும் நினைவுகளால் அலங்கரிக்கிறே

நன்றி சொல்லி பிரிய விரும்பலே பட் சொல்லனும்னு தோனுச்சி

நன்றி மாப்ஸ்...

அப்துல்மாலிக் said...

//கால்சட்டை சைக்கிளின் பின்புறம் கேரியரில் இருக்கும். வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன்//

ஹா ஹா ஹா

யூனிஃபார் வேண்டாம்னு எதிர்ப்பு தெரிவித்து பஸ் பின்னாடி கட்டிவிட்டதை சொல்ல மறந்துட்டியே

அப்துல்மாலிக் said...

//மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்). //

டக் டக்குனு பாயிண்ட்டை அள்ளிவிடுறியேப்பா தாங்கலே ஆவ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

வாங்க கோபி, ஸ்கூல் வாழ்க்கை என்றாலே பொதுவா எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

மச்சான்.. கலக்கல்

மறுபடியும் என்னை பள்ளிக்கே (நம் சோலைவனம்) கூட்டிக்கினுப்போறே.....

எதையோ இழந்தாமாதிரி............ இருக்கு

கவலைப்படாதே மாப்ள. இந்த பதிவு மூலம் மீண்டும் செல்வோம் பள்ளி வாழ்க்கைக்கு

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//கால்சட்டை சைக்கிளின் பின்புறம் கேரியரில் இருக்கும். வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன்//

ஹா ஹா ஹா

யூனிஃபார் வேண்டாம்னு எதிர்ப்பு தெரிவித்து பஸ் பின்னாடி கட்டிவிட்டதை சொல்ல மறந்துட்டியே

நீயும் கொஞ்சம் வண்ணம் சேர்க்க வேண்டும் என்பதால்தான்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்). //

டக் டக்குனு பாயிண்ட்டை அள்ளிவிடுறியேப்பா தாங்கலே ஆவ்வ்வ்வ்

ஹா ஹா ஹா

அப்துல்மாலிக் said...

//இது எங்களின் பள்ளி வாழ்வில் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி.
//

அதே அதே அதே நானும் கூவிக்கிறேன்

சிரிப்பா சிரிச்சதை தற்போதுக்கூட ஒரு பின்னூட்டத்திலே சொல்லிருப்பேன்

அப்துல்மாலிக் said...

//எங்களின் அரட்டையில் திரைப்படம்தான் முக்கிய கருவாக இருக்கும். ஒரு திரைப்படட்டைப்பற்றி எல்லாவற்றையும் அலசி, ஆராய்ந்து பேசிக்கொண்டிருப்போம்.
//

நானும் திரைப்படம் பார்க்க ஆரம்பிச்சதும் இங்கேதான்.. எவ்வளவு நல்லவன் என்னையும் கெடுத்துப்புட்டானுவோ ஆஆஆவ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...

//(நாற்காலி என்ற செல்லபெயரும் எங்களுக்கு உண்டு)//

நாற்காலிக்கு காலை உடைக்கனும் என்று ஆசிரியரால் சொல்லப்பட்டதும் உண்டு

அப்துல்மாலிக் said...

//வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம்/

அப்போ வூட்டுலே பேண்ட் ட்டு வரமாட்டீங்களா? ச்ச்சீசீ

அப்துல்மாலிக் said...

//பள்ளி தலைமை ஆசிரியரைக் (எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பார்) கூட விட்டதில்லை.
//

பாவம் அவர், இப்போ கண்டாலும் அதே பயம் அவர் கண்களில் இருக்கும்

அப்துல்மாலிக் said...

//பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் ///

ம்ம் என்னத்தை சொல்றது

ers said...

எங்களின் விலங்கியல் வகுப்பு தொடங்கினால், எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த பொழுதுபோக்கு எங்களுக்கு அதுதான். எங்களின் மதிப்பிற்குரிய விலங்கியல் ஆசிரியர் அவர்களுக்கு, அவரை ஐயா என்றால் அறவே பிடிக்காது. அதனால்தான் எங்களுக்கு அதை சொல்வதற்கு மிகவும் பிடிக்கும்.///

நான் உங்களை ஐயா என்றழைக்கலாமா... (சும்மா டாமாசுதாங்க)

sakthi said...

மாணவர்கள் பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்).

nanum kandikiren anna

sakthi said...

இந்த வகுப்பு, இந்த ஆசிரியர் என்று இல்லை, எல்லா வகுப்பும் எங்களுக்கு ஒன்றுதான். நாங்கள் எந்த ஆசிரியரையும் விட்டுவைக்கவில்லை. பள்ளி தலைமை ஆசிரியரைக் (எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பார்) கூட விட்டதில்லை.

nalla manakar

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//

நானும் திரைப்படம் பார்க்க ஆரம்பிச்சதும் இங்கேதான்.. எவ்வளவு நல்லவன் என்னையும் கெடுத்துப்புட்டானுவோ ஆஆஆவ்வ்வ்வ்

டேய் டேய் டேய் வேணாம்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//பள்ளி தலைமை ஆசிரியரைக் (எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பார்) கூட விட்டதில்லை.
//

பாவம் அவர், இப்போ கண்டாலும் அதே பயம் அவர் கண்களில் இருக்கும்

மாப்ள இப்பவும் மூக்குப்பொடி போடுகின்றாரா என்று கேட்டு சொல்லு

S.A. நவாஸுதீன் said...

நெல்லைத்தமிழ் said...

எங்களின் விலங்கியல் வகுப்பு தொடங்கினால், எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த பொழுதுபோக்கு எங்களுக்கு அதுதான். எங்களின் மதிப்பிற்குரிய விலங்கியல் ஆசிரியர் அவர்களுக்கு, அவரை ஐயா என்றால் அறவே பிடிக்காது. அதனால்தான் எங்களுக்கு அதை சொல்வதற்கு மிகவும் பிடிக்கும்.///

நான் உங்களை ஐயா என்றழைக்கலாமா... (சும்மா டாமாசுதாங்க.

சீரியஸா கூட சொல்லலாம். அப்பவும் நாங்க சிரிக்கத்தான் செய்வோம்

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

இந்த வகுப்பு, இந்த ஆசிரியர் என்று இல்லை, எல்லா வகுப்பும் எங்களுக்கு ஒன்றுதான். நாங்கள் எந்த ஆசிரியரையும் விட்டுவைக்கவில்லை. பள்ளி தலைமை ஆசிரியரைக் (எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பார்) கூட விட்டதில்லை.

nalla manakar

வாங்க சக்தி. நிஜமாவே நல்ல மாணாக்கர்கள்தான் நாங்கள்.

rose said...

மலரும் நினைவுகள். (பகுதி-2)

\\
வேணாம் அழுதுருவேன்

S.A. நவாஸுதீன் said...

rose said...

மலரும் நினைவுகள். (பகுதி-2)

\\
வேணாம் அழுதுருவேன்

ஏன் ஏன் ஏன்? எங்க வாத்தியார் யாரோடயாவது வாரிசா நீங்க?

rose said...

இந்த நிறம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லியும் பள்ளி நிர்வாகம் கேட்காததால்,
\\
ஒரு வேளை நீங்க சொல்லாமல் இருந்திருந்தால் மாற்றி இருப்பாங்க‌

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

மலரும் நினைவுகள். (பகுதி-2)

\\
வேணாம் அழுதுருவேன்

ஏன் ஏன் ஏன்? எங்க வாத்தியார் யாரோடயாவது வாரிசா நீங்க
\\
hihihi

S.A. நவாஸுதீன் said...

rose said...

ஒரு வேளை நீங்க சொல்லாமல் இருந்திருந்தால் மாற்றி இருப்பாங்க‌

ஒஹ் இது வேறயா?

rose said...

கிளம்பும்போது கைலியுடன் கிளம்புவோம். கால்சட்டை சைக்கிளின் பின்புறம் கேரியரில் இருக்கும். வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன்.
\\
வெக்கமா யாருக்கு உங்களுக்கா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rose said...

வகுப்பு தொடங்கும் முன்னரே எங்கள் அரட்டை தொடங்கும்
\\
நீங்கதான் படிக்க போகலையே

என்ன பண்றது. எங்க ஊர்ல போஸ்ட்மேன் கூட இத போட வெக்கப்பட்டு வேட்டியோட தான் வருவாருங்கோ

rose said...

இருந்தாலும் அது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் கிடையாது
\\
ஹிஹிஹி நீங்கள்லாம் ரொம்ப நல்லவங்க நம்பிட்டோம்ப்பா

S.A. நவாஸுதீன் said...

rose said...

வகுப்பு தொடங்கும் முன்னரே எங்கள் அரட்டை தொடங்கும்
\\
நீங்கதான் படிக்க போகலையே
நாங்க போனது என்னமோ அரட்டைய(ப)டிக்க தான்

S.A. நவாஸுதீன் said...

rose said...

இருந்தாலும் அது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் கிடையாது
\\
ஹிஹிஹி நீங்கள்லாம் ரொம்ப நல்லவங்க நம்பிட்டோம்ப்பா

நம்புனதுக்கு நன்றி ரோஸ், ஹி ஹி ஹி

rose said...

ஒரு முறை அவர் வகுப்பில் இனப்பெருக்கத்தைப்பற்றி தொடங்க ஆரம்பித்த அடுத்த நொடி குபுக் என்று ஒரு சிரிப்பு சப்தம். பின்னர் அமைதி. அவர் கோபத்துடன் எவைன்யா சிரித்தது என்று கேட்டுவிட்டு மீண்டும் பலகையில் எழுதத்தொடங்க மீண்டும் அதே சிரிப்பு சத்தம். இம்முறை அவரின் கோபம் அதிகரிக்க, அதனால் எங்களின் சிரிப்பும் அதிகரிக்க, ஆரம்பித்த நாங்கள் உள்ளே, மற்ற மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியே. ஆனால் வகுப்பில் சிரிப்பு ஓயவில்லை. இறுதியில் நாற்காலியும் (நாங்கதான்) வகுப்பைவிட்டு வெளியே. வகுப்பை விட்டு வெளியே வந்ததும் மீதம் இருந்தவர்களையும் வெளியே கொண்டு வரணுமே. வெளியில் வந்தும் ஒரே சிரிப்புதான். எங்களைப்பார்த்து மற்றவர்கள் சிரிக்க பதினெட்டில் பதினைந்து வெளியே. இது எங்களின் பள்ளி வாழ்வில் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி.

\\
இதை படித்ததும் என் +2 நினைவுகள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அன்று கெமிஸ்ட்ரி ஆசிரியை எங்களை படிக்க சொல்லிவிட்டு சென்று விட்டார். நானும் என் தோழியும் படக்கதை பேசிக் கொண்டு இருந்தோம் நான் சொன்ன காமெடி கேட்டு இரண்டு பெஞ்சில் உள்ள அனைவரும் சிரித்தோம் என் ஆசிரியை ஜன்னல் வழியில் பார்த்து விட்டு எங்கள் 2 பெஞ்ச் மாணவியையும் நிற்க வைத்துவிட்டார்.வெளியே சென்ற ஆசிரியை திடிரென்று வந்து என்னையும் என் தோழியையும் பார்த்து நீங்க ரொம்ப நல்ல பொண்ணுங்க ஆச்சே நீங்க இவங்க கூடலாம் சேர வேணாம்னு சொல்லி எங்க 2 பேரை மட்டும் உட்கார சொல்லிட்டாங்க அனைத்து மாணவிகளும் எங்களை திட்டியதை நினைத்தால் இன்னும் சிரிப்பு வருது

rose said...

இன்னும் வரும்
\\
எதிர் பார்க்கிறோம்

rose said...

அபுஅஃப்ஸர் said...
மச்சான்.. கலக்கல்

மறுபடியும் என்னை பள்ளிக்கே (நம் சோலைவனம்) கூட்டிக்கினுப்போறே.....
\\
marupadiyumaaaaaaaaaaaa

rose said...

அபுஅஃப்ஸர் said...
//கால்சட்டை சைக்கிளின் பின்புறம் கேரியரில் இருக்கும். வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன்//

ஹா ஹா ஹா

யூனிஃபார் வேண்டாம்னு எதிர்ப்பு தெரிவித்து பஸ் பின்னாடி கட்டிவிட்டதை சொல்ல மறந்துட்டியே

\\
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் ///

ம்ம் என்னத்தை சொல்றது
\\

ஆமா ஆமா

அ.மு.செய்யது said...

மாணவர்கள் பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்).//

ஹா..ஹா ரசித்தேன் இவ்வரிகளை !!!

அ.மு.செய்யது said...

//(நான், அபுஅப்ஸர், சாதிக், முஜிப்)//

ஒரு குரூப்பா தான்ய்யா அலைஞ்சிருக்காய்ங்க..செட்டு சேர்ந்துட்டாய்ங்கப்பா ..

அ.மு.செய்யது said...

//எங்களின் அரட்டையில் திரைப்படம்தான் முக்கிய கருவாக இருக்கும்//

பள்ளியிலேயெ திரைவிமர்சனம் ஆரம்பிச்சாச்சா..

அ.மு.செய்யது said...

பள்ளியென்றதும் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.
மனதை விட்டு இன்றும் அகல மறுக்கும் ஞாபகங்கள்.

அட போங்க நவாஸ்...

கீழை ராஸா said...

இன்னும் இன்னும் நிறைய உங்க கிட்டே எதிர்பார்க்கிறோம்

புதியவன் said...

//வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன். //

ஹா...ஹா...ஆணின் வெட்கம் கூட அழகு தான்...

புதியவன் said...

//மாணவர்கள் பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்).//

கலகலப்போட ஒரு சமூகக்கருத்து...

புதியவன் said...

//அவரை ஐயா என்றால் அறவே பிடிக்காது. அதனால்தான் எங்களுக்கு அதை சொல்வதற்கு மிகவும் பிடிக்கும். //

அதே பள்ளிப் பருவக் குறுப்புகள்...மலரும் நினைவுகள் ரசிக்கும் படி இருக்கு...தொடர்ந்து எழுதுங்க நவாஸுதீன்...

//(நான், அபுஅப்ஸர், சாதிக், முஜிப்)//

இது நம்ம ”என் உயிரே” அபுஅஃப்ஸரா...?

அ.மு.செய்யது said...

//புதியவன் said...

//(நான், அபுஅப்ஸர், சாதிக், முஜிப்)//

இது நம்ம ”என் உயிரே” அபுஅஃப்ஸரா...?
//

அட‌ அவ‌ரே தாங்க‌...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
மச்சான்.. கலக்கல்

மறுபடியும் என்னை பள்ளிக்கே (நம் சோலைவனம்) கூட்டிக்கினுப்போறே.....

எதையோ இழந்தாமாதிரி............ இருக்கு
//

ஓஹ்..அந்த‌ பொண்ணு மேட்ட‌ரா ?? இருக்காதே பின்னே !!!

அ.மு.செய்யது said...

வ‌ந்த‌தும் வ‌ந்துட்டேனுங்க‌..

கை ப‌ர‌ப‌ர‌ங்குது..ஒரு ஆஃப் அடிச்சிட‌றேனே ??

அ.மு.செய்யது said...

50 !!!

ஆஃப்ட‌ர் எ லாங்க் டைம் !!!

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
இதை படித்ததும் என் +2 நினைவுகள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அன்று கெமிஸ்ட்ரி ஆசிரியை எங்களை படிக்க சொல்லிவிட்டு சென்று விட்டார். நானும் என் தோழியும் படக்கதை பேசிக் கொண்டு இருந்தோம் நான் சொன்ன காமெடி கேட்டு இரண்டு பெஞ்சில் உள்ள அனைவரும் சிரித்தோம் என் ஆசிரியை ஜன்னல் வழியில் பார்த்து விட்டு எங்கள் 2 பெஞ்ச் மாணவியையும் நிற்க வைத்துவிட்டார்.வெளியே சென்ற ஆசிரியை திடிரென்று வந்து என்னையும் என் தோழியையும் பார்த்து நீங்க ரொம்ப நல்ல பொண்ணுங்க ஆச்சே நீங்க இவங்க கூடலாம் சேர வேணாம்னு சொல்லி எங்க 2 பேரை மட்டும் உட்கார சொல்லிட்டாங்க அனைத்து மாணவிகளும் எங்களை திட்டியதை நினைத்தால் இன்னும் சிரிப்பு வருது

மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் அப்டித்தான். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மேட்டர் வெளிய வருதுங்கோ

S.A. நவாஸுதீன் said...

rose said...

இன்னும் வரும்
\\
எதிர் பார்க்கிறோம்

மறுபடியும் அழமாட்டீங்களே?

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

மாணவர்கள் பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்).//

ஹா..ஹா ரசித்தேன் இவ்வரிகளை !!!

வாங்க தல.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//எங்களின் அரட்டையில் திரைப்படம்தான் முக்கிய கருவாக இருக்கும்//

பள்ளியிலேயெ திரைவிமர்சனம் ஆரம்பிச்சாச்சா..

அப்ப ஆரம்பிச்சதுதான். இன்னும் விடல பாஸ்

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

பள்ளியென்றதும் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.
மனதை விட்டு இன்றும் அகல மறுக்கும் ஞாபகங்கள்.

அட போங்க நவாஸ்...

என்ன தல பண்றது. வாழ்க்கைல ஒரு Rewind பட்டன் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?

S.A. நவாஸுதீன் said...

கீழை ராஸா said...

இன்னும் இன்னும் நிறைய உங்க கிட்டே எதிர்பார்க்கிறோம்

வாங்க கீழை ராசா. முதன் முதலா வந்து பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப நன்றி. திரும்ப வருவோம்ல

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

//வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன். //

ஹா...ஹா...ஆணின் வெட்கம் கூட அழகு தான்...

அய்யய்யோ அத ஏன் கேக்குறீங்க. ஒரு பய (நாற்காலி) போட்டுட்டு வரமாட்டான். கிளாஸ்லதான். அடிச்சி புடிச்சி போட்டுக்கிட்டு பிரேயருக்காக ஓடுவோம்

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

//(நான், அபுஅப்ஸர், சாதிக், முஜிப்)//

இது நம்ம ”என் உயிரே” அபுஅஃப்ஸரா...?

அதே கல்சரைதான்

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
மச்சான்.. கலக்கல்

எதையோ இழந்தாமாதிரி............ இருக்கு
//

ஓஹ்..அந்த‌ பொண்ணு மேட்ட‌ரா ?? இருக்காதே பின்னே !!!

சைக்கிள் கேப்ல, தல இது எப்போ?

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

50 !!!

ஆஃப்ட‌ர் எ லாங்க் டைம் !!!

செய்யதுக்கு செய்யதே 50. வாழ்த்துக்கள்

coolzkarthi said...

நல்ல ஞாபக சிதறல்கள் நண்பரே....

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
இதை படித்ததும் என் +2 நினைவுகள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அன்று கெமிஸ்ட்ரி ஆசிரியை எங்களை படிக்க சொல்லிவிட்டு சென்று விட்டார். நானும் என் தோழியும் படக்கதை பேசிக் கொண்டு இருந்தோம் நான் சொன்ன காமெடி கேட்டு இரண்டு பெஞ்சில் உள்ள அனைவரும் சிரித்தோம் என் ஆசிரியை ஜன்னல் வழியில் பார்த்து விட்டு எங்கள் 2 பெஞ்ச் மாணவியையும் நிற்க வைத்துவிட்டார்.வெளியே சென்ற ஆசிரியை திடிரென்று வந்து என்னையும் என் தோழியையும் பார்த்து நீங்க ரொம்ப நல்ல பொண்ணுங்க ஆச்சே நீங்க இவங்க கூடலாம் சேர வேணாம்னு சொல்லி எங்க 2 பேரை மட்டும் உட்கார சொல்லிட்டாங்க அனைத்து மாணவிகளும் எங்களை திட்டியதை நினைத்தால் இன்னும் சிரிப்பு வருது

மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் அப்டித்தான். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மேட்டர் வெளிய வருதுங்கோ
\\
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

இன்னும் வரும்
\\
எதிர் பார்க்கிறோம்

மறுபடியும் அழமாட்டீங்களே?

\\
ஹி ஹி அது உங்களோட பதிவை பொறுத்தது

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//(நான், அபுஅப்ஸர், சாதிக், முஜிப்)//

ஒரு குரூப்பா தான்ய்யா அலைஞ்சிருக்காய்ங்க..செட்டு சேர்ந்துட்டாய்ங்கப்பா ..
//

ஹா ஹாஹா எவனாவது மாட்டுனாங்கய‌ அவ்வளவுதான்

அப்துல்மாலிக் said...

//rose said...
மலரும் நினைவுகள். (பகுதி-2)

\\
வேணாம் அழுதுருவேன்
//

ஏனப்பா அழவைக்கிரே, உட்லண்ஸ் கொஞ்சம் சேர்த்து பதிவு போடு

அப்துல்மாலிக் said...

//மறுபடியும் என்னை பள்ளிக்கே (நம் சோலைவனம்) கூட்டிக்கினுப்போறே.....

எதையோ இழந்தாமாதிரி............ இருக்கு
//

ஓஹ்..அந்த‌ பொண்ணு மேட்ட‌ரா ?? இருக்காதே பின்னே !!!//

ஹி ஹி டீன் ஏஜ் இதெல்லாம் இல்லேனா எப்படி தல... இவ்வளவு கல்சடை பன்னியதர்கு அர்தம் இல்லமல் போய்டும் இல்லே

அப்துல்மாலிக் said...

//நீங்க ரொம்ப நல்ல பொண்ணுங்க ஆச்சே நீங்க இவங்க கூடலாம் சேர வேணாம்னு சொல்லி எங்க 2 பேரை மட்டும் உட்கார சொல்லிட்டாங்க//

என்ன கொடும சார் இது..... ஆஆஅவ்வ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

coolzkarthi said...

நல்ல ஞாபக சிதறல்கள் நண்பரே....

வாங்க கார்த்தி. நன்றி

gayathri said...

anna neegalum அபுஅஃப்ஸர்rum class medesa

super

gayathri said...

மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்).

:)))))))))))))))

gayathri said...

அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
மச்சான்.. கலக்கல்

மறுபடியும் என்னை பள்ளிக்கே (நம் சோலைவனம்) கூட்டிக்கினுப்போறே.....

எதையோ இழந்தாமாதிரி............ இருக்கு
//

ஓஹ்..அந்த‌ பொண்ணு மேட்ட‌ரா ?? இருக்காதே பின்னே !!!

atheyllam next partla poduvaru wait panugapa

gayathri said...

எங்கள் பள்ளியின் சீருடை (வெள்ளை சட்டையும், காப்பி நிற (அதாங்க நம்ம போஸ்ட்மேன் போடுறது)

apa ladiesku white and blue thane anna

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

anna neegalum அபுஅஃப்ஸர்rum class medesa

super

நானும் அபுஅப்ஸரும் ஸ்கூல்லேர்ந்து கிளாஸ்மேட். நானும் நட்புடன் ஜமாலும் காலேஜ்ல

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
மச்சான்.. கலக்கல்

மறுபடியும் என்னை பள்ளிக்கே (நம் சோலைவனம்) கூட்டிக்கினுப்போறே.....

எதையோ இழந்தாமாதிரி............ இருக்கு
//

ஓஹ்..அந்த‌ பொண்ணு மேட்ட‌ரா ?? இருக்காதே பின்னே !!!

atheyllam next partla poduvaru wait panugapa

அபு! காயு சொன்னமாதிரி போட்டுவிடவா?

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

எங்கள் பள்ளியின் சீருடை (வெள்ளை சட்டையும், காப்பி நிற (அதாங்க நம்ம போஸ்ட்மேன் போடுறது)

apa ladiesku white and blue thane anna

அய்யய்யோ மறந்து போச்சேமா!!(நிஜமா நம்பனும்)

Anonymous said...

என்னுடைய 1990ம் ஆண்டு கா.மு. பள்ளி வாழ்க்கையை நினைவிற்க்கு கொன்டு வந்துவிட்டீர்கள். நன்றி!! Shafi

S.A. நவாஸுதீன் said...

Anonymous said...

என்னுடைய 1990ம் ஆண்டு கா.மு. பள்ளி வாழ்க்கையை நினைவிற்க்கு கொன்டு வந்துவிட்டீர்கள். நன்றி!! Shafi

வாங்க Shafi. நீங்களும் K.M.H.S.S. தானா?

SUFFIX said...

ஆமா நவாஸ்!! 1990 யில் +2 முடிச்சேனுஙக!! உஙகளுக்கு யூனிபார்ம் கலரில் பிரச்னை, எஙகளுக்கு தைப்பதில் பிர்ச்னை, நாஙகள் எங்களுக்கு இஷ்டப்பட்ட டைலரிடம்தான் தைப்போம் என்று அடம் பிடித்து, அதில் வெற்றியும் கண்டோம்!! எனக்கு 'பேக்கி' டைப் பேன்ட் தான் பிடிக்கும், அதுக்கு பாவாடை மாதிரி இருக்குடான்னு கின்டல் அடிச்சதை பொறுத்து போராடியது வேறு விஷயம்!! ‍ ‍