
விளங்க கூடவில்லை
வெறும் வரியாகத் தான் இருந்தன
அகம் மற்றும் புறம் பற்றிப்பேசிய
நூறுகள் பதின்பருவத்து பள்ளி அறைகளில்
வாயில் அமுதும் வாலில் விஷமும்
பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம்
சருமம் துளைத்து உயிரின் நிலவறை
வரை நாவின் ஈரம் படர்த்திப் போகிறது
பசலை எனும் யாளி
ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை