தேவதையே!!
நண்பர் வசந்த் அனுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காக வேறு வழியில்லாமல் இங்கு வந்திருப்பது எனக்கும் புரிகிறது. தேவதையானால் என்ன. ஹ்ம்ம் விதி யாரை விட்டது. ஆறு மாசம் முன்னாடி காணாமல் போன உங்க அக்கா தேவதையைப் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் சுத்திகிட்டு இருக்கே நீ. உங்க அக்கா வரம் கொடுக்கப் போனப்போ என்ன நடந்ததுன்னு தெரியுமா உனக்கு? நீ எனக்கு வரம் தரும் முன் அந்த கதையை சொல்றேன் கேள். இது உன்னை உஷார் படுத்தத்தான். கேட்டுக்கோ.
'சிரிண்டா'! வீட்டிலிருந்தாலும் ஆஃபிஸிலிருந்தாலும் பெட்டிக்கடைக்குப் , போனாலும் ரெஸ்டாரெண்டுக்குப் போனாலும் எங்கேயும் எப்போதும் சிரிண்டாவைத்தான் வாங்கிக் குடிப்பார் அந்த ந(ண்)பர்.
ஒரு நாள். ரெஸ்டாரெண்டில் அமர்ந்து சிரிண்டாவை துளி, துளியாக உறிஞ்சிக் கொண்டே, "பாட்டிலில் சிரிண்டா குறையக் குறைய தீர்ந்துபோகாமல் மறுபடியும் மறுபடியும் வந்துகொண்டே இருந்தால், நன்றாக இருக்குமே" என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார் அந்த நபர்.
அடுத்த நொடி. படக் என்று சத்தம். பளிச் என்று வெளிச்சம். உங்க அக்கா அந்த நபரின் முன்னே தோன்றிவிட்டாள்.
"ஓ மனிதா... நீ நினைத்ததுபோலவே உனக்கு பாட்டிலில் சிரிண்டா வந்து கொண்டேயிருக்க அருள் புரிந்தோம். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். இன்னும் இரண்டு வரங்கள் என்ன வேண்டும்? கேள்" என்றாள் அக்கா தேவதை.
"தேவதையே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும் காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர். திரும்பவும் பாட்டிலில் சிரிண்டா முழுமையாக நிரம்பிவிட்டது.
"ஓ சூப்பர் தேவதையே, சூப்பர், சூப்பர்" என்று உங்க அக்காவைப் பாராட்டிவிட்டு, 'இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றன' என்று மனதில் யோசித்த அந்த நபர் உடனே வாயைத் திறந்து கேட்டார், "இதுபோலவே இன்னும் இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று. உங்க அக்கா அப்ப ஷாக்க்க்க்கானவள்தான், இன்னமும் அங்கேயேதான் அசந்துபோயி நிக்கிறாளாம்.
தேவதையே!!
சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். நான் என்னோட பத்தை கேக்கட்டுமா என்றது தான் தாமதம் மூனுக்கே மூச்சில்லாம நிக்கும்போது பத்தா, போடா ங்கொய்யால உனக்கு ஒன்னும் வேணாம், நான் வேற எங்க போகணும் அத மட்டும் சொல்லு என்று கடுப்பாகிப் போனதால் நான் உங்க அட்ரஸ் மட்டும் கொடுத்து அனுப்பிட்டேன்.
பா. ராஜாராம்
பாலமுருகன்
”தல” ஜீவன்
சகோதரி சுமஜ்லா
போற வழியில் போன் போட்டு போனாப்போகுதுன்னு ஒரு வரம் தருகிறேன் வேண்டும் என்றால் கேள் என்று சொன்னதால் இதை மட்டும் கேட்டேன்.
ஒரு அறிஞன் சொன்னது போல்,
"மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல"
"அந்த பெண் வேறு யாருமல்ல. என் அன்னை தான்"
வரை
எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள.
63 comments:
பைனல் டச்சுங்கறது இங்கதான் பார்த்தேன் நவாஸ்
உண்மையாவே
சூப்பரா போட்டு இருக்கீங்க...
10 வரமும் ஒரே வரமாக கேட்டீங்க பாருங்க அங்கத்தான் நீங்க நிக்கறீங்க.
பாலா said...
பைனல் டச்சுங்கறது இங்கதான் பார்த்தேன் நவாஸ்
உண்மையாவே
ரொம்ப நன்றி பாலா
இராகவன் நைஜிரியா said...
சூப்பரா போட்டு இருக்கீங்க...
10 வரமும் ஒரே வரமாக கேட்டீங்க பாருங்க அங்கத்தான் நீங்க நிக்கறீங்க.
வாங்க அண்ணா. ரொம்ப நன்றி உங்களுக்கும்
புள்ளையாரே!
அம்மா அப்பாவைச் சுத்திவந்துட்டீங்க!
hey anna super varam
தேவதையே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும் காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர்.
ama athu ennaசிரிண்டா
//எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள//
ஒரே வரம் என்றாலும் சூப்பரான வரம்.. அண்ணன்
//இதுபோலவே இன்னும் இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்//
முன்னுரை நல்லா இருக்கு, மனித மனத்தின் எதார்த்தம்!!
ஒரே ஒரு வரம்!! மனதை தொட்டு விட்டது!!
//சூப்பரா போட்டு இருக்கீங்க...
10 வரமும் ஒரே வரமாக கேட்டீங்க பாருங்க அங்கத்தான் நீங்க நிக்கறீங்க.//
repeattu...
மனைவி என்று முழங்காமல் அம்மா என்று சொன்னது ரொம்ப நல்லா இருக்கு..
உண்மையான உங்கள் மனதின் ஏக்கம் தெரிகிறது அம்மாவை நேசிக்கும் ஆழமும் உணர முடிகிறது..தொடரை வித்தியாசப் படுத்தி நல்ல விதமா முடிச்சி இருக்கீங்க....
திருப்பம் நன்றாககவும்,அழகாகவும் இருந்தது,நவாஸுதீன்..
//எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள. //
10 வரத்தையும் ஒரே வரமா கேட்டு சூப்பரா சொல்லிருக்கிங்க ப்ரதர்.
அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள. ]]
கிரேட் மச்சான்.
//அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல.என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள.//அற்புதம் நவாஸ்!கடன் கூடிக்கொண்டே இருக்கு நவாஸ்!இந்த அன்புக்கு என்ன செய்யப்போகிறோம் என்று மலைக்கிற கடன்!சரி மக்கா.வரட்டும்...வாசலில் ஒரு வேம்பு வைத்து நவாஸ் என்று பெயரிட்டு விடலாம்."நவாஸ் மரத்துக்கு அடியில் உட்கார்ந்து பேசலாம் வா..."என சந்ததிகளுக்கு வழங்கட்டும்.வெறும் கவிதை எழுதுபவனால் வேறு என்ன செய்துவிட முடியும்?.. நன்றியும் அன்பும் மக்கா!
// எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள. //
Excellent Navas...
May the Boon Granted by the almighty...
இங்க என்னாப்பா நடக்குது கொஞ்ச நாள் லீவு போட்டால் இப்படியா?
//-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.//
இது நீங்களா நவாஸ்?
பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு ஹாயாக மானங்கெட்ட வாழ்வு வாழ்பவர்கள் மத்தியில் பத்துவரத்தையும் ஒன்றாக பெற்றோர் தங்கள் அரவணைப்பில் வேண்டும் என வரம் கேட்ட தாங்கள் உண்மையிலே மிகச்சிறந்த மகன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் நவாஸ்
வரம் கிடைக்க வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்
எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள
\\
சூப்பர் தலைவா
சிரிண்டா கதையை சொல்லி சிரிக்க வெச்சே
முடிவுலே திகைக்க வெச்சிட்டே
பெற்றோர் பாசம் எனக்கும் தெரியும் மச்சான், கூட இருந்து பார்த்தவன்..
முதியோர் இல்லம் தேவையா என்று கேள்விகேட்டவன் இன்று அவர்களை அரவனைப்பதற்காக கேட்ட வரம் வித்தியாசம்
ஒற்றை வரத்தில் இந்த உலகத்தையே கேட்டு விட்டீர்கள் நண்பரே! (பெற்றோர் தான் உலகம் என்று முருகன் சுற்றி வந்தது போலத்தான்.)
நவாஸ்,
கை கொடுங்க முதல்ல.! தேவதை கொடுக்குமோ,கொடுக்காதோ தெரியாது.
நண்பனாய் நான் தருகிறேன்.
//எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள//
அருமையான வரம் = நவாஸ் உங்கள் எண்ணம் இதில் பிரதிபலிக்கிறது
உங்களது பத்து வரமும் பெற்றோருக்கே...மற்றும் பெற்றோரின் மதிப்பையும் , அவசியத்தையும்.. உணர்த்துகிறது...
ஆஹா..தல கலக்கீட்டீங்க...
நீங்க கடைசியா கேட்ட அந்த வரம் தான் இப்ப எனக்கும் முக்கியமா படுது !!!
நன்றி - தேவா சார்
நன்றி - காயு (மிரிண்டாக்கு ஆப்போசிட் சிரிண்டா)
நன்றி - ஃபாயிஜா காதர்
நன்றி - ஷஃபிக்ஸ்
நன்றி - நேசமித்ரன்
நன்றி - தமிழரசி
நன்றி - ஷண்முகப்ரியன்
நன்றி - மேனகா
நன்றி - ஜமால். (என்ன மச்சான் ரொம்ப பிசி ஆயிட்டியோ)
நன்றி - பா. ராஜாராம் (ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு, மறுபடியும் காண எப்போ நேரம் கிடைக்கும் நண்பா)
நன்றி - சாரதி
நன்றி - ரோஸ் (எங்கே ரொம்ப நாளாக் காணோம், வந்தது தான் வந்தீங்க, அப்படியே இதுக்கு முன்னாடி இட்ட இடுகைகளையும் ஒரு நோட்டம் விடுங்க)
நன்றி - வசந்த் (நான் அவரில்லை)
நன்றி - அபுஅஃப்ஸர் (வா மச்சான், வேலை இன்னும் குறையவில்லையோ)
நன்றி - ஜெஸ்வந்தி
நன்றி - சத்ரியன் (ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு நண்பா)
நன்றி - சகோதரி ஜலீலா
நன்றி - ”தி கிரேட் அதிரை” அபூபக்கர்
நன்றி - அ.மு.செ. (என்னத்தா, எல்லா மக்களும் ஒட்டுமொத்தமா பிசியா இருக்கிய, நான் மட்டும்தான் ஃப்ரீயா, அவ்வ்வ்வ்வ்வ்வ்)
நன்றி - ரோஸ் (எங்கே ரொம்ப நாளாக் காணோம், வந்தது தான் வந்தீங்க
\\
paarthutta pochu
நன்றி - அபுஅஃப்ஸர் (வா மச்சான், வேலை இன்னும் குறையவில்லையோ
\\
eppadi kurayum athulam kuraiyathu
rose said...
நன்றி - அபுஅஃப்ஸர் (வா மச்சான், வேலை இன்னும் குறையவில்லையோ
\\
eppadi kurayum athulam kuraiyathu
அதுசரி இருந்தாதானே குறையும்
முதல் வாரமே சூப்பராக இருக்கு
வாழ்த்துக்கள்
[எங்க வீடு மாதரியே இருக்கு
உங்க வீடும்]
32.கேள்விபதில் தொடர் எல்லாரும் எழுதினாங்க ஆனா நீங்க சொன்ன ஒரு பதில்தான் இப்போதும் ஈரமா மனசுல நிக்குது அத அடிக்கடி நினைச்சுகுவேன்! இந்த பதில் தான் அது..!
// உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு. ///
அதன் பிறகு மனசுல நிக்குரதுபோல ஒரு அருமையான விஷயம் சொல்லி இருக்கீங்க!
///எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள. ///
முதல் பதிலில் நீங்க ஒரு சிறந்த தந்தை!!!
இந்த பதிலில் நீங்க ஒரு நல்ல பிள்ளை !!!
என்ன சொல்லி பாராட்ட ..........!!!
என்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி!!!
விரைவில் பதிவிடுகிறேன் ...!!!
//அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல.என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள.//
அற்புதம் நவாஸ்!இதைவிட வேற என்ன கேக்க இருக்கு.இந்த வரம் எனக்கும் வேணும்.
நன்றி - அன்புடன் மலிக்கா
நன்றி - தல (நெகிழ்ச்சியா இருக்கு தல. சீக்கிரம் வாங்க)
நன்றி - ஹேமா
சகோதரர் ஜீவன் சொன்னது போல் முதல் பதிலில் நீங்க ஒரு சிறந்த தந்தை!!!
இந்த பதிலில் நீங்க ஒரு நல்ல பிள்ளை !!!எங்கள் எல்லோருக்கும் சிறந்த நண்பன் கூட . நீ கேட்ட வரம் எங்களை நெகிழ வைத்த வரம்.
Akbar said...
சகோதரர் ஜீவன் சொன்னது போல் முதல் பதிலில் நீங்க ஒரு சிறந்த தந்தை!!!
இந்த பதிலில் நீங்க ஒரு நல்ல பிள்ளை !!!எங்கள் எல்லோருக்கும் சிறந்த நண்பன் கூட . நீ கேட்ட வரம் எங்களை நெகிழ வைத்த வரம்.
வாடா மச்சான். எப்டி இருக்க. முடிந்தால் ஈத் விடுமுறையில் ஜித்தாஹ் வாடா.
சூப்பர் :-)
" உழவன் " " Uzhavan " said...
சூப்பர் :-)
நன்றி உழவரே
அன்பு எஸ்.ஏ.நவாஸ்தீன்,
இந்தப் பதிவில் உங்களின்
உயர்ந்த உள்ளத்தை அறிய
முடிகிறது.
நேரடியாக என் பெயரைக்
குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்.
இந்தக் கதையை தற்போது
எனது 'நிஜாம் பக்கம்'
வலைப்பூவிலும் வெளியிட்டு
உள்ளேன்.
http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_02.html
அற்புதமான வரங்கள். வரங்கள் அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள்.
வாங்க நிஜாம். ஒரு சஸ்பென்ஸுக்காகவும் உங்களைப்பற்றி ஒரு புதிய அறிமுகம் இருக்கட்டுமே என்றுதான் பெயர் கூறாமல் லின்க் கொடுத்தேன்.
நன்றி - சந்ரு
//வாங்க நிஜாம்..//
-வந்துட்டேன், நவாஸுதீன்.
தங்களின் விளக்கத்திற்கு
மிக்க நன்றி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இறைவனின் அருளால் அனைத்து நன்மைகளும் பெற்று நீண்டு வாழ வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
--வித்யா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ப்ரதர்!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
//எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள. //
இது தான் இந்தப் பதிவின் அஸ்திவாரம் நவாஸ்ஜி.அருமை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவாஸ்...
எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க...
நவாஸ், மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஆண்டவனின் நிறைந்த அருள் கிடைக்கட்டும்.
நண்பர்களுக்கு பெருநாள் வாழ்த்துக்கள்
நன்றி - ஃபாயிஜா(நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க)
நன்றி - வித்யா(நவராத்திரி வாழ்த்துக்கள்)
நன்றி - மேனகா(நவராத்திரி வாழ்த்துக்கள்)
நன்றி - உழவரே
நன்றி - நிஜாம்
நன்றி - சாரதி
நன்றி - ஹேமா(நவராத்திரி வாழ்த்துக்கள்)
நன்றி - சந்ரு
வரம் கிடைக்க வாழ்த்துக்கள் நவாஸு
//
"இதுபோலவே இன்னும் இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று. உங்க அக்கா அப்ப ஷாக்க்க்க்கானவள்தான், இன்னமும் அங்கேயேதான் அசந்துபோயி நிக்கிறாளாம்.
//
சிரித்தே விட்டேன்..
(இதே கருவுடன் வேறு ஜோக் கேட்ட நியாபகம்.. எனினும்) கதையும் நல்லா இருந்தது, உங்க இந்த தேவதை இடுகையும் நகைச்சுவையாய் சிரிக்கவைத்தது..
வாழ்த்துக்கள் நண்பரே..
ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள் மக்கா!
//எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள//
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது.-
இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கலக்கிட்டீங்க நவாஸ்..
உங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும், எங்களுடைய இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்
நண்பரே... ரமலான் வாழ்த்துகள்!
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் அண்ணே......
தல,உங்களையும் ஒரு தொடருக்கு அழைத்திருக்கேன்.விதி வலியது...
நன்றி - JACK and JILLU
நன்றி - सुREஷ் कुMAர்
நன்றி - பா.ரா (அன்பா ஆப்பு வச்சிருக்கேன்னு சொல்றீங்க புரியுது புரியுது)
நன்றி - PEACE TRAIN (தஸ்தகீரை விசாரித்ததாக சொல்லவும்)
நன்றி - சகோதரி கீதா
நன்றி - அன்பு (உப்புக்காரத் தெரு மறக்க இயலாது நண்பா!)
நன்றி - தம்பி கூல் கார்த்தி
Post a Comment