தேவதையே!!
நண்பர் வசந்த் அனுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காக வேறு வழியில்லாமல் இங்கு வந்திருப்பது எனக்கும் புரிகிறது. தேவதையானால் என்ன. ஹ்ம்ம் விதி யாரை விட்டது. ஆறு மாசம் முன்னாடி காணாமல் போன உங்க அக்கா தேவதையைப் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் சுத்திகிட்டு இருக்கே நீ. உங்க அக்கா வரம் கொடுக்கப் போனப்போ என்ன நடந்ததுன்னு தெரியுமா உனக்கு? நீ எனக்கு வரம் தரும் முன் அந்த கதையை சொல்றேன் கேள். இது உன்னை உஷார் படுத்தத்தான். கேட்டுக்கோ.
'சிரிண்டா'! வீட்டிலிருந்தாலும் ஆஃபிஸிலிருந்தாலும் பெட்டிக்கடைக்குப் , போனாலும் ரெஸ்டாரெண்டுக்குப் போனாலும் எங்கேயும் எப்போதும் சிரிண்டாவைத்தான் வாங்கிக் குடிப்பார் அந்த ந(ண்)பர்.
ஒரு நாள். ரெஸ்டாரெண்டில் அமர்ந்து சிரிண்டாவை துளி, துளியாக உறிஞ்சிக் கொண்டே, "பாட்டிலில் சிரிண்டா குறையக் குறைய தீர்ந்துபோகாமல் மறுபடியும் மறுபடியும் வந்துகொண்டே இருந்தால், நன்றாக இருக்குமே" என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார் அந்த நபர்.
அடுத்த நொடி. படக் என்று சத்தம். பளிச் என்று வெளிச்சம். உங்க அக்கா அந்த நபரின் முன்னே தோன்றிவிட்டாள்.
"ஓ மனிதா... நீ நினைத்ததுபோலவே உனக்கு பாட்டிலில் சிரிண்டா வந்து கொண்டேயிருக்க அருள் புரிந்தோம். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். இன்னும் இரண்டு வரங்கள் என்ன வேண்டும்? கேள்" என்றாள் அக்கா தேவதை.
"தேவதையே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும் காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர். திரும்பவும் பாட்டிலில் சிரிண்டா முழுமையாக நிரம்பிவிட்டது.
"ஓ சூப்பர் தேவதையே, சூப்பர், சூப்பர்" என்று உங்க அக்காவைப் பாராட்டிவிட்டு, 'இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றன' என்று மனதில் யோசித்த அந்த நபர் உடனே வாயைத் திறந்து கேட்டார், "இதுபோலவே இன்னும் இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று. உங்க அக்கா அப்ப ஷாக்க்க்க்கானவள்தான், இன்னமும் அங்கேயேதான் அசந்துபோயி நிக்கிறாளாம்.
தேவதையே!!
சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். நான் என்னோட பத்தை கேக்கட்டுமா என்றது தான் தாமதம் மூனுக்கே மூச்சில்லாம நிக்கும்போது பத்தா, போடா ங்கொய்யால உனக்கு ஒன்னும் வேணாம், நான் வேற எங்க போகணும் அத மட்டும் சொல்லு என்று கடுப்பாகிப் போனதால் நான் உங்க அட்ரஸ் மட்டும் கொடுத்து அனுப்பிட்டேன்.
பா. ராஜாராம்
பாலமுருகன்
”தல” ஜீவன்
சகோதரி சுமஜ்லா
போற வழியில் போன் போட்டு போனாப்போகுதுன்னு ஒரு வரம் தருகிறேன் வேண்டும் என்றால் கேள் என்று சொன்னதால் இதை மட்டும் கேட்டேன்.
ஒரு அறிஞன் சொன்னது போல்,
"மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல"
"அந்த பெண் வேறு யாருமல்ல. என் அன்னை தான்"
அதனால்,
முதல்
வரை
எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள.