Lilypie

Monday, March 2, 2009

என் காதல் நாயகி.

எனக்கோ அவள் குழந்தையாய் தெரிகிறாள். ஆனால் என்னை குழந்தையாய் தாங்குகிறாள்.

என் காதல் நாயகி.

என்னவளின் பெயர் எழுதும்போதே பேனாவை சற்று மெதுவாக எழுத சொன்னேன். அவள் பெயருக்கு கூட வலிக்கக் கூடாது என்பதால்.

என் வருங்கால சந்ததியினரின் ஆணிவேர் இவள்.

என்னை முழுமையாக புரிந்தவள். நானும் அவளை. பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாமல் ஆழ் கடலின் ஆழத்திற்கு ஒப்பிடுபவர்கள் அவளை புரிந்து கொள்ள விரும்பாமலோ அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் கையாலாகாத கூட்டத்தின் வெற்று வசனங்கள் என்பது என் கருத்து.

எந்த சூழ்நிலையிலும் என்னை தளரவிடாமல் தாங்குகிறவள். நான் சந்தோசமாக இருக்கும்போது இரட்டிப்பு சந்தோசம் அடைந்தவள். என் கவலையை எல்லாம் என்னை அண்டவிடாமல் கவலை கொள்ளச் செய்பவள். வாரத்தில் இரு முறை பேசினாலும் என் சுவாசமாய் வாழ்பவள்.

என் பெற்றோரின் பிரார்த்தனை என்னை எப்போதும் தொடர்கிறது என் மனைவியின் உருவமாய். வாழ்கையில் நிறைய பிரச்சனைகள் இருந்த போதும் சந்தோசம் அடைவது மிக எளிது என்பதை உணர்த்தியவள்.

யாரோ சொன்னதாய் ஞாபகம் "Spend Quality Time Alone Together, not quantity". இது எங்கள் வாழ்வில் தான் சாத்தியம். வருடம் ஒரு முறை விடுமுறையில் வரும்போது இதுவே எனது எண்ணமாகவும் செயலாகவும் இருக்கிறது.

நான் எனது சொந்த வீடு கட்டுவதற்காக யோசனையில் இருந்தபோது "முதலில் தொடங்குங்கள், உங்கள் மனதை கட்டிய வீட்டின் முன் இப்போதே வையுங்கள். மற்றவை தானாய் உங்களை தொடர்ந்து வரும்" என்று அன்றே சரியாய் கணித்தவள்.

மனிதனை படைத்தவுடன் இறைவன் நினைத்திருக்கலாம் "இதை விட சிறப்பாய் செய்ய என்னால் முடியும் என்று" அதனால் தான் பெண்ணை படைத்தான்.

18 comments:

நட்புடன் ஜமால் said...

\என் பெற்றோரின் பிரார்த்தனை என்னை எப்போதும் தொடர்கிறது என் மனைவியின் உருவமாய். வாழ்கையில் நிறைய பிரச்சனைகள் இருந்த போதும் சந்தோசம் அடைவது மிக எளிது என்பதை உணர்த்தியவள்.\\

மிகவும் இரசித்தேன் இதனை ...

S.A. நவாஸுதீன் said...

Thanks மாப்ள

S.A. நவாஸுதீன் said...

First comment to everybody, is always yours. Great Jamal

அப்துல்மாலிக் said...

//எனக்கோ அவள் குழந்தையாய் தெரிகிறாள். ஆனால் என்னை குழந்தையாய் தாங்குகிறாள்//

ஆரம்பமே அசத்தல் தொடக்கம்

அப்துல்மாலிக் said...

//என்னவளின் பெயர் எழுதும்போதே பேனாவை சற்று மெதுவாக எழுத சொன்னேன். அவள் பெயருக்கு கூட வலிக்கக் கூடாது என்பதால்.
//

எப்பா தாங்கமுடியலே மக்கா... வலிக்ககூடாதாம்

அப்துல்மாலிக் said...

//எந்த சூழ்நிலையிலும் என்னை தளரவிடாமல் தாங்குகிறவள். நான் சந்தோசமாக இருக்கும்போது இரட்டிப்பு சந்தோசம் அடைந்தவள். என் கவலையை எல்லாம் என்னை அண்டவிடாமல் கவலை கொள்ளச் செய்பவள்///

காதல் மனைவிக்கேயுள்ள குணாதிசயங்கள்
தன் சந்தோஷத்தை இழந்து தனக்குரியவனை சந்தோஷப்படுத்துபவள் அதன் மூலம் தான் சந்தோஷமடைபவள்

அப்துல்மாலிக் said...

//என் பெற்றோரின் பிரார்த்தனை என்னை எப்போதும் தொடர்கிறது என் மனைவியின் உருவமாய். வாழ்கையில் நிறைய பிரச்சனைகள் இருந்த போதும் சந்தோசம் அடைவது மிக எளிது என்பதை உணர்த்தியவள்//

ஆஹா ரசித்த வரிகள், உண்மையும் கூட‌

அப்துல்மாலிக் said...

//மனிதனை படைத்தவுடன் இறைவன் நினைத்திருக்கலாம் "இதை விட சிறப்பாய் செய்ய என்னால் முடியும் என்று" அதனால் தான் பெண்ணை படைத்தான்.//

இது கலக்கல் மச்சான்

நல்ல எழுத்தோட்டம்

கீப் இட் அப்

S.A. நவாஸுதீன் said...

பின்னூட்டம் கொடுத்து என்னை புன்னகைக்க வைத்த உங்கள் இருவருக்கும் நன்றி

cute baby said...

எனக்கோ அவள் குழந்தையாய் தெரிகிறாள். ஆனால் என்னை குழந்தையாய் தாங்குகிறாள்.
//
ஆஹா!அருமையாக இருக்கு நண்பரே நன்றாய் ரசித்தேன்

cute baby said...

என்னவளின் பெயர் எழுதும்போதே பேனாவை சற்று மெதுவாக எழுத சொன்னேன். அவள் பெயருக்கு கூட வலிக்கக் கூடாது என்பதால்.
//
ச்ச! எப்படித்தான் இப்படிலாம் பெண்களை ஐஸ் வைக்க ஐடியா வருமோ போங்க‌

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

என்னவளின் பெயர் எழுதும்போதே பேனாவை சற்று மெதுவாக எழுத சொன்னேன். அவள் பெயருக்கு கூட வலிக்கக் கூடாது என்பதால்.
//
ச்ச! எப்படித்தான் இப்படிலாம் பெண்களை ஐஸ் வைக்க ஐடியா வருமோ போங்க‌

ரொம்ப thanks for your comments Cute Baby. ஆமா Ice வைக்கிறதுன்னா என்னங்க.

ஹேமா said...

உங்கள் "காதலின் அவள்" நிறையக் கொடுத்து வைத்தவள்.

S.A. நவாஸுதீன் said...

ஹேமா said...

உங்கள் "காதலின் அவள்" நிறையக் கொடுத்து வைத்தவள்.

மிக்க நன்றி ஹேமா தங்கள் பின்னூட்டதிற்கு. சரியாகச் சொன்னால் நான்தான் கொடுத்துவைத்தவன்.

rose said...

மனிதனை படைத்தவுடன் இறைவன் நினைத்திருக்கலாம் "இதை விட சிறப்பாய் செய்ய என்னால் முடியும் என்று" அதனால் தான் பெண்ணை படைத்தான்.

//
உண்மையான வார்த்தைகள்

S.A. நவாஸுதீன் said...

rose said...

மனிதனை படைத்தவுடன் இறைவன் நினைத்திருக்கலாம் "இதை விட சிறப்பாய் செய்ய என்னால் முடியும் என்று" அதனால் தான் பெண்ணை படைத்தான்.

//
உண்மையான வார்த்தைகள்

நன்றி ரோஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
cute baby said...

என்னவளின் பெயர் எழுதும்போதே பேனாவை சற்று மெதுவாக எழுத சொன்னேன். அவள் பெயருக்கு கூட வலிக்கக் கூடாது என்பதால்.
//
ச்ச! எப்படித்தான் இப்படிலாம் பெண்களை ஐஸ் வைக்க ஐடியா வருமோ போங்க‌

ரொம்ப thanks for your comments Cute Baby. ஆமா Ice வைக்கிறதுன்னா என்னங்க.
//
இதோ!கேட்டுங்கோப்பா ஐஸ்னா என்னானு தெரியமலே ஒரு பெரிய ஐஸ்பாரே தலைல வைச்சு இருக்காரு மனைவிக்கு

Om Santhosh said...

உங்களுக்கு வரப்போகும் மனைவியாக போகிற காதலி மிகவும் கொடுத்து வைத்தவள்