Monday, August 31, 2009

“இந்தியாவில் வறுமைக் கோடு” - பகுதி - 2

விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் அதிக இழப்பில்தான் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம். அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும்.

(அதிர்ச்சிகள் தொடரும்)


பகுதி - 1

******************************************
விவசாயிகள் மட்டுமல்ல, உத்திரவாதமான வேலையில்லாமல் நகரத்தில் அமைப்பு சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரமும் சரிகிறது (உதாரணம், அசோக் லேலாண்ட். இங்கு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் நிரந்தர ஊழியர்கள் பல மடங்கு குறைக்கப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் குறைந்த எண்ணிக்கையில். ஆக உற்பத்தி அதிகரித்துள்ளது ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது). இதே நேரத்தில் சிறு தொழில், சில்லறை வணிகம் போன்ற அதிக வேலை வாய்ப்பு தரும் (விவசாயத்தை அடுத்து) துறைகள் வீழ்ந்து வருகின்றன.

அதுமட்டுமா, உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மிக அதிகமாக உருவாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த அடிப்படை உரிமைகளும் கிடையாது. (கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ, கால் டாக்ஸி, நகர சுத்திகரிப்பு மற்ற பிற சேவை வழங்கும் துறைகளில்). இவர்களின் சம்பளம் ஐயோ பாவம் கேட்கவே வேண்டாம், எந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது.

இதே நேரத்தில் மிக குறைவான சதவீதமுள்ள ஒரு வர்க்கம் (தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்கள் போன்று) உருவாக்கும் மூலதன சுழற்சி விலைவாசியை ஊதிப் பெருக்குகிறது. இதனால் அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை சாதரண ஏழை மக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்கிறது. விலை உயர்வு, செயற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகள், மருத்துவம், கல்வி. இதெல்லாம்  மறுக்க முடியாத உண்மைகள்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் சரி. வறுமைக்கோடு என்றால் என்ன? அதன் அளவீடு என்ன?

Average earning of an Indian - US$ 440 per year or about (This is based on a GDP of US$ 440 billion and 1 billion people)

Approximately Rs. 1,760/per month/ **

அதிகபட்சம் 2,000/- ரூபாய் என்றே வைத்துக்கொள்வோம், இதை வைத்து என்ன செய்ய முடியும்?

The World Bank's definition of the poverty line, for under developed countries, like India, is US$ 1/day/person or US $365 per year. As per this definition, more than 75% of all Indians are, probably, below the poverty line!

இதன்படி நகரங்களில் ஒரு மாதத்துக்கு 1,440/- ரூபாய், அதாவது ஒரு நாளைக்கு 48 ரூபாய் சம்பாதித்தால் போதும் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளதாக அர்த்தம். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் கூட இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள்தான். இதே விசயம் கிராமப் புறங்களில் 1,500/- ரூபாய்.

வறுமைக் கோடு என்பதற்கு அரசு என்ன சொல்கிறது?

இங்கே படியுங்கள்

"The official estimates of the poverty line are based on a norm of 2400 calories per capita per day for rural areas and 2100 per capita per day for urban areas." This goes back to the 1970s; at that time, we decided to measure poverty levels by considering a minimum nutritional level. More accurately, the measure was the amount of money required to buy food equivalent to this nutritional level. If you earned more than this amount, you were above the poverty line"

பெரிய மனுஷங்க என்ன சொல்ராங்கன்னா, 2400 கலோரி சத்துள்ள உணவு வாங்கும் அளவு ஒருவர் சம்பாதித்தால் போதும் அவர் வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர். இந்தியாவில் வறுமை மிக வித்தியாசமான முறையில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஒருவரது தனி நபர் வருமானம் 2400 கலோரி மதிப்புள்ள உணவை வாங்கும் அளவு இருந்தால் அவர் ஏழையல்ல. ஒருவர் என்ன சம்பாதிக்கிறார் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறதே ஒழிய, அவரால் உணவை வாங்க முடிகிறதா என்பது கவனம் பெறவில்லை. அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது.


இந்திய அரசியல் சாசனம் நீதியை வலியுறுத்தும் கருத்துகளை அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது. அந்தப் பார்வையில் அரசுதான் மக்களுக்கு வீடு, சுகாதாரம், கல்வி,... உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இந்த கடமையை அரசு நிறைவேற்றுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் நினைத்துக் கொள்ளப்படுகிறது.


இதெல்லாம் கிடைத்து விடுகிறது என்ற ஊகத்தால், உணவுப் பொருள் வாங்க மட்டுமே ஒருவர் சம்பாதிக்கிறார் என்றும், உணவுப் பொருள் வாங்கத் தேவையான பணத்தை ஒருவர் சம்பாதிக்கவில்லை என்றால் ஏழை என்றும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன, ஒருவரது சம்பளத்தில் பெரும் பகுதி அரசு வழங்க வேண்டிய விஷயங்களுக்காக செலவிடப்பட்டு விடுகிறது. அரசு கடமையை நிறைவேற்றாத நிலையிலும், ஏழ்மை தொடர்பான பழைய வரையறை இன்னமும் ஏன் பின்பற்றப்படுகிறது?

ஏழ்மையை அகற்ற செயல்படுத்தப்படும் அரசு செயல் திட்டங்கள் மனம் போன போக்கில் உள்ளன. உதாரணம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று ஒழுங்கற்ற முறையில் ஏழைகள் பிரிக்கப்படுகின்றனர். நல உதவிகள் வழங்குவதும் மனம் போன போக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டு வேலை செய்யும் பெண் கூட இதைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பார். அவரது குடும்பம் கூட வறுமையான குடும்பம், ஆனால் அரசு புள்ளி விவரப்படி அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரமாட்டார். ஆக, இது போதுமே அரசின் போலியான வரையறையை வெளிச்சம் போட்டுக் காட்ட. அரசு அந்த பாத்திரம் கழுவும், தனது பிள்ளைகளை படிக்க வைக்க வழியின்றி வேலைக்கு அனுப்பும், அந்தப் பெண்ணைக் கூட வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் நிலைதான் உருவாகிறது.

ஆண்டு தோறும் ஏற்படும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய தேவைகளான இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவற்றின் விலை உயர்வு தட்டுப்பாடு, இவற்றை அடிப்படையாகக் கொண்டு வறுமைக் கோடு தீர்மாணிக்கப்படவில்லை. பிறகு எப்படி இந்த தகவல் சரியானதாக இருக்கும்.

ஏழைகளின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் எந்த அரசும் எந்தக் காலத்திலும் அனுமதி கேட்டதில்லை. கிராமப்புற ஏழைகளின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த பரிசோதனையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதே நேரம், முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் பாதி கடனை வாங்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏழைகள் அல்ல. அப்படியானால் ஏழைகள் யார். 40% நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். 45% சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்கள்தான் உணவு தானியங்களை வாங்குகிறார்கள். 7.5% பேர் கிராமப்புற கைவினை கலைஞர்கள். எஞ்சியவர்கள் எல்லாம் மற்றவர்கள்தான். 85% ஏழைகளுக்கு நேரடியாக நிலப் பிரச்சினை உள்ளது. அரசின் செயல்திட்டத்தில் இந்தப் பிரச்சினை எந்தக்காலத்திலும் இடம்பிடிக்கவில்லை. கிராமப்புற கைவினை கலைஞர்கள்கூட நிலமின்றியே இருக்கின்றனர்.

வளர்ந்த வல்லரசு நாடுகளில் வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்பதற்கு யோசித்து வருகிறார்கள். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே (அடுத்தவர்) தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நம்மவர்களின் கணிப்பு.

இதில் விஷேசம் என்னவென்றால் 1977 லிருந்து 1987 வரையான வருடங்களில் தான் வறுமை மிக கடுமையாக குறைந்துள்ளது (அந்த போலி வரையறைப்படி). உறுதியாக இந்த வருடங்களில் உலகமய, தாராளமய கொள்கைகள் இந்தியாவுக்குள் வரவில்லை. இதில் ப்ளானிங் கமிசன் 19% வறுமைக் கோடுக்கு கீழே என்கிறது, தேசிய கணக்கீட்டு நிறுவனம் (NSS) 36% என்கிறது. ஆக , இவர்களின் விளக்கமும், புள்ளிவிவரமும் உரிக்க உரிக்க வெங்காயம் கதைதான்.

அட போங்கப்பா!




34 comments:

அதிரை அபூபக்கர் said...

வறுமையைக்கோடைப்பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன்..நன்றி.

நட்புடன் ஜமால் said...

மச்சான் செம அலசல்டா

நிறைய தகவல்கள் திரட்டி இருக்கே.

ஷ‌ஃபிக்ஸ் said...

You have really worked hard!! பதிவை படிக்கும்போது புரிகிறது!!

ஷ‌ஃபிக்ஸ் said...

//நிரந்தர ஊழியர்கள் பல மடங்கு குறைக்கப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். //

இது தான் exploitation, பலகீனத்தில் சுயலாபம் அடைவது, மிகக் கொடுமை!!

ஷ‌ஃபிக்ஸ் said...

//இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்பதற்கு யோசித்து வருகிறார்கள். //

அமேரிக்காவில் முதலாளித்துவ தத்துவம், அதோட பாதிப்பை நாம் பார்த்தாச்சு, நாம என்ன செய்யப் போகிறோமோ!!

ஷ‌ஃபிக்ஸ் said...

பாராட்டுக்கள் நவாஸ், தோழி தமிழரசியோட விண்ணப்பத்தை பொறுப்புடன் ஏற்று, அழகிய முறையில் நல்ல ஒரு ஆக்கத்தினை எங்களுடன் பகிர்ந்ததற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள். Thanks a lot!!

அ.மு.செய்யது said...

2090ல் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிடுவதாக சுஜாதாவின் கற்பனை:

பங்கு சந்தையில் வைக்கோலின் மதிப்பு கிடுகிடுவென உயர்வு.மெரினாவில் தங்கம் கொட்டி கிடக்கிறது அல்ல ஆள் இல்லை.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் வறுமையை ஒழிப்போம் என்று பாரத பிரதமர் சூளுரை.


ஹமாரா பாரத் மகான் ஜி...

இந்த கட்டுரைக்கான உங்கள் மெனக்கெடலுக்கு பாராட்டுகள். பதிவு தெளிவாக வந்திருக்கிறது.
செய்திகளை சேகரித்து எழுத ஆரம்பித்து விட்டீர்...குவாலிட்டி !!!!!!

Jaleela said...

பாராட்டுக்கள் நவாஸ், வறுமை கோட்டை பற்றி புள்ளி விபரம், நல்ல தகவல், நல்ல தொகுப்பு.

தெளிவான‌ விரிவான‌ ப‌திவு

ஷ‌ஃபிக்ஸ் said...

நவாஸ், இதன் முதல் பகுதி குட் ப்ளாக்ஸ்ல வந்ததற்க்கு வாழ்த்துக்கள்!! கலக்குங்க தல‌.

தமிழரசி said...

இந்த கட்டுரைக்கான உங்கள் மெனக்கெடலுக்கு பாராட்டுகள்

.........மெனக்கெடல் அல்ல செய்யது கடைசியில் அடபோங்கப்பா என்று மனக்கெடல் நடத்தியிருக்கு இந்த அலசல் அதனால் இந்த வார்த்தையை நீக்குங்கள்...

தமிழரசி said...

பயனுள்ள பதிவல்ல என்ன பயன்பாட்டில் உள்ளோம் எனச்சொல்லும் பதிவு..உங்கள் உழைப்புக்கு பலனாய் இதை அறியாமல் இருந்த எங்கள் அறியாமை அழிந்தது...

தமிழரசி said...

இதில் விஷேசம் என்னவென்றால் 1977 லிருந்து 1987 வரையான வருடங்களில் தான் வறுமை மிக கடுமையாக குறைந்துள்ளது (அந்த போலி வரையறைப்படி). உறுதியாக இந்த வருடங்களில் உலகமய, தாராளமய கொள்கைகள் இந்தியாவுக்குள் வரவில்லை. இதில் ப்ளானிங் கமிசன் 19% வறுமைக் கோடுக்கு கீழே என்கிறது, தேசிய கணக்கீட்டு நிறுவனம் (NSS) 36% என்கிறது. ஆக , இவர்களின் விளக்கமும், புள்ளிவிவரமும் உரிக்க உரிக்க வெங்காயம் கதைதான்.


ஆம் அதை நீங்கள் தோலுரித்து தெளிவாக்கிட்டீங்க நவாஸ்...இப்படி பொய்யான புள்ளி விவரங்களில் நம் விலாசங்களும் அழிக்கப்படுகின்றது..

தமிழரசி said...

//ஏழ்மையை அகற்ற செயல்படுத்தப்படும் அரசு செயல் திட்டங்கள் மனம் போன போக்கில் உள்ளன. உதாரணம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று ஒழுங்கற்ற முறையில் ஏழைகள் பிரிக்கப்படுகின்றனர். நல உதவிகள் வழங்குவதும் மனம் போன போக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டு வேலை செய்யும் பெண் கூட இதைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பார். அவரது குடும்பம் கூட வறுமையான குடும்பம், ஆனால் அரசு புள்ளி விவரப்படி அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரமாட்டார். ஆக, இது போதுமே அரசின் போலியான வரையறையை வெளிச்சம் போட்டுக் காட்ட. அரசு அந்த பாத்திரம் கழுவும், தனது பிள்ளைகளை படிக்க வைக்க வழியின்றி வேலைக்கு அனுப்பும், அந்தப் பெண்ணைக் கூட வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் நிலைதான் உருவாகிறது. //


இந்த அடிப்படையில் வறுமைக் கோடு கணக்கெடுக்கப்பட்டால்? இன்றைய இந்தியாவின் தரம்?

தமிழரசி said...

SOMETHING REALLY MAKING WONDER WHICH I NOT EXPECT!!!

உங்கள் உழைப்பு இந்த பதிவுக்கு பாராட்டவேண்டியது..இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தின் நிலையோ என்று கேள்விக்குறியிலிருந்து !!!!ஆச்சிரியக்குறியாகுமோ?

U DID U R JOB WITH FULL PERFECTION...


BUT THE COUNTRY ?

gayathri said...

anna rompa azama yoschi ezthi iruekenga ungal kadinamana usipirkku vazthukkal

Mrs.Faizakader said...

இந்தியாவின் நிலை பற்றி நிறைய தகவல் சேகரித்து போட்டுயிருக்கிங்க...

sarathy said...

மிகவும் ஆழமான கருத்தாக்கம்...

வாழ்த்துகள் நவாஸ்...

By the way
திரு.மாண்டேக் சிங் அலுவாலியா
உங்களுக்காக காத்துக்கொண்டு
இருக்கிறார்...

சீக்கிரம் இந்தியா கிளம்புங்க..

பிரியமுடன்...வசந்த் said...

ரொம்ப கஷ்டமாயிருக்கு நவாஸ்

மிகவும் கடுமையான உழைப்பு தெரிகிறது

நாம் எந்த நிலையில் இருக்கிறோம் இருக்கப்போகிறோம் என்பதை மிகவும் தெளிவாக உணரச்செய்தது

வாழ்த்து மற்றும் நன்றிகள் நவாஸ்

பிரியமுடன்...வசந்த் said...

தமிழரசி தொடங்கிவைத்த தொடர் சிறப்பாக செல்கிறது யார் அடுத்து தொடர்வாங்கன்னு சொல்லலியே....

நான் அவங்க எழுத சொன்னதுல இருந்து எஸ்கேப்பாகிட்டே இருக்கேன் என்னைக்கு கழுத்துக்கு கத்தி வைக்கப்போறாங்கன்னு தெரியலை அதுவரைக்கும் நிம்மதி..

அபுஅஃப்ஸர் said...

மச்சான் குட் குவாலிட்டியான பதிவு

படித்தேன் வியந்தேன்... ஒரு தேர்ந்த பொருளாதார நிபுணரின் எழுத்துக்கள் போல் அதிகம் தேடி நிறைய தகவல்களை அப்பட்டமாக படம்பிடித்து காட்டிருக்கே

அபுஅஃப்ஸர் said...

//பிச்சைக்காரர்கள் கூட இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள்தான். //

அப்போ வறுமைக்கோடு என்று நிர்ணயித்து அரசு கணக்கிலடங்கா தானியம் கொள்முதல் செய்வதெல்லாம் எங்கே செல்கிறது???? யோசிக்க வெச்சிட்டே மச்சான்

அபுஅஃப்ஸர் said...

//ஏழைகளின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் எந்த அரசும் எந்தக் காலத்திலும் அனுமதி கேட்டதில்லை. //

அவங்களா இப்படித்தான் இருக்கும் என்று முடிவு பண்ணிக்கிறாங்க.. அந்த ஏழைகளை ஓட்டுவங்கியாகவே பய்ன்படுத்த விரும்புகிறனர்


//ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நம்மவர்களின் கணிப்பு.
//

அரசும் தனியார் துறைகளை ஊக்குவிப்பதில்தான் குறியாக இருக்கிறது

//இவர்களின் விளக்கமும், புள்ளிவிவரமும் உரிக்க உரிக்க வெங்காயம் கதைதான்.//


சரியா சொன்னே மாமு
நம்மால் இப்படி பதிவு போட்டு மனதை தேத்திக்கதான் தோணுமே த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌ முடியும்..


வ‌றுமைக்கோடு விள‌க்க‌ம் தெளிவா இருந்த‌து... சாதார‌ண‌ ம‌க்க‌ள் புரிந்துகொள்ளும் அள‌விற்கு....

வாழ்த்துக்க‌ள் ம‌ச்சான்

சப்ராஸ் அபூ பக்கர் said...

வறுமை கொடு பற்றி நல்ல தகவல் அண்ணா.... வாழ்த்துக்கள்....

ஆ.ஞானசேகரன் said...

வறுமை கோடைப்பற்றியும் அவற்றின் அவல நிலைகளைப்பற்றியும் அழகா சொல்லியுள்ளீர்கள் நண்பா

வால்பையன் said...

இந்தியாவில் சரியான முறையில் வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை,
சராசரி வருமானம் சுத்த ஹம்பக்!
அம்பானியின் ஒரு நாளைய வருமானம், ஒருவனது வாழ்நாள் வருமானமாக இருக்கலாம்!
இதில் சராசரி ஒத்துவருமா?

சரி உங்க வீட்டு ரேஷன் கார்டில் மாத வருமானம் எவ்வளவு போட்டுள்ளீர்கள்!?
அது உண்மையா?

ஜீவன் said...

//ஆண்டு தோறும் ஏற்படும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய தேவைகளான இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவற்றின் விலை உயர்வு தட்டுப்பாடு, இவற்றை அடிப்படையாகக் கொண்டு வறுமைக் கோடு தீர்மாணிக்கப்படவில்லை. பிறகு எப்படி இந்த தகவல் சரியானதாக இருக்கும். ///

உண்மைதான் ...! நம்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு,பிறப்பு ,இறப்பு், கணக்கெடுப்பு இவற்றிலே ஏகப்பட்ட சொதப்பல்கள் ...! இதில் வறுமை கோ்ட்டு கணக்கெடுப்பு என்பது எதோ பெயரளவில்தான் இருக்கும்.

///அடபோங்கப்பா/// இப்படி சொல்லிட்டா எப்படி பாஸ் நாமதான் நின்னு அடிச்சு ஆடனும் ...!!!

பா.ராஜாராம் said...

நல்ல முதிர்ச்சியான விவர சேகரிப்பு.புரியும் படியான பகிர்வு நவாஸ் இது.நிறைய கேள்விகளும்,மலைப்பும் விரிகிறது.இயங்கவும்,இயக்கவும் தேவையான சுயபரிசோதனை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம்.தனி மனிதனுக்கே தேவையாய் இருக்கிற ஒரு விஷயம் ஒரு வளரும் நாட்டிற்கு எவ்வளவு அத்யாவசியம்.(வளரும் நாடு?)போங்கப்பா..எல்லோருக்குமான,யதார்த்தமான ஆதங்கம்தான் நண்பா...
உண்மையில் இது நல்ல தொடக்கம் நவாஸ்.விழிக்கட்டும் முதலில்.பிறகு விடியும்.

Geetha Achal said...

இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html

அன்புடன்,
கீதா ஆச்சல்

" உழவன் " " Uzhavan " said...

நல்ல அலசல். பாராட்டுக்கள்

S.A. நவாஸுதீன் said...

நன்றி - அபூபக்கர்
நன்றி - ஜமால்
நன்றி - ஷஃபி
நன்றி - செய்யது
நன்றி - சகோதரி ஜலீலா
நன்றி - தமிழரசி (சொன்னதை ஒழுங்கா செய்த திருப்தி)உன்னுடைய பாராட்டில் கிடைத்தது.
நன்றி - காயு
நன்றி - சகோதரி பாஃயிஜா காதர்
நன்றி - சாரதி
நன்றி - வசந்த்
நன்றி - அபூ அஃப்சர்
நன்றி - சப்ராஸ் அபூபக்கர்
நன்றி - ஞானசேகரன்
நன்றி - வால் (ஊரில், வீட்டில் கேட்டு சொல்றேன் தல)
நன்றி - ஜீவன் (அடிச்சு ஆடுவோம் தல)
நன்றி - பா.ரா. (மிக விரைவில் சந்திப்போம் நண்பா)
நன்றி - கீதா ஆச்சல் உங்களின் விருதுக்கு
நன்றி - உழவரே

SUMAZLA/சுமஜ்லா said...

எதுல இருந்து எடுத்தீங்க, இவ்ளோ மேட்டர்ஸ்!

அப்புறம், கமெண்ட்ஸ் லின்க் தனி விண்டோவில் திறக்குதே, எப்படி?

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

அன்புடன் மலிக்கா said...

வருமைகோட்டைப்பற்றி விளக்கிய விதம் அருமை

thendralsaravanan said...

நவாஸ் புள்ளிவிவரத்தை அழகா தொகுத்து வழங்கியிருக்கிங்க! வாசிப்பில் நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன்!
பாரட்டுக்கள் ப்பா......இவ்வளவு பொறுமையானவரா நீங்க!!!இந்த ஆச்சரியத்துடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!