Lilypie

Tuesday, April 7, 2009

" வேண்டாமே"

ஈவு இரக்கமற்ற, இத்துப்போன நெஞ்சம் படைத்த பிள்ளைகளாலும்,
காலத்தின் தேவையாக, காலத்தின் கட்டாயமாக, காலத்தின் குரலாக
எழும்பிக் கொண்டிருப்பவைதாம் இன்றைய முதியோர் இல்லங்கள்.

"நம் குழந்தைகள், நம் வழியாக வந்தவர்கள். ஆனால் நமக்காக வந்தவர்கள் இல்லை. அவர்களுடைய வாழ்வை வாழ வந்தவர்கள். நம்மை வாழ்விக்க வந்தவர்களில்லை. எதிர்பார்ப்பு இல்லையெனில் ஏமாற்றமும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால், முதுமையை இரு கரம் நீட்டி வரவேற்கலாம்" என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறிக்கொள்ளும் அவல நிலை தான் இன்றைய ஒரு சில பெற்றோர்களின் நிலை.

நீ பிறப்பதற்கு தவமாய் தவமிருந்து
பிறந்ததும் அளவற்ற மகிழ்சியில் திழைத்து
தவழ்ந்தபோது உன்னுடன் தவழ்ந்து
நீ நடைபழகும்போது விரல்தந்து
ஓடியபோது கூடவே ஓடி
பசித்து அழுதபோது பதறி எழுந்து
தூழிக்கு பதிலாக தோள்களை தொட்டிலாக்கி
தொண்டை வரலும்வரை தாலாட்டி
எட்டி உதைத்த கால்களை முத்தமிட்டு
நெஞ்சிலேறி மிதித்து குதித்தபோது
வலித்தும் வலிக்கவில்லை என்று பொய் சொல்லி
நீ நல்ல துணி போட அயராது உழைத்து
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தில்
மச்சி வீடு கட்டி உன்னை மகிழவைத்து
கஸ்டத்தில் இருந்தாலும்.. நீ கேட்ட நேரத்தில் கேட்டததைத்தந்து
உன்படிப்புக்காக குடியிருந்த வீட்டைக் கொடுத்து
நீ படிப்பதை பார்த்து மகிழ்ந்து
திருமணம் என்னும் சடங்கையும் முடித்து
நீ கட்டிய வீட்டில் ஒருமூலையிலாவது வாழலாம்
என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்
வாஞ்சயுடன் வந்து சொல்கிறாயே
இனி நீங்கள் சந்தோசமாக இருக்கலாம்
முழு சுதந்திரமாய் முதியோர் இல்லத்தில்

மனிதா மரபுகளை மறந்துவிடாதே
மனிதத்தை இழந்து விடாதே

பெற்றோர்கள் முதியவர்களாகிவிட்டால் சீ என்ற ஒரு சொல்லால் சொர்க்கத்தை இழந்துவிடுவோமாம்

இத்தகைய மதிப்புள்ள பெற்றோரை நாம் பேணி காக்கவேண்டாமா. சிந்தித்து பார் செயல்படுத்திப்பார் சொர்க்கத்தை அடைவாய் நிச்சயமாக

மாற்றம் ஒன்று தான் மாறாதது. நாம் விரும்பினாலும், வெறுத்தாலும் எதிர்வரும் காலம் இதைத்தான் செய்யப்போகிறது. ஆனால் நம்மை பெற்றெடுத்தவர்களுடன் இந்த தத்துவம் பிரதிபலிக்க வேண்டாம். வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா?

54 comments:

நட்புடன் ஜமால் said...

வேண்டாமே!

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

வேண்டாமே!

அதைத்தான் கொஞ்சம் விவரமாய்

அப்துல்மாலிக் said...

இன்னாப்பா இது ஒரே புது பதிவாக்கீது

படிச்சிட்டு வாரேன்

அப்துல்மாலிக் said...

//வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா?///

நெத்தியடிப்பா... படித்து மனது வலித்தது...

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா?///

நெத்தியடிப்பா... படித்து மனது வலித்தது...

வா நண்பா
வலிக்கத்தான் செய்கிறது

அப்துல்மாலிக் said...

//ஈவு இரக்கமற்ற, இத்துப்போன நெஞ்சம் படைத்த பிள்ளைகளாலும்,
காலத்தின் தேவையாக, காலத்தின் கட்டாயமாக, காலத்தின் குரலாக
எழும்பிக் கொண்டிருப்பவைதாம் இன்றைய முதியோர் இல்லங்கள்.
/

நல்லா சொன்னே மாமு...

இந்த பதிவை சற்று முந்தினங்களுக்கு முன் வந்த பேரென்ட்ஸ் டே அன்னிக்கு வந்திருக்க வேண்டிய விடயம்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//ஈவு இரக்கமற்ற, இத்துப்போன நெஞ்சம் படைத்த பிள்ளைகளாலும்,
காலத்தின் தேவையாக, காலத்தின் கட்டாயமாக, காலத்தின் குரலாக
எழும்பிக் கொண்டிருப்பவைதாம் இன்றைய முதியோர் இல்லங்கள்.
/

நல்லா சொன்னே மாமு...

இந்த பதிவை சற்று முந்தினங்களுக்கு முன் வந்த பேரென்ட்ஸ் டே அன்னிக்கு வந்திருக்க வேண்டிய விடயம்

சரிதான் அந்த சமயத்தில் நான் Bloggers Communityla இல்லப்பா

அப்துல்மாலிக் said...

//நீ கட்டிய வீட்டில் ஒருமூலையிலாவது வாழலாம்
என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்
///

நீ கட்டிய வீடு ‍ இது கவனிக்கவேண்டிய விடயம்.... பெற்றோர் கட்டிய வீடு போய் இப்போ நீ (இங்குதான் பெற்றோரின் உண்மையான பாசம்)

தெளிவான விளக்கம்....

அப்துல்மாலிக் said...

//பெற்றோர்கள் முதியவர்களாகிவிட்டால் சீ என்ற ஒரு சொல்லால் சொர்க்கத்தை இழந்துவிடுவோமாம்
///

உண்மைதான்...

அப்துல்மாலிக் said...

//"நம் குழந்தைகள், நம் வழியாக வந்தவர்கள். ஆனால் நமக்காக வந்தவர்கள் இல்லை. அவர்களுடைய வாழ்வை வாழ வந்தவர்கள். நம்மை வாழ்விக்க வந்தவர்களில்லை//

பெற்றோர்கள் யாரையும் நம்பியில்லாமல் இருந்தால்... நிச்சயம்முதிய வயதில் அவர்களின் வாழ்க்கை இனிக்கும்

அப்துல்மாலிக் said...

//தவழ்ந்தபோது உன்னுடன் தவழ்ந்து
நீ நடைபழகும்போது விரல்தந்து
ஓடியபோது கூடவே ஓடி
பசித்து அழுதபோது பதறி எழுந்து
தூழிக்கு பதிலாக தோள்களை தொட்டிலாக்கி
தொண்டை வரலும்வரை தாலாட்டி
எட்டி உதைத்த கால்களை முத்தமிட்டு
நெஞ்சிலேறி மிதித்து குதித்தபோது
//

அருமையான எழுத்தோட்டம்... வரிகளின் கோர்ப்பு

ம்ம் கலக்குறே சந்துரு...

வாழ்த்துக்கள்

நல்ல முன்னேற்றம்.......

coolzkarthi said...

நச் syed சார் ,மனிதம் வளர்ப்போம் மனித காட்சி சாலைகளை அல்ல...........

rose said...

வந்துட்டேன்

rose said...

எதிர்பார்ப்பு இல்லையெனில் ஏமாற்றமும் இல்லை
\\
உண்மையான வரிகள்

rose said...

தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறிக்கொள்ளும் அவல நிலை தான் இன்றைய ஒரு சில பெற்றோர்களின் நிலை.
\\
சின்ன திருத்தம் தலைவா பல பெற்றோர்களின் நிலமை

rose said...

நீ கட்டிய வீட்டில் ஒருமூலையிலாவது வாழலாம்
என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்
வாஞ்சயுடன் வந்து சொல்கிறாயே
இனி நீங்கள் சந்தோசமாக இருக்கலாம்
முழு சுதந்திரமாய் முதியோர் இல்லத்தில்
\\
என்ன கொடுமை!

rose said...

மாற்றம் ஒன்று தான் மாறாதது. நாம் விரும்பினாலும், வெறுத்தாலும் எதிர்வரும் காலம் இதைத்தான் செய்யப்போகிறது. ஆனால் நம்மை பெற்றெடுத்தவர்களுடன் இந்த தத்துவம் பிரதிபலிக்க வேண்டாம். வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா?
\\
நாளைய வாழ்வில் நாமும் பெற்றோரே மறந்துவிடாதீர் அன்பு நெஞ்சங்களே

S.A. நவாஸுதீன் said...

rose said...

வந்துட்டேன்

வாங்க ரோஸ்

S.A. நவாஸுதீன் said...

coolzkarthi said...

நச் syed சார் ,மனிதம் வளர்ப்போம் மனித காட்சி சாலைகளை அல்ல...........

வாங்க கார்த்தி, அருமையா சொன்னீங்க

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
நாளைய வாழ்வில் நாமும் பெற்றோரே மறந்துவிடாதீர் அன்பு நெஞ்சங்களே

சரியா சொன்னீங்க ரோஸ்

புதியவன் said...

பதிவு முழுதும் உணர்வுக் குவியல்...

எழுத்துக்களில் ஒரு ஆவேச வீச்சு அருமை...

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

பதிவு முழுதும் உணர்வுக் குவியல்...

எழுத்துக்களில் ஒரு ஆவேச வீச்சு அருமை...

வாங்க புதியவன். நன்றி உங்கள் கருத்துக்கு

அ.மு.செய்யது said...

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

எனக்கு நைட் ஷிப்டுங்கோ !!!!!!

அ.மு.செய்யது said...

//நீ பிறப்பதற்கு தவமாய் தவமிருந்து
பிறந்ததும் அளவற்ற மகிழ்சியில் திழைத்து
தவழ்ந்தபோது உன்னுடன் தவழ்ந்து
நீ நடைபழகும்போது விரல்தந்து
ஓடியபோது கூடவே ஓடி
பசித்து அழுதபோது பதறி எழுந்து//

கண்களில் நீர் கோர்க்கிறது.

அ.மு.செய்யது said...

//நீ நல்ல துணி போட அயராது உழைத்து
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தில்
மச்சி வீடு கட்டி உன்னை மகிழவைத்து
கஸ்டத்தில் இருந்தாலும்.. நீ கேட்ட நேரத்தில் கேட்டததைத்தந்து
உன்படிப்புக்காக குடியிருந்த வீட்டைக் கொடுத்து
நீ படிப்பதை பார்த்து மகிழ்ந்து
//

என் தந்தை படும் கஷ்டங்கள் என் கண்முன்னே வந்து போகின்றன நவாஸ்..

உங்கள் வார்த்தைகள் என்னை துவைக்கின்றன.

அ.மு.செய்யது said...

//
பெற்றோர்கள் முதியவர்களாகிவிட்டால் சீ என்ற ஒரு சொல்லால் சொர்க்கத்தை இழந்துவிடுவோமாம் //

திருமறையை மேற்கோள் காட்டிய விதம் அருமை.

அ.மு.செய்யது said...

தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என நபிபெருமானார் கூறியது நினைவுக்கு வருகிறது.

பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிந்திக்க தூண்டும் பதிவு நவாஸ்.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என நபிபெருமானார் கூறியது நினைவுக்கு வருகிறது.

பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிந்திக்க தூண்டும் பதிவு நவாஸ்.

வாங்க அ.மு. செய்யது. நிஜம் தான். அவர்களிடம் அனைத்தும் பெற்று, திருப்பி (திருப்தியாய்) கொடுக்க வாய்ப்பு வந்தபோது அவர்கள் (உயிருடன்) என்னுடன் இல்லை. இதை தவிர எனக்கு மனவேதனை வேறு ஒன்றும் இல்லை. அதன்பிரதிபலிப்புதான் இது. எங்கேயோ எப்போதோ படித்தது நினைவுக்கு வர, விளைவு இந்த பதிவு

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//
பெற்றோர்கள் முதியவர்களாகிவிட்டால் சீ என்ற ஒரு சொல்லால் சொர்க்கத்தை இழந்துவிடுவோமாம் //

திருமறையை மேற்கோள் காட்டிய விதம் அருமை.

அதைவிட சிறப்பான அறிவு வேறு எங்கே கிடைக்கும்

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

என் தந்தை படும் கஷ்டங்கள் என் கண்முன்னே வந்து போகின்றன நவாஸ்..

உங்கள் வார்த்தைகள் என்னை துவைக்கின்றன.

எனக்கும் வந்ததால்தான் இந்த பதிவு செய்யது

sakthi said...

வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா?///

superb

sakthi said...

"நம் குழந்தைகள், நம் வழியாக வந்தவர்கள். ஆனால் நமக்காக வந்தவர்கள் இல்லை. அவர்களுடைய வாழ்வை வாழ வந்தவர்கள். நம்மை வாழ்விக்க வந்தவர்களில்லை. எதிர்பார்ப்பு இல்லையெனில் ஏமாற்றமும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால், முதுமையை இரு கரம் நீட்டி வரவேற்கலாம்" என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறிக்கொள்ளும் அவல நிலை தான் இன்றைய ஒரு சில பெற்றோர்களின் நிலை.

arumai

sakthi said...

நீ பிறப்பதற்கு தவமாய் தவமிருந்து
பிறந்ததும் அளவற்ற மகிழ்சியில் திழைத்து
தவழ்ந்தபோது உன்னுடன் தவழ்ந்து
நீ நடைபழகும்போது விரல்தந்து
ஓடியபோது கூடவே ஓடி

pinnitenga

sakthi said...

மனிதா மரபுகளை மறந்துவிடாதே
மனிதத்தை இழந்து விடாதே

nice quotes

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

மனிதா மரபுகளை மறந்துவிடாதே
மனிதத்தை இழந்து விடாதே

nice quotes

வாங்க சக்தி உங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

ஹேமா said...

// வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா? //

செய்யது அகமது,நீங்களே சொல்லிவிட்டீர்கள்.இதைவிட வேறென்ன சொல்ல இருக்கு.
பெற்றோர்கள் கண்முன் தெய்வங்கள்.வழிகாட்டிச் செல்லும் நடத்துனர்கள்.அருமையான பதிவு.

ஓய்வில் இருந்தபடியால் பிந்திய பின்னூட்டம்.

S.A. நவாஸுதீன் said...

ஹேமா said...

செய்யது அகமது,நீங்களே சொல்லிவிட்டீர்கள்.இதைவிட வேறென்ன சொல்ல இருக்கு.
பெற்றோர்கள் கண்முன் தெய்வங்கள்.வழிகாட்டிச் செல்லும் நடத்துனர்கள்.அருமையான பதிவு.

ஓய்வில் இருந்தபடியால் பிந்திய பின்னூட்டம்.

வாங்க ஹேமா. ஓய்வு நாட்கள் சிறப்பாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். பெற்றோரை மதிக்காத வாழ்க்கை என்ன தரப்போகிறது.

எதிர்காலத்தில் அவர்களின் அதே வாழ்க்கை திரும்ப கிடைக்கும், இவர்களின் பிள்ளகளைக்கொண்டு.

cute baby said...

இந்த பதிவை படிக்கும் போது எனக்கு ஒரு கதை நினைவு வருகிறது நண்பா.

சுருக்கமாக:‍‍‍‍‍ தன் தந்தை இறந்த உடன் மகன் அவருக்கு என்று ஒதிக்கிய பிச்சை பாத்திரத்தை குப்பையில் போடும் போது அவனின் குழந்தை சொன்னதான் அப்பா அதை குப்பையில் போடாதே பிறகு நான் அதை உனக்கு தருகிறேன் என்று.

தன்வினை தன்னை சுடும்.

அருமையான எடுத்துக்காட்டு க்யூட் பேபி

தேவன் மாயம் said...

இத்தகைய மதிப்புள்ள பெற்றோரை நாம் பேணி காக்கவேண்டாமா. சிந்தித்து பார் செயல்படுத்திப்பார் சொர்க்கத்தை அடைவாய் நிச்சயமாக///
உண்மைதான் நண்பரே!!

தேவன் மாயம் said...

/நீ பிறப்பதற்கு தவமாய் தவமிருந்து
பிறந்ததும் அளவற்ற மகிழ்சியில் திழைத்து
தவழ்ந்தபோது உன்னுடன் தவழ்ந்து
நீ நடைபழகும்போது விரல்தந்து
ஓடியபோது கூடவே ஓடி
பசித்து அழுதபோது பதறி எழுந்து///

நினைவில் நிற்கும் வரிகள்!!

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

இந்த பதிவை படிக்கும் போது எனக்கு ஒரு கதை நினைவு வருகிறது நண்பா.

சுருக்கமாக:‍‍‍‍‍ தன் தந்தை இறந்த உடன் மகன் அவருக்கு என்று ஒதிக்கிய பிச்சை பாத்திரத்தை குப்பையில் போடும் போது அவனின் குழந்தை சொன்னதான் அப்பா அதை குப்பையில் போடாதே பிறகு நான் அதை உனக்கு தருகிறேன் என்று.

தன்வினை தன்னை சுடும்.

வாங்க Cute, சரியாய் சொன்னீங்க

S.A. நவாஸுதீன் said...

rose said...

அருமையான எடுத்துக்காட்டு க்யூட் பேபி

I do Agree

S.A. நவாஸுதீன் said...

thevanmayam said...

இத்தகைய மதிப்புள்ள பெற்றோரை நாம் பேணி காக்கவேண்டாமா. சிந்தித்து பார் செயல்படுத்திப்பார் சொர்க்கத்தை அடைவாய் நிச்சயமாக///
உண்மைதான் நண்பரே!!

வாங்க தேவன், நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

வேத்தியன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள்...

gayathri said...

நீ கட்டிய வீட்டில் ஒருமூலையிலாவது வாழலாம்
என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்
வாஞ்சயுடன் வந்து சொல்கிறாயே
இனி நீங்கள் சந்தோசமாக இருக்கலாம்
முழு சுதந்திரமாய் முதியோர் இல்லத்தில்

inniku namma, namma amma appava moothiyor illathula poi iruka sonna naliku nampalukkum athey nelai thanrathu neyapakutha vachikonga pa.

gayathri said...

நீ கட்டிய வீட்டில் ஒருமூலையிலாவது வாழலாம்
என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்

ithan thai pasamkarthu

gayathri said...

எதிர்பார்ப்பு இல்லையெனில் ஏமாற்றமும் இல்லை

sariya sonnega anna

gayathri said...

வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா?

athane ethirpakkalama

gayathri said...

anna unga blogla iranthavathu muraiyaga me they 50 anna

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

anna unga blogla iranthavathu muraiyaga me they 50 anna

எங்கடா என் தங்கச்சியக் காணோமேன்னு தேடிகிட்டு இருந்தேன். லேட்டா வந்தாலும் Latest a வந்துட்டேமா. 50 போட்டதற்கும் வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

inniku namma, namma amma appava moothiyor illathula poi iruka sonna naliku nampalukkum athey nelai thanrathu neyapakutha vachikonga pa.

சரியா சொன்னேமா

Suresh said...

உங்க பதிவு மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

Suresh said...

@ S.A. நவாஸுதீன்

// நல்ல ஒரு அருமையான அலசல். //

நன்றி தோழா

// புதிய இளைஞர்களின் வருகை இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு தேவைதான் என்றபோதிலும் இது உத்தரவாதம் இல்லாத ஒன்று. இருந்தாலும் வேற வழி இல்ல, நம்பித்தான் பார்ப்போமே.//

நிங்க சொல்வது சரி தான் ஆனா நம்பி பாழாய் போண அரசியல்வாதிக்கு மாற்றாய் படித்த நல்ல எண்ண்ங்களை கொண்ட இளைஞனை நம்பலாம் எல்லாம் ஒரு நம்பிக்கையே