Tuesday, August 4, 2009
ஸ்பரிசம்
ஜடத்திலிருந்து தோன்றி
ஜடத்திற்கு உயிர் தரும்
கலையில் ஒளிரும் உயிரம்சம்
மனித மனத்தை
ஸ்பரிசிக்கும்
ஸ்பரிசத்தின் பயணம்
காலத்தில் கலைக்கு வித்திடும்போது
கலை கலையாய் இல்லையேல்
அதுவும் ஜடமாய்
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு
உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.
அது என்னுள்
இன்னும் நிர்வாணமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய்
S. A. Navas
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ ]]
மிகவும் இரசித்தது இவைதாம் ...
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய்
]]
5ந்து முறைகளுக்கு மேல் படித்து விட்டேன் கடைசி பத்தியை...
இந்த வரிகளுக்குள் இருக்கும் நிதர்சணம் எனக்கு பிடிச்சிருக்கு.
நல்ல கவிதை வரிகள் நண்பா
இன்னும் நிர்வானமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய் ///////////
சூப்பர் வரிகள்
நல்ல அழகான கவிதை. ஒரு வரியை தெரிந்தெடுக்க முடியவில்லை. மிகவும் ரசித்தேன்.
//உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு//
நல்லாயிருக்கு நண்பா
2nd time vaasikkum pothu purinthathu....
nallaairukku.:)
எல்லா வரிகளும் அருமை ரசித்துக்கொண்டிருக்கேன்.
//உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
நான் உன்னை
அது என்னுள்
இன்னும் நிர்வானமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய் //
மூன்று முறை படித்த பின் தான் புரிந்தது, புரிந்ததும் தான் தெரிந்தது, இந்த வரிகளின் ஆழ, நீள, அகலம்! ரசித்தேன்!
கண்கள் மிக அழகாக இருக்கின்றது.
==ஜடத்திலிருந்து தோன்றி
ஜடத்திற்கு உயிர் தரும்
கலையில் ஒளிரும் உயிரம்சம்
மனித மனத்தை
ஸ்பரிசிக்கும்
-- துவக்கம் மிகவும் நல்லா இருக்கு நண்பரே!
கடைசி பத்தி சரியா புரியலை
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
ஏன் எனக்கு மட்டும் இதுபோல் எழுத வரமாட்டேன்கிறது?
ம்ம்... அருமை!!
கவிதை அருமையாக இருக்கு , இதெல்லாம் படித்து பார்க்க மட்டும் தான் தெரியும்,
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு
அண்ணா பின்னீட்டீங்க போங்க
முதல் இரண்டு பத்திகள் புரிய நேரம் பிடித்தது.
அடுத்த வரிகளில் நிலவரம் புரிந்து கொண்டேன்.
//உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ //
இந்த வரிகள் நல்லா இருக்கு..ரசிக்க முடிந்தது நவாஸ்.
மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்துமே மாற்றத்திற்குட்பட்டவை.
உங்களின் முதல் பதிவிலிருந்து தவறாமல் படித்து வருகிறேன்.நாளுக்கு நாள்
எழுத்தில் மாற்றம் தெரிகிறது.இன்னும் பல பரிமாணங்களை முயற்சி செய்து
பாருங்களேன். !!!
வாழ்த்துக்கள் !!!
தாய்மொழியில் எழுதப்பட்டதையே திரும்ப திரும்ப திரும்ப படித்தும் புரியாமல்... இல்லை என்னால்தான் கூர்ந்து கவனிக்க முடியவில்லையா தெரியவில்லை...
இருந்தாலும் உள்ளர்த்தம் கண்டு வியந்தேன்..
வாழ்த்துக்கள் மச்சான்
அருமையான படைப்பை கொடுக்கும் உனது எழுத்தோவியம் அதன் ஸ்பரிசம் புரியுது
அழகு அழகு அழகு ஸ்பரிசத்தை ஸ்பரிசித்த விதம் அழகோ அழகு....
மென்மையான சொல் கொண்டு மெல்லிசை ஒன்றை தீட்டிவிட்டாய்..
ஸ்பரிசம் என்று தலைப்பிட்டு
பாரிஜாதவாசம் தந்தாய்....
புனைந்ததில் புதுவிதம்..புது சுகம் இந்த ஸ்பரிசத்தின் பரவசம்.....
போப்பா.... பாராட்ட வார்த்தைகளை தேடறேன் தென்படவில்லை....
அபுஅஃப்ஸர் said...
அருமையான படைப்பை கொடுக்கும் உனது எழுத்தோவியம் அதன் ஸ்பரிசம் புரியுது
ஆம் இதை நானும் ஆமோதிக்கிறேன்......
ஹெல்லோ சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...எப்படிங்க இப்படியெல்லாம்......
//உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
நான் உன்னை
அது என்னுள்
இன்னும் நிர்வானமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய் //
மிக அற்புதமான வரிகள்
வாசித்து விழி வியந்து மெய்மறக்கச்செய்தது கவிதை
உங்களுக்கெல்லாம் கமென்ட் போடுற அளவுக்கு நான் இன்னம் வளரல சாமி
உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
நான் உன்னை
அது என்னுள்
இன்னும் நிர்வானமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய்
நேத்தைக்கு அவசரத்துல
போஸ்ட் பண்ண சொல்லீட்டேன் நவாஸ்
சரியா கவனிக்கல இப்போ சொல்றேன்
மேல உள்ள பத்தில ரெண்டு நான் வருது பாருங்க ஒன்னு தேவை இல்லை
(மேல உள்ள ஒன்னு )
அந்த மேல உள்ள நிர்வாணத்துல மூணு சுழி ண வரணும்
அப்புறம்
கவிதைல நிர்வாணம் இருக்கு கவிதை நிர்வாணமா இல்லை
நேத்தைக்கு அவசரத்துல
படிச்சுட்டு போய்டேன் இன்னைக்குதான் பார்த்தேன் அருமையா இருக்கு இருக்கு நவாஸ்
அந்த நிர்வாணம் ங்குற வார்த்தைல தான் எவளவு அர்த்தம் அசந்தேன் நவாஸ்
wow......kalakureega ponga vazhthukkal
நட்புடன் ஜமால் said...
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ ]]
மிகவும் இரசித்தது இவைதாம் ...
//
repeat
ஸ்பரிசத்தின் பயணம்
காலத்தில் கலைக்கு வித்திடும்போது
கலை கலையாய் இல்லையேல்
அதுவும் ஜடமாய் //
aam sila nerangalil kalaium jadamahum.aanaal antha jadathaium uyir pera vaipathu manithanin sparisham. unga sparisham super
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு
\\
அழகு
தமிழரசி said...
அழகு அழகு அழகு ஸ்பரிசத்தை ஸ்பரிசித்த விதம் அழகோ அழகு....
\\
நானும் கூவிக்குறேன்
//உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு//
ஊருக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு.....
// நட்புடன் ஜமால் said...
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய்
]]
5ந்து முறைகளுக்கு மேல் படித்து விட்டேன் கடைசி பத்தியை...
இந்த வரிகளுக்குள் இருக்கும் நிதர்சணம் எனக்கு பிடிச்சிருக்கு //
எனக்கு புரிய,
நான் இன்னும் வளரனும்...
அண்ணே அருமை...என்னமோ போங்க கலக்கல்.....
உயிரிலிருந்து தோன்றி என்று இருந்தால் அது நேரடியாக இருந்திருக்குமோ?
ஜடத்தில் என்பது உயிரின் ஆரம்பத்தின் முந்தைய நிலையோ ?
ஜடத்திற்கு உயிர் தரும் கலை!
கலையின் கலையால் ஏற்படும் விளைவு!
''மை'' யில் நனைந்த துரிகை வெள்ளை தாளில் ஸ்பரிசம் கொண்டு உருவாகும் ஓவியம்போல!
இதுவும் ஒரு அற்புத ஸ்பரிசம் தான்!!
நல்ல நேரம் நான் லேட்ட வந்து படித்தது, தங்களின் கவிதையையும், நண்பர்களின் பின்னூட்டங்களையும் படித்தவுடன் ஓரளவு புரிகிறது!! விளக்கம் அப்புறம் போன்ல கேட்டுக்கிறேன்!!
என்னைய மாதிரி சின்ன பசங்களுக்கும் புரிகிற மாதிரி எழுதுங்கப்பூ!! வாழ்த்துக்கள் நவாஸ், எங்கேயோ போய்ட்டீங்க!!!
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
ம்ம் நல்ல வரிகள். உங்கள் சந்தேகம் நியாயமானது.. யாரையாவது நினைத்து இதை நீங்கள் எழுதி இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலி. வாழ்த்துக்கள்
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
ம்ம் நல்ல வரிகள். உங்கள் சந்தேகம் நியாயமானது.. யாரையாவது நினைத்து இதை நீங்கள் எழுதி இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலி. வாழ்த்துக்கள்
அருமையாக எழுதி உள்ளீர்கள்.
கவிதைகளை புரியிரதுக்கும் கொஞ்சம் தெறமை வேணும். எனக்கு அது குறைவு.
நவாஸ் !!
நீங்கள்தான் நட்சத்திரங்களைக்கண்டுபிடிக்கும் போட்டியில் வெற்றி பெற்றீர்!!!
வாழ்த்துக்கள்!!
//உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.
அது என்னுள்
இன்னும் நிர்வாணமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய் //
அருமையான வரிகள்! மீண்டும் மீண்டும் படித்தேன்
//உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.
அது என்னுள்
இன்னும் நிர்வாணமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய் //
எப்படி இப்படியெல்லாம்... அழகு :-)
பாராட்டி விமர்சித்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.//
//உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.
அது என்னுள்
இன்னும் நிர்வாணமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய் //
நவாஸ்,வரிகள் அருமை என்று சொலவதைவிட மேல்.
கொஞ்ச நேரம் ஆட்டி படைச்சுருச்சு கவிதை நவாஸ்.ரொம்ப நல்லா வந்திருக்கு நண்பா..
விகடனில் வந்திருக்கு >>>>>>>>> வாழ்த்துக்கள் நவாஸ்!!
விகடனில் வந்திருக்கா...very good!!!..நான் இன்னும் பார்க்கலை நவாஸ்..வாழ்த்துக்கள் நண்பா!
அண்ணன் அவர்களுக்கு
நான் தரும் அன்பு விருதை ஏற்றுக்கொள்ளவும்
http://azurillcrafts.blogspot.com/2009/08/blog-post_23.html
//உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு //
மிக மிக அருமை..
தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.
என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...
/உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ /
கலக்கிட்டீங்க நவாஸ்!
வாழ்த்துக்கள் நவாஸ்!!
உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
super anna
தங்கள் என்னுடைய ப்ளாக் வந்து என்ன வாழ்த்தியதுற்கு மிகவும் நன்றி நவாஸுதீன்.
கண்டிப்பாக அடிக்கடி அந்த பக்கம் வாங்க...அண்ணா...
அப்பாடா ஒருவழியா திறந்துடுச்சி அண்ணா, இப்போது பரயில்லை இன்னும்கொஞ்சம் பாஸ்ட் வேணும் குறிப்புகள் திறக்க,
கவிதை வெகு சூப்பர் வரிகள் அத்தனையும் இனிமை..
Post a Comment