Lilypie

Sunday, March 1, 2009

சில விளக்கங்கள் சிந்திக்க வைக்கும்


ஒலிபெருக்கி
இதைக் கண்டுபிடித்தவன்
அரசியல்வாதிகளின்
ஆண்டவன்

தேர்வுநேரம்
பிள்ளையார்கோவில்
பூசாரிவீட்டில்
தினமும்
தேங்காய்ச்சட்னி!

திருமணம்
ஒவ்வொரு வீட்டிலும்
அந்தமான்

முட்டாள்
எல்லார் வீட்டிலும்
ஒரு கண்ணாடியாவது உண்டு

சினிமா
இந்தத் தண்டனை
இரண்டரை மணிநேரம் மட்டும் தான்

அரசியல்
கொடிமரத்தில் பறக்குது
கோமணம்

விலைவாசி

விறகையும் தீப்பெட்டியையுமாவது
விட்டு வையுங்கள்!
இனிதே இறக்கிறேன்

13 comments:

அப்துல்மாலிக் said...

//ஒலிபெருக்கி
இதைக் கண்டுபிடித்தவன்
அரசியல்வாதிகளின்
ஆண்டவன்
//

சரிதான்...
தேர்தல் நேரத்தில் ஆண்டவனுக்கெல்லாம் ஆண்டவன்

அப்துல்மாலிக் said...

Pls remove word verification in the comment, you may get more comments

அப்துல்மாலிக் said...

//தேர்வுநேரம்
பிள்ளையார்கோவில்
பூசாரிவீட்டில்
தினமும்
தேங்காய்ச்சட்னி!

//

ஹா ஹா தேங்கா சோறுக்கூட உண்டாம்

அப்துல்மாலிக் said...

//திருமணம்
ஒவ்வொரு வீட்டிலும்
அந்தமான்
/

இப்போவெல்லாம் சமுத்ரா தீவைதான் எல்லோரும் சொல்றாங்க‌

அப்துல்மாலிக் said...

// முட்டாள்
எல்லார் வீட்டிலும்
ஒரு கண்ணாடியாவது உண்டு//

உங்கவூட்லே உண்டா

அப்துல்மாலிக் said...

//சினிமா
இந்தத் தண்டனை
இரண்டரை மணிநேரம் மட்டும் தான்
//

நடிக்கிறவங்களுக்கும், வேலை செய்றவங்களுக்கும் ஒரு வருஷம், பாலா வா இருந்தா 4 வருஷம் கூட ஆகலாம்

அப்துல்மாலிக் said...

//அரசியல்
கொடிமரத்தில் பறக்குது
கோமணம்//

ஹா ஹா ரசிச்சது

அப்துல்மாலிக் said...

//விலைவாசி
விறகையும் தீப்பெட்டியையுமாவது
விட்டு வையுங்கள்!
இனிதே இறக்கிறேன்//

நச் வரி, சொல்ல வார்த்தை இல்லை

cute baby said...

பல உண்மைகளை அப்பட்டம சொல்லி இருக்கிங்க....தைரியம் தான் போங்க‌

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

Pls remove word verification in the comment, you may get more comments

ரொம்ப thanks மாப்ள. I did it as you said

S.A. நவாஸுதீன் said...

Blogger cute baby said...

"பல உண்மைகளை அப்பட்டம சொல்லி இருக்கிங்க....தைரியம் தான் போங்க‌"

ரொம்ப நன்றி Cute Baby, உங்கள் பின்னூட்டத்திற்கு

டவுசர் பாண்டி said...

//முட்டாள்
எல்லார் வீட்டிலும்
ஒரு கண்ணாடியாவது உண்டு// எனுக்கு கண்ணாடியே வாணாம் தலீவா ! நானு எப்பிடின்னு நம்பளுக்கே தெரியும்.

S.A. நவாஸுதீன் said...

அதே கண்கள் said...

//முட்டாள்
எல்லார் வீட்டிலும்
ஒரு கண்ணாடியாவது உண்டு// எனுக்கு கண்ணாடியே வாணாம் தலீவா ! நானு எப்பிடின்னு நம்பளுக்கே தெரியும்.

நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

ஒ நீங்களும் என்னமாதிரி மனக்கண்ணாடிய பார்க்கும் ஆளுதானா?