Lilypie

Sunday, December 6, 2009

ப்ரியம் சுழித்தோடும் வெளி


சொற்கள் புசிக்கும் வன்மௌனம்
ப்ரியத்தின் வேரில் தழையுரம்

மாறுதிசை மின்னோட்ட அதிர்வெண்ணாய்
நேசமும் நேசக்கோபமும்

வார்த்தைகள் தீராத வாதத்தின்
உலோகக்கரத்தில் சிக்கியும் இதழ்
பிரியும் ப்ரியத்தின் புன்னகை

தவறி விழும் ஒற்றைச்சொல்லில்
ரணத்தின் எடை இலக்க உயர்தலில்

நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்

குறிப்பு : (இதுஉரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

78 comments:

தமிழ் அமுதன் said...

///ப்ரியத்தின் வேரில் தழையுரம் ///

///உலோகக்கரத்தில் சிக்கியும் இதழ்
பிரியும் ப்ரியத்தின் புன்னகை ///

///நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்!!!!!!!!!!! ////

அடடா .....! அற்புதம் பாஸ்...!
என்ன ஒரு வார்த்தை வடிவமைப்பு...!
அங்கங்கே உயிர்ப்பு...!

"ப்ரியம் சுழித்தோடும் வெளி"

உங்கள் பதிவுகளில் இது ஒரு வைரத்துளி..!
வாழ்த்துக்கள்...!

ஹுஸைனம்மா said...

போன பதிவிலேயே உங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தேன், கவிதைகளுக்குப் பொழிப்புரை போடச் சொல்லி!!

படம் (மட்டும்) நல்லாருக்கு (எனக்கு)!!

(கோச்சுக்க மாட்டீங்களே நவாஸ்?)

SUFFIX said...

நல்லா இருக்கு நவாஸ், இயற்பியல், வேதியியல் காரணிகளை காதல் வரிகளில் கொண்டு வந்திருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

அடடா..இந்த .வரிகளையெல்லாம் எங்க புடிக்கிறிங்க...
கவிதைல கரண்ட் இருக்கு...
நிச்சயமாக வெற்றி பெரும்...
ரொம்ப நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்...

பூங்குன்றன்.வே said...

நல்ல கவிதை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ப்ரியத்தின் வேரில் தழையுரம்//

இந்த ஒரு வரி போதும் நவாஸ்
இந்த கவிதையின் ஆழம் புரிய..

மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்
மாறுதிசை மின்னோட்ட அதிர்வெண் உதாரணம் ம்ம்...கலக்குங்க ராசா..

வெற்றி பெற வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

அண்டவெளி,பால்வெளியிலும் உன் கவிதைத் துளி சுழித்தோடட்டும்.

Btc Guider said...

//நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்!!!!!!!!!!! //

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

அப்பா...

எங்கேயோ போய் கிட்டு இருக்கீங்க மக்கா!

மிக பிரியமான ப்ரியத்தை கை பிடித்து கொண்டு.

இது ஜெயிக்கவிட்டால் எது ஜெயிக்க போகுது?

அட,ஜெயிச்சுத்தான் என்ன?....

ப்ரியமான வாழ்த்துக்கள் மக்கா!

அப்துல்மாலிக் said...

மச்சான் சத்தியமா பரிட்சைக்கு கூட இப்படி படிச்சிருக்க மாட்டேன்.. திரும்ப திரும்ப படித்ததின் விளைவு ஓரளவு புரியுது.. நிச்சயம் வெற்றிபெறும் அப்படியில்லையேல் நடுவர்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம்.

தேர்ந்த கவிஞனாயிட்டே, பெருமையா இருக்கு

வாழ்த்துக்கள்

vasu balaji said...

அபாரம் நவாஸ்! வெற்றி பெற வாழ்த்துகள்.

விஜய் said...

வார்த்தை பிரயோகங்கள் அழகு

வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்

விஜய்

நிஜாம் கான் said...

கவிதையை புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டப்படவேணும். கஷ்டப்பட்டு பொருள் புரிந்து கொண்டேன். புரிந்து கொண்டால் விசயமிருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் நவாஸ் பாய்.

ஹேமா said...

நவாஸ் போட்டி பரிசுக்குத் தரமான கவிதை.ஒவ்வொரு வரிகளும் தனித்தனி அழகு.வாழ்த்துக்கள்.

தமிழ்மண ஓட்டுப் போட மறுக்கிறது.முடியவில்லை.

Thenammai Lakshmanan said...

//மாறுதிசை மின்னோட்ட அதிர்வெண்ணாய்
நேசமும் நேசக்கோபமும் //

அற்புதம் நவாஸுத்தீன்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

மச்சான் நல்லாதானேடா இருந்தே ;)

-----------------

ப்ரியத்தின் வேரில் தழையுரம்


செம செம மச்சான் ...

----------------------

‘நான்’ தோற்றுவிட்டாலே வெற்றி தாண்டா :) நேசத்தில் மட்டுமல்ல

நட்புடன் ஜமால் said...

வெற்றி பெற வாழ்த்துகள் மச்சான்.

sarathy said...

வெற்றி கிட்ட வாழ்த்துகள் நவாஸ்...



""நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார் ""

claps...

ஷாகுல் said...

//மாறுதிசை மின்னோட்ட அதிர்வெண்ணாய்//

அப்படினா frequency of alternative current தானே இது மட்டுதங்க புரியிது.

Don't mistake me.

//தேர்ந்த கவிஞனாயிட்டே, பெருமையா இருக்கு//

இப்படி ஏத்திவிட்டே பதிவே ரண்களமா இருக்கு :)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

gayathri said...

நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்

etho ithu mattum than enaku puriuthuga anna
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். anna

தேவன் மாயம் said...

///நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்!!!!!!!!!!! ///

தேர்ந்த கவிஞன் எழுதியது போல் உள்ளது!!நவாஸ்!!போட்டியில் வெற்றி உறுதி!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை எங்கோ செல்கிறதே !!!

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

கவிதை நல்லாருக்கு நவாஸ்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

angel said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

வியா (Viyaa) said...

நவாஸுதீன் நிண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வலைதளதிற்கு வந்தேன்.
தங்களின் கவிதை வரிகள் என்னை வியக்க வைத்து வைத்தது.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்//
அழகான ஆழமான வரிகள் நண்பரே.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பரே!
படமும் வரிகளும் பேசுகின்றன

அன்புடன் மலிக்கா said...

நாந்தான் லேட்டா:[ மன்னிச்சுக்கோங்கண்ணா.. என்னமா வரிகள் அசத்திட்டீங்க..
வெற்றிபெற வாழ்த்துக்கள் நவாஸண்ணா..

அ.மு.செய்யது said...

நவாஸூதீன்..கவிதை அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்கள் எழுத்து அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வது வியப்பல்ல.மகிழ்ச்சியே.

இருந்தாலும் இந்த கவிதையில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.உங்கள் சுயம் எங்கே போனது.இவங்கள மாதிரி எழுதணும்னு நினைக்கறத விட, நமக்கு வர்றதயே
பெஸ்ட்டா கொடுக்கணும்னு நினைக்கறதுல்ல தப்பு ஒன்னும் இல்லனு எனக்கு தோணுது. ( புரியலனா சந்தோஷம் )

சந்தான சங்கர் said...

நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்//

தோற்கவிழையும்
நேசத்தில் விளைகிறது
பாசம்.

அருமை நண்பா
வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

இப்போத்தான் வரேன். முதல்ல படம் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லிக்கிறேன்.

//நான் தோற்கத் தயார் // சொல்லிக்கிட்டே ஜெயிச்சுட்டீங்க நவாஸ்.

ரொம்ப இயல்பாவும் மெத்துன்னும் காற்றில் பறந்து புருவத்தின் மேல் உக்காந்துக்கும் பாருங்க, ஒரு புறாவின் இறகு, அது போல.

-வித்யா

ஜெனோவா said...

சூப்பரா இருக்குண்ணே, வெற்றி பெற வாழ்த்துக்கள் !

ஜெனோவா said...

சூப்பரா இருக்குண்ணே, வெற்றி பெற வாழ்த்துக்கள் !

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் நவாஸ்

தோற்று தான் போனேன் நண்பா

Anonymous said...

பெரியவங்க எல்லாம் பாராட்டியிருக்காங்க இதில் இன்னும் நான் சொல்ல என்ன இருக்கு?

கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

அ.மு.செய்யது said...
நவாஸூதீன்..கவிதை அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்கள் எழுத்து அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வது வியப்பல்ல.மகிழ்ச்சியே.

இருந்தாலும் இந்த கவிதையில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.உங்கள் சுயம் எங்கே போனது.இவங்கள மாதிரி எழுதணும்னு நினைக்கறத விட, நமக்கு வர்றதயே
பெஸ்ட்டா கொடுக்கணும்னு நினைக்கறதுல்ல தப்பு ஒன்னும் இல்லனு எனக்கு தோணுது. ( புரியலனா சந்தோஷம் )

தம்பி சொன்ன கருத்தை தான் நானும் சொல்ல நினைத்தேன்..ஆமோதிக்கிறேன்..

Unknown said...

நல்ல இருக்கு மச்சான் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

சும்மா புகுந்து விளையாடுறீங்க.. வாழ்த்துக்கள் தோழரே :-)

S.A. நவாஸுதீன் said...

நன்றி - தல

நன்றி - ஹுசைனம்மா (ஒரு கோவமும் இல்லை)

நன்றி - ஷஃபி

நன்றி - கமலேஷ்

நன்றி - பூங்குன்றன்.வே

நன்றி - வசந்த்

நன்றி - அப்துல்லாஹ்

நன்றி - முஜிபுர் ரஹ்மான்

நன்றி - பா.ரா. (மக்கா! வரிசையில் முன்னா....டி இருப்பது நீங்கதான்)

நன்றி - அபூ அஃப்ஸர் (ஆமா உனக்கு எதுக்கு நன்றி, சரி இருக்கட்டும் சும்மா வச்சுக்க)

நன்றி - பாலா சார்

நன்றி - கவிதைகள் - விஜய்

நன்றி - நிஜாம்

நன்றி - ஹேமா

நன்றி - தேனம்மைலக்‌ஷ்மனன்

நன்றி - அன்புடன் அருணா

நன்றி - ஜமால் (உனக்கும் மாலிக்குக்கு சொன்னதுதான்)

நன்றி - சாரதி

நன்றி - ஷாகுல்

நன்றி - தங்கை காயு

நன்றி - தேவா சார்

நன்றி - ஸ்டார்ஜன்

நன்றி - அக்பர்

நன்றி - ஏஞ்சலின் டு தி ஹெவன்

நன்றி - வியா

நன்றி - ஞானப்பித்தன்

நன்றி - ஜெஸ்வந்தி

நன்றி - ஆ.ஞானசேகரன்

நன்றி - தங்கை மலிக்கா

நன்றி - அ.மு.செ. (நீங்க சொல்றது சரிதான் செய்யது. இது போட்டிக்காக என்பதால். மத்தபடி ஒன்னும் இல்லை, நீங்கள் சொல்வதை நிச்சயம் கவனத்தில் எடுத்துக்கொள்வேன். புரியுது நீங்க சொல்றது)

நன்றி - சந்தான சங்கர்

நன்றி - வித்யா (பின்னூட்டம் ரொம்ப அழகா இருக்கு)

நன்றி - ஜெனோவா

நன்றி - நேசமித்ரன் (நண்பா! நானும்தான்)

நன்றி - தமிழரசி (உனக்குதான் எல்லா விளக்கமும் கொடுத்திட்டேனே. இப்பவாவது சிரி. உம்முன்னு இருக்காதே)

நன்றி - அக்பர் (உனக்கும் மாலிக்குக்கு சொன்னதேதான் மச்சான்)

நன்றி - உழவரே (ரொம்ப சந்தோசம் நண்பா)

S.A. நவாஸுதீன் said...

அப்துல்லாஹ் - உனக்கு அங்கே (மாலிக்) ப்ராக்கெட் போட மறந்துட்டேன். உனக்கும் அதே தான் மாப்ள.

PPattian said...

கவிதை அருமை நண்பரே.. நானும் தோற்கத் தயார்..

வெற்றிக்கு வாழ்த்துகள்

Jaleela Kamal said...

சகோதரர் கவிதை ரொம்ப அருமை, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

படம் ரொம்ப அருமை அப்படியே தத்ரூபமா இருக்கு.

Thenammai Lakshmanan said...

திரும்பவும் வந்து ரசித்தேன் நவாஸுத்தீன்
நேசமும் நேசக் கோபமும் என்ற வார்த்தை என்னை இங்கு இழுத்து வந்தது நவாஸ்

Chitra said...

//தவறி விழும் ஒற்றைச்சொல்லில்
ரணத்தின் எடை இலக்க உயர்தலில் // ...........
..................என்ன அழுத்தமான கவிதை.! வெற்றி பெற வாழ்த்துக்கள். the picture is very nice too.

S.A. நவாஸுதீன் said...

நன்றி - புபட்டியான்

நன்றி - சகோதரி ஜலீலா

நன்றி - தேனம்மைலக்ஷ்மனன் (ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. மகள் நூராவும் மகன் நதீமும் நலம்)

நன்றி - சித்ரா

sakthi said...

நல்லா இருக்கு..! நண்பரே...

Nathanjagk said...

அடேங்கப்பா..
எங்கேங்க பிடிச்சீங்க இந்த படத்தை...
கிட்டத்தட்ட 7 நிமிஷமா இதையே பாத்துக்கிட்டு இருக்கேன்.
மொழிபெயர்க்க இயலாத ஒளிக்கவிதை!
-
உங்க கவித வெற்றி பெற வாழ்த்துகள்!

Menaga Sathia said...

சூப்பரான கவிதை சகோ!!போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

Anonymous said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

அவனி அரவிந்தன் said...

அதி ஆழமான வரிகள் உள் சென்று பயணித்து படித்துக் கொண்டேன். மிகவும் நன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் !

RAMYA said...

போட்டியில் வென்றிட வாழ்த்துக்கள்!

RAMYA said...

//
வார்த்தைகள் தீராத வாதத்தின்
உலோகக்கரத்தில் சிக்கியும் இதழ்
பிரியும் ப்ரியத்தின் புன்னகை
//
பிரியத்தின் புன்னகைக்கு ஒரு விளக்கம் இல்லையா சகோ

//
தவறி விழும் ஒற்றைச்சொல்லில்
ரணத்தின் எடை இலக்க உயர்தலில்
//

புரிகிறது வலியின் எடையின் எண்ணிக்கை அதிகரிக்குது சரிதானே சகோ!



//
நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்
//

நேசம் என்று கூறி விட்டீர்கள் அதில் தோல்வியும் வெற்றியும் கணக்கிலடங்கா சகோ!

RAMYA said...

கவிதையில் உயிர் இருக்கு வெற்றியும் அடங்கி இருக்கு வாழ்த்துக்கள்!!

S.A. நவாஸுதீன் said...

நன்றி - சக்தி

நன்றி - ஜெகன் (கவிதைக்கு பொருத்தமாய் கூகுளில் தேடியபோது கிடைத்தது நண்பா. படத்தை கவிதைக்கு கீழே போட்டிருந்துருக்கனும். 7 நிமிஷம் அதையே பார்த்துட்டு கவிதையை பார்க்காமல் போயிடுவீங்களோன்னு பயம்தான்)வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

நன்றி - சகோதரி மேனகா.

நன்றி - சகோதரி அம்மு மது

நன்றி - அரவிந்தன்

நன்றி - ரம்யா (லேட்டா வந்தாலும் விரிவான பின்னூட்டம் சந்தோசமா இருக்கு ரம்யா)

Jaleela Kamal said...

அவார்டு கொடுத்து இருக்கேன் வ‌ந்து வாங்கிக்கொள்ளுங்க‌ளேன்

பா.ராஜாராம் said...

உண்மைதான் நவாஸ்.இந்த படம் மிக அருமை..கவிதை இழுத்துக்கொண்டே இருக்கு.

முன்னாடி இருந்தது இப்ப பின்னாடி இருக்கு..
எனக்கு ரொம்ப பிடிச்ச காமடி..உங்களின் இங்கிருக்கிற கவிதை போல.கடைசி ரெண்டு வரிகள் நான் எழுதி இருக்கலாம் மக்கா.மிஸ் பண்ணிட்டேன்.நீங்க தான் சொல்றீங்களே நேசத்திடம் தோற்கும் போது யார் வெற்றி பெற்றால் என்ன?..

ஆம்!தோற்று விட்டேன்.

S.A. நவாஸுதீன் said...

நன்றி - சகோதரி ஜலீலா விருது தந்தமைக்கு.

S.A. நவாஸுதீன் said...

///பா.ராஜாராம் said...
உண்மைதான் நவாஸ்.இந்த படம் மிக அருமை..கவிதை இழுத்துக்கொண்டே இருக்கு.

முன்னாடி இருந்தது இப்ப பின்னாடி இருக்கு..
எனக்கு ரொம்ப பிடிச்ச காமடி..உங்களின் இங்கிருக்கிற கவிதை போல.கடைசி ரெண்டு வரிகள் நான் எழுதி இருக்கலாம் மக்கா.மிஸ் பண்ணிட்டேன்.நீங்க தான் சொல்றீங்களே நேசத்திடம் தோற்கும் போது யார் வெற்றி பெற்றால் என்ன?..

ஆம்!தோற்று விட்டேன்.////

நானும்தான் மக்கா. ஜீபூம்பா என்னையும் வரிசையின் கடைசியில் தூக்கி போட்டுடுச்சு.

அருள்மொழியன் said...

//சொற்கள் புசிக்கும் வன்மௌனம்
ப்ரியத்தின் வேரில் தழையுரம்//

தழையுரத்தை விவசாயிகளே மறந்துவிட்ட நேரத்தில் தாங்கள் தங்கள் கவிதையில் அதை அழகாக கையாண்டிருப்பது அருமை.

S.A. நவாஸுதீன் said...

///அருள்மொழியன் said...
//சொற்கள் புசிக்கும் வன்மௌனம்
ப்ரியத்தின் வேரில் தழையுரம்//

தழையுரத்தை விவசாயிகளே மறந்துவிட்ட நேரத்தில் தாங்கள் தங்கள் கவிதையில் அதை அழகாக கையாண்டிருப்பது அருமை.///

வாங்க அருள்மொழியன். ரொம்ப நன்றி. உங்க பெயர் ரொம்ப பிடிச்சிருக்கு.

thiyaa said...

என்ன அழகு எதனை முறை சொன்னாலும் பாராட்ட வார்த்தையில்லை.

Admin said...

அத்தனை வரிகளையும் இரசித்தேன்.

S.A. நவாஸுதீன் said...

///தியாவின் பேனா said...
என்ன அழகு எதனை முறை சொன்னாலும் பாராட்ட வார்த்தையில்லை///

வாங்க தியா. ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

///சந்ரு said...
அத்தனை வரிகளையும் இரசித்தேன்///

ரொம்ப நன்றி சந்ரு

thiyaa said...

வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

///தியாவின் பேனா said...
வாழ்த்துக்கள்///

மீண்டும் வந்து வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி தியா.

Thenammai Lakshmanan said...

நன்றி நவாஸ் ஓட்டும் போட்டதுக்கு

நவாஸ் உங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டேன் உங்க பிரியம் சுழித்தோடும் வெளிக்கு

மனதில் அந்த வார்த்தைக்ள் தலைப்பு நிரந்தரமாகத்தங்கி விட்டன

பின்ன தினம் என்னவாவது புதுசா எழுதி இருக்கீங்களான்னு போய் பார்த்தா மனப்பாடம் ஆகாதா என்ன

S.A. நவாஸுதீன் said...

///thenammailakshmanan said...
நன்றி நவாஸ் ஓட்டும் போட்டதுக்கு

நவாஸ் உங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டேன் உங்க பிரியம் சுழித்தோடும் வெளிக்கு

மனதில் அந்த வார்த்தைக்ள் தலைப்பு நிரந்தரமாகத்தங்கி விட்டன

பின்ன தினம் என்னவாவது புதுசா எழுதி இருக்கீங்களான்னு போய் பார்த்தா மனப்பாடம் ஆகாதா என்ன///

ரொம்ப சந்தோசமா இருக்கு. தோற்றுத்தான் போனேன் நான்.

Vidhya Chandrasekaran said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

///வித்யா said...
வெற்றி பெற வாழ்த்துகள்.///

நன்றி வித்யா

சத்ரியன் said...

//நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார் ..//

நவாஸ்,

நேசத்திடம்... நான் தோற்கத் தயார்.
அசத்தும் அர்த்தம்!

S.A. நவாஸுதீன் said...

///சத்ரியன் said...
//நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார் ..//

நவாஸ்,

நேசத்திடம்... நான் தோற்கத் தயார்.
அசத்தும் அர்த்தம்!///

நன்றி கண்ணா

Senthilkumar said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

S.A. நவாஸுதீன் said...

///நாவிஷ் செந்தில்குமார் said...
வெற்றி பெற வாழ்த்துகள்!///

நன்றி நாவிஷ் செந்தில்குமார்

M.Rishan Shareef said...

நல்ல கவிதை !

S.A. நவாஸுதீன் said...

///////எம்.ரிஷான் ஷெரீப் said...
நல்ல கவிதை !////////

ரொம்ப நன்றி.