Lilypie

Sunday, September 6, 2009

என் தமிழ்


தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா..' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்


(எழுதியவர்: திரு. பழனி,  இது அவரின் வலைப்பூ.)

45 comments:

SUFFIX said...

Wow!! நல்லா இருக்கே..

SUFFIX said...

விடைபெறும்போது Tata..Bye Bye!!

இராகவன் நைஜிரியா said...

அருமைங்க .. எங்கோ படித்திருந்தாலும், நினைவில் நிற்க வைத்த கவிதைங்க.

Unknown said...

//(எங்கோ படித்தது, எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.)// நான் இன்று தான் முதல் முதலாக இப்படி ஒரு கவிதை படிக்கிறேன். ரொம்ப நல்லாயிருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

//குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் //

அருமை அருமை.... பாராட்டுக்கள் நண்பா

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு நண்பா.நானும் இப்பதான் படிக்கிறேன்.நல்லா இருக்கு கவிதை.

SUMAZLA/சுமஜ்லா said...

//கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …! //

நெகிழ்வாய் இருக்கிறதே என்று நினைத்து படித்தால், கடைசி அம்மா என்னும் வார்த்தை டச்சிங் டச்சிங்.....

coolzkarthi said...

அண்ணா மிகவும் ரசித்தேன்....மிக அழகு.......

Menaga Sathia said...

கலக்கலான கவிதை.

பாலா said...

ஆமாம் இத நான் முன்னமே எங்கோ படித்த நியாபகம் நவாஸ்

நல்லா இருக்கு

Suresh Kumar said...

நம்மை சிந்திக்க வைக்கும் நமது தமிழ் அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

good, நல்லாயிருக்க்கு நவாஸ்

sarathy said...

//குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் //

super navas...

SK said...

எப்போ படிச்தையும் நினைவு வெச்சு எழுதி இருக்கீங்க.. அருமை

Anonymous said...

//குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்//

உடலில் ஊறிப்போன உண்மையின் வெளிப்பாடு தாய் மொழி...

குத்தியது முள்ளில்லை
குத்திக் காட்டியது என் தமிழ்....இந்த வரிகள் கவிதைக்கு வைரக்கீரீடம்..

Anonymous said...

எங்க படிச்சா என்னங்க இங்க இன்று எங்களுக்கு இடுகையிட்டு தமிழ் பயிலுங்கள் என்று குத்திக்காட்டிடீங்க...

Jaleela Kamal said...

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!



//இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா..' என்று அலறினேன் //


நவாஸ் எங்கு படித்தால் என்ன , இப்படி எடுத்து போடுவதால் பல பேருக்கு தெரிகிறது.

ரொம்ப அருமையான வரிகள்.

Arun said...

"யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

அ.மு.செய்யது said...

யோசிக்க வைத்த கவிதை...வித்தியாசமான பகிர்வு...

அதிரை அபூபக்கர் said...

அருமையானது. எங்கோ படித்தாலும்.. நல்ல கவிதை..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

வால்பையன் said...

”நச்”சுன்னு சொல்லியிருக்கார்!

பகிர்ந்தமைக்கு நன்றி!

GEETHA ACHAL said...

அருமையான கவிதை...சூப்பாராக இருக்கு..

நட்புடன் ஜமால் said...

அட்டகாசமாக சொல்லியிருக்கார்


நல்ல பகிர்வு.

"உழவன்" "Uzhavan" said...

எழுதியவர் யாரென்று தெரியாது எப்போதோ படித்து ரசித்த கவிதை. கவிதை அருமை. வாழ்த்துக்கள் பழனி :-)

SUFFIX said...

தங்களை ஒரு தொடர்பதிவிற்க்கு அன்போடு இங்கே அழைத்திருக்கின்றேன் நவாஸ்!!

gayathri said...

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்

super anna

அப்துல்மாலிக் said...

யார் எத்தனை முறை படித்தாலும் பிளாக்கில் அப்டேட் செய்து அதை பொதுவில் அறிமுகப்படுத்துவதால் மென்மேலும் இது நிறைய பேரிடம் சேரும்

நல்ல பகிர்வு மச்சான்

S.A. நவாஸுதீன் said...

கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த் நன்றிகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_09.html

பாருங்க....

Unknown said...

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா..' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்

நல்ல வரிகள் இதை எழுதிய பழனி அவர்களுக்கும் இந்த கவிதையை எடுத்து சொன்ன உனக்கும் வாழ்த்துக்கள் மச்சான்.

சத்ரியன் said...

//இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா..' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்//

கவிஞருக்கு,

சாதுவாக வந்து,'ந‌ச்'சென முகத்தில் குத்தும் வரிகள்.

நெஞ்சில் தைக்கும் கருத்து.
எப்பொதெல்லாம் தாய்மொழியில் 'நஞ்சு' கலந்துப் பேசினாலும், ஞாபகம் வரும் வரிகள்.!இன்னும் எழுதலாம் இதைப்பற்றி. அது கவிதையை விடவும் பெரியதாகி விடும்.

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு

ரொம்ப நல்லாயிருக்கு.

ஹேமா said...

நவாஸ்,தமிழ் பேசுறோம் என்று சொல்லிக் கொண்டு ஆங்கிலத்துக்குள் அப்பப்ப தமிழ் கலந்து பேசுறவங்களுக்கு நல்ல அடி.
நல்ல கவிதை.

Admin said...

அருமையான வரிகள்

S.A. நவாஸுதீன் said...

நன்றி - அக்பர் (எங்கேடா ஆளையேக் காணோம்)

நன்றி - சத்ரியன் (மனம் திறந்து பாராட்டியதற்கு, தொடர்ந்து வரனும்)

S.A. நவாஸுதீன் said...

நன்றி - நேசமித்ரன் (உங்களின் “கிகோலோவும் எஸ்கார்ட் பெண்ணும்” படித்து மிரண்டு போய் இருக்கிறேன்) உங்களின் வருகை மிகுந்த சந்தோசத்தை தருகிறது.

நன்றி - ஹேமா

நன்றி - சந்ரு

ஷண்முகப்ரியன் said...

கவிதிஅ அருமை,நவாசுதீன்.தமிழ் அவரை மட்டும் குத்தவில்லை,நம்மையும்தான்.

தமிழ் அமுதன் said...

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்//

....arumai

அன்புடன் மலிக்கா said...

நல்ல சிந்தனையுள்ள மனிதர்போலும்

படித்தவகைகளை பதிந்தது
அதை
நாங்கள் வந்து படித்தது
அருமை

Ad Nawas said...

நல்ல கவிதை!

S.A. நவாஸுதீன் said...

நன்றி - ஷண்முகப்ரியன்
நன்றி - தல
நன்றி - அன்புடன் மலிக்கா
நன்றி - அஹமது நவாஸ் - புதுசா எழுத ஆரம்பிச்சிட்டீங்க - பட்டைய கெளப்புங்க (நான் செய்யது அஹமது நவாஸ்)

rose said...

kalakkal thalaiva

அன்புடன் அருணா said...

நல்ல பகிர்வு!பூங்கொத்து!

S.A. நவாஸுதீன் said...

நன்றி - ரோஸ்
நன்றி - அன்புடன் அருணா