வள்ளல்பிரான் கூறினார்.
நான் தேசப் படத்திலே தேடிப் பார்த்தேன்
தீர்க்க ரேகைக் கோடு இருந்தது அட்ச ரேகைக் கோடு இருந்தது
பிடி சங்கிலி போட்ட பெண்பிள்ளை அரசு இலவச டீவி தூக்கி ஆட்டோ ஏறும் போதும், தீப்பெட்டி அளவுக்கு மோதிரம் போட்ட ஆள் அரசு டீவியை பைக்கிலே கட்டும் போதும் கொழுத்த பணக்காரன் விவசாயக் கடன் தள்ளுபடி பெறும் போதும் . . .
அண்ணாந்து பார்த்தேன்
அவர்கள் தலைக்கு மேலே தெரிந்தது
தேடிய கோடு அரசு அடிக்கடி சொல்லுமே அந்த வறுமைக் கோடு!
நிசமாலுமே எங்கே இருக்கிறது அது எனப் பார்த்தால் வாடிய ஏழையின் வயிற்று மடிப்பிலே வருத்தமே வடிவான அவன் முக வரிகளிலே இருந்தது !
தலை நகரின் பிளாட்பாரத்தில்
பொத்தல் போர்வைக்குள் ஆயிரம் சோதி இலவசதரிசனம் கண்டும் அந்த ஏழைகள் வீடு பேற்றைக் அறியாதவர்கள்
***************************************
தீக்குள் விரலை வைத்தால் என்னாகும் என்று பாரதியையே ஒரு வழி செய்துவிட்டு, என்னையும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச்சொல்லி தோழி தமிழரசி கொடுத்த அன்புக்கட்டளையின் வினையால் வந்த வினை. அவர் எனக்கு கொடுத்த தலைப்பு “இந்தியாவின் நேற்றைய இன்றைய நாளைய வறுமைக்கோட்டின் நிலை”
இதில் ஒரு சிறிய மாற்றத்துடன் “இந்தியாவில் வறுமைக் கோடு” என்ற பொதுவான தலைப்பில் எழுதுகின்றேன். நான் இந்த தலைப்பில் பெரும்பாலும் விவசாயிகளைப் பற்றியே சொல்லப் போகிறேன்.
அதற்கு முன்பாக சில புள்ளி விவரம்.
ஜூலை மாதம் – 36 பேர்
கடந்த 5 வருடத்தில் – 6000 பேர்
கடந்த 20 வருடத்தில் – 186,000 பேர்.
இதெல்லாம் பசுமைப் புரட்சிக்குப் பிறகு வருமானம் குரைவால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை..
நமது இந்திய தேசத்தில் தொழில் துறை எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதனால் அரசு அறிக்கையின்படி வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்போது எப்படி அவர்கள் வருமானம் குறைகிறது என்று சொல்ல முடியும்?
விவசாயிகள் வருமானம் குறையவில்லை, அதிகரித்தது. அதே சமயம் மற்ற துறையினரின் வருமானம் விவசாயிகளை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. கணினித் தொழிலாளி விவசாயியை விட அதிகம் தான் சம்பாதிப்பான். அதனால் விவசாயி ஏழையாவதில்லை. விவசாயிக்கும் வருமானம் அதிகரிக்கும், ஆனால் கணினித் தொழிலாளியை விட குறைவாக அதிகரிக்கும்.
இந்த இடத்தில் தான் அரசின் புள்ளி விவரம் முரண்படுவதையும், அதிலிருந்து பெறும் உண்மைகளையும் நாம் கவனிக்க முடியும். விவசாய இடுபொருள் வளர்ச்சி 100% அல்லது 200% மடங்கு உயர்ந்துள்ளது என்பது அரசாங்க புள்ளிவிவரம், வேறு சில NGO க்களின் புள்ளி விவரங்கள், இவற்றைத் தவிர்த்து நேரடியாக விவசாயிகள் பார்க்கும் விசயம் ஆகியன இதை உறுதிப்படுத்துகிறது.
அதே சமயம் விவசாய பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலை இரு மடங்கு குறைந்துள்ளது. ஆனால் விலைவாசி மிக அதிகமாகியுள்ளது. ஆக, இப்படி இந்தியாவின் 60% மேற்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது.
விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் அதிக இழப்பில்தான் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம். அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும்.
(அதிர்ச்சிகள் தொடரும்)
31 comments:
அட, தமிழ் டீச்சர் கொடுத்த ஹோம் ஒர்க் செய்துட்டிங்களா? அப்போ நான் தான் பாக்கியா? அவ்வ்வ்வ்வ்!!
//நான் இந்த தலைப்பில் பெரும்பாலும் விவசாயிகளைப் பற்றியே சொல்லப் போகிறேன். //
ஆமாம் நவாஸ், இவர்கள் நிலை தான் பரிதாபத்திற்க்குரியது, ஒரு புறம் சரியான விலைக் கிடைக்காமலும், மற்றொரு புறம் இயற்க்கைச் சீற்றத்தினாலும் இவர்களது வாழ்வில் தொடரும் சோகங்கள். விவசாய நிலங்கள் இன்று ப்ளாட்டுக்களாக மாறி வருவதும் இதனால் ஏற்ப்பட்ட பாதிப்பே.
நல்லதொரு பதிவு நவாஸ்..
"எலிக்கறி உண்பவனின் தேசம்(இந்தியா) எடுத்துப்போடும் ஆயிரம்
கோடிகள் இலங்கையில் அழிப்பது உயிர்களை மட்டுமல்ல!”
என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.
தொடருங்கள்...
நல்லதொரு பதிவு
நாம் மூன்று வேளையும் அள்ளி அள்ளித் தின்கிறோமே சோறு...
எப்போதாவது அதை விதைத்தவன் எவன்?
அதை அறுத்தவன் என்னவானான் என்று சிந்தித்திருக்கிறோமா?
இதோ நவாஸ் சொல்கிறார் கேளுங்கள்...
நம் அரிசியை விதைத்தவனின் சோகத்தை...
ரமதான் கரீம் நவாஸ்!நல்ல அக்கரை நிரம்பிய பதிவும்,பகிர்வும்.தொடரட்டும் நண்பா.
அண்ணாந்து பார்த்தேன்
அவர்கள் தலைக்கு மேலே தெரிந்தது
தேடிய கோடு அரசு அடிக்கடி சொல்லுமே அந்த வறுமைக் கோடு!
அருமை அண்ணா
விவசாயிகள் வருமானம் குறையவில்லை, அதிகரித்தது. அதே சமயம் மற்ற துறையினரின் வருமானம் விவசாயிகளை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
உண்மை தான்
விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது.
ஒப்பிடல் எதற்கு நமக்கு தான் ஒப்பிடாமலே தெரிகின்றதே
நெஞ்சுப் பொருக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைந்து விட்டால்.....
பதிவு உடல் உதற உயிர் பதறுகிறது!!!
எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்?
தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம் சர்வேசா?
பயனுள்ள கட்டுரை !!! பகிர்வுக்கு நன்றி !!
இன்னும் நிறைய இது போல் எழுதுங்கள் !!!
ஷஃபிக்ஸ் said...
//நான் இந்த தலைப்பில் பெரும்பாலும் விவசாயிகளைப் பற்றியே சொல்லப் போகிறேன். //
ஆமாம் நவாஸ், இவர்கள் நிலை தான் பரிதாபத்திற்க்குரியது, ஒரு புறம் சரியான விலைக் கிடைக்காமலும், மற்றொரு புறம் இயற்க்கைச் சீற்றத்தினாலும் இவர்களது வாழ்வில் தொடரும் சோகங்கள். விவசாய நிலங்கள் இன்று ப்ளாட்டுக்களாக மாறி வருவதும் இதனால் ஏற்ப்பட்ட பாதிப்பே.
உண்மை முதலில் பயிரிட நீரில்லை இப்போது நிலமுமில்லை
நீரில்லை ஆனால் நிலமுண்டு
நிலமுண்டு ஆனால் விதைக்க மனமில்லை
இதுதான் நவாஸ் இன்றைய விவசாயிகளின் மன நிலை
தொடருங்கள்
நல்ல பதிப்பு பாராட்டுகள்
good post.
வறுமைக்கோடுக்கு சிறப்பான துவக்கம் கொடுத்து உயிர் நாடியாம் விவசாயிகளின் வாழ்வை கையிலெடுத்து அழகா எழுதிருக்கே மச்சான்
நிறைய உழைத்திருக்கே....
விவசாயிகளின் மனிதக்கறி திண்ணு திளைத்துக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு எங்கே தெரியப்போகிறது எலிக்கறி திண்னும் நாட்டின் உயிர்நாடிகளை?
அருமையான கட்டுரை/அலசல் தொடரு...
ஜூலை மாதம் – 36 பேர்
கடந்த 5 வருடத்தில் – 6000 பேர்
கடந்த 20 வருடத்தில் – 186,000 பேர்.
//
உணவு தருபவனுக்கே உணவில்லாமல் தற்கொலை/பட்டினி சாவு
அதிர்ச்சி தகவல் மச்சான்
அதிர்ச்சியான தகவல் தான்...சமூக அக்கறையுள்ள பதிவு!
வள்ளல்பிரானின் மேற்கோளோடு துவங்கிய பாங்கு அருமைடா.
விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது]]
சரியா சொன்னே மாப்ளே. இதுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று அவர்களே
ஜூலை மாதம் – 36 பேர்
கடந்த 5 வருடத்தில் – 6000 பேர்
கடந்த 20 வருடத்தில் – 186,000 பேர்.
இதெல்லாம் பசுமைப் புரட்சிக்குப் பிறகு வருமானம் குரைவால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை.]]
ரொம்ப வேதனையாக இருக்குப்பா
நல்ல தகவல்... அதிர்ச்சிகரமான தகவலும் கூட..
////இந்த இடத்தில் தான் அரசின் புள்ளி விவரம் முரண்படுவதையும், அதிலிருந்து பெறும் உண்மைகளையும் நாம் கவனிக்க முடியும்.///
நல்ல ஒரு பதிவு அண்ணா.....
மிகுதியையும் தொடருங்கள் அண்ணா....
சுடும் உண்மைகள். பாராட்டுக்கள். தொடருங்கள்
//பிடி சங்கிலி போட்ட பெண்பிள்ளை அரசு இலவச டீவி தூக்கி ஆட்டோ ஏறும் போதும், தீப்பெட்டி அளவுக்கு மோதிரம் போட்ட ஆள் அரசு டீவியை பைக்கிலே கட்டும் போதும் கொழுத்த பணக்காரன் விவசாயக் கடன் தள்ளுபடி பெறும் போதும் . . .//
என்ன செய்யறது? நெல்லுக்குப் பாய்வது சில புல்லுக்கும் பாய்கிறது.
//ஜூலை மாதம் – 36 பேர்
கடந்த 5 வருடத்தில் – 6000 பேர்
கடந்த 20 வருடத்தில் – 186,000 பேர்.
இதெல்லாம் பசுமைப் புரட்சிக்குப் பிறகு வருமானம் குரைவால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை//
//ரொம்பவே அதிர்சியாக இருக்கு//
//இந்தியாவின் வறுமையால் தற்கொலை , புள்ளி விபரம்,விவசாயிகளின் நிலமை எல்லாம் படிக்கவே ரொம்ப சங்கடமா இருக்கு//
நல்ல பகிர்வு
நன்கு அலசி ஆராயப்பட்ட,அக்கறையுடன் கூடிய பதிவு !
என்னை பொறுத்தவரை நம் நாட்டின் வறுமை கோ்டு என்பது நம் நாட்டின் வறண்ட ஆறுகள்தான்!!!
நல்ல அலசல்!
விவசாயிகள் வருமானம் குறையவில்லை, அதிகரித்தது. அதே சமயம் மற்ற துறையினரின் வருமானம் விவசாயிகளை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
sariya sonnega anna
கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Post a Comment