Lilypie

Sunday, March 22, 2009

முதல் கடிதம்



முதல் கடிதம்

வெள்ளை காகிதம், பல வண்ணங்களில் அடிக்கோடிட்டு காட்ட மூவிரண்டு பேனாக்கள், மனதில் ஆயிரம் எண்ணங்கள், வரிசையாய் கோர்த்து வைத்த வார்த்தைகள், பல சமயங்களில் படித்த மேதாவித்தனம் நிறைந்த பல வாசகங்கள், எல்லாம் தயார்.

ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?, எத்தனை வார்த்தைகள் கிடைத்தாலும் அவை போதாது போல் தோன்றியது. என்னுயிர் ............, என்றபோது தொண்டைக்குள் உயிர் உருண்டு ஓடுகிறது. தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது.

மீண்டும் யோசிக்கிறேன். நான் செய்வது முறையா? தவறு என்று பல குரல்கள், பல பக்கம் இருந்து வந்தாலும், ஒரு குரல் உள்ளே இருந்து வருகிறது, வந்தது உன் தவறில்லை, காதலின் தவறு என்று.

அதனால் தவறு என்னுடையது இல்லை,
உன்னை காணும்போது என் செயல்களும்,
பேசும்போது தடுமாற்றமும்,
என்னை ஊடகமாய் பயன்படுத்தி
என் இதயம் உனக்கு புரியவைக்க,
மூளையிடம் பெற்ற பரஸ்பர உதவிகள்.
இதில் என் தவறில்லை.

இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.



இறுதியில், எழுதிய அனைத்தும் எனக்குள் கலக்கத்தை தந்தாலும் இது நிதர்சனமான உண்மை என்று புரிந்ததால் பத்திரமாக மடித்து பாங்கோடு அதை, தேடி அலைந்து வாங்கிய அழகிய வண்ணக்கவரில் இட்டேன்.

விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்

Monday, March 16, 2009

"உங்கள் பொன்னான வாக்குகளை"



தேர்தல் வந்தாச்சு.

இனி எங்கும் ஒலிக்கும் "உங்கள் பொன்னான வாக்குகளை ....." . சுவரொட்டிகள், பேனர்கள், மேடைப் பேச்சுக்கள் கொடிகள், தோரணங்கள், ஐயோ அம்மா தாங்கமுடியாது. இவர்கள் விடும் வாய்ச் சவடால்களும், விசித்திரமான வாக்குறுதிகளும், விளங்காத, மக்களை வந்தடையாத சாதனைகளும், எதிர்கட்சிகளின் கள்ளத்தனங்களின் பட்டியலும், நிச்சயம் இந்திய மக்களுக்கு ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும். திண்ணை பேச்சும் டீக்கடை பெஞ்சும் அரசியல் பக்கோடாவுடன் தான் நடக்கும்.



நண்பர்கள் எதிரி ஆவார்கள். எதிரியும், எதிரிக்கு எதிரியும் நண்பர்கள் ஆவார்கள். விசேஷம் என்னவென்றால் நாம் போடும் ஓட்டால் நம்மையே மாடாக்கி வண்டி பூட்டி ஓட்டுவார்கள்.





இனி விஷயத்துக்கு வருவோம்

தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களை நமக்கு பிடிக்காத பட்சத்தில் ஓட்டு போடாமல் இருப்பதை விட நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நாம் போடாமல் விட்டால், நமது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட நாம் அனுமதிப்பதாக எனக்கு தோன்றுகிறது.

நண்பர்கள் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். உங்கள் கருத்துகளையும் ஆவலோடு எதிர்பார்கிறேன்

Wednesday, March 11, 2009

என்று நிற்கும் இந்த இன ஒழிப்பு


இந்தியாவும் பிற நாடுகளும் கேட்கின்றன. ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டும் என்று.

இரக்கமற்ற போர்படைத் தளபதிகளும், பீரங்கி வண்டிகளும்
கொத்து கொத்தாய் குண்டு மழைகளும்
வரிசையாய் அமைதியாய் நிற்க
ஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு கூற காத்திருக்கிறதா
இலங்கை அரசு யாருமில்லாத சுடுகாட்டில்

Tuesday, March 10, 2009

Mail from a Friend

Hi friends...

If anyone of ur friends or relatives have met with fire accident or people born with problems like joint ear,nose and mouth can have a free plastic surgery done by kodaikanal pasam hospital..from march 23rd to 4 th april by german doctors..... .
every things is free..contact no 045420240668, 240668,245732. ..plz inform the needy ........


No harm in forwarding.. .some person will benefit..... .......

Monday, March 9, 2009

இது தான் Gulf

இது தான் Gulf

லோக்கல் Calls Free

பெட்ரோல் தண்ணீரைக் காட்டிலும் விலை குறைவு

கட்டிடங்கள் குறைந்தபட்சம் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்

திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்

கீழ்நிலைத் தொழிலாளர்களின் சம்பளம் சொந்த நாட்டில் கிடைப்பதைவிட குறைவு

கம்பெனி எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கலாம் எந்த காரணமும் இல்லாமல்

Office Boys & Drivers மற்றவர்களை விட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்

பாலைவனம் என்றாலும் எங்கும் பச்சை நிறம் பார்க்கலாம்

ஒவ்வொரு bachelor-ஸும் கல்யாணம் மற்றும் வீடு கட்டும் கனவோடு இருப்பார்கள்

நேரில் இருப்பதை விட தாய், தந்தை, மனைவி மக்கள் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்

வீட்டில் இருப்பது வேளையில் இருப்பதைவிட கொடுமையானது

ஒவ்வொரு 5 அடிக்கும் ஒரு பெண்களுக்கான அழகு நிலையம்

License வாங்குவது கார் வாங்குவடதி விட கடினம்

Traffic Signals
Green: இந்தியர்கள் செல்ல
Yellow: எதிப்தியர்களும், பாகிஸ்தானியர்களும், அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் செல்ல
Red: சௌதிகளும், குவைதிகளும், மற்ற அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் செல்ல

பெண்ணே நீ

இந்த மகத்தான மகளிர் தினத்தில் இவளை மனமார போற்றி வாழ்த்துவோம்



















Monday, March 2, 2009

என் காதல் நாயகி.

எனக்கோ அவள் குழந்தையாய் தெரிகிறாள். ஆனால் என்னை குழந்தையாய் தாங்குகிறாள்.



என் காதல் நாயகி.

என்னவளின் பெயர் எழுதும்போதே பேனாவை சற்று மெதுவாக எழுத சொன்னேன். அவள் பெயருக்கு கூட வலிக்கக் கூடாது என்பதால்.

என் வருங்கால சந்ததியினரின் ஆணிவேர் இவள்.

என்னை முழுமையாக புரிந்தவள். நானும் அவளை. பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாமல் ஆழ் கடலின் ஆழத்திற்கு ஒப்பிடுபவர்கள் அவளை புரிந்து கொள்ள விரும்பாமலோ அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் கையாலாகாத கூட்டத்தின் வெற்று வசனங்கள் என்பது என் கருத்து.

எந்த சூழ்நிலையிலும் என்னை தளரவிடாமல் தாங்குகிறவள். நான் சந்தோசமாக இருக்கும்போது இரட்டிப்பு சந்தோசம் அடைந்தவள். என் கவலையை எல்லாம் என்னை அண்டவிடாமல் கவலை கொள்ளச் செய்பவள். வாரத்தில் இரு முறை பேசினாலும் என் சுவாசமாய் வாழ்பவள்.

என் பெற்றோரின் பிரார்த்தனை என்னை எப்போதும் தொடர்கிறது என் மனைவியின் உருவமாய். வாழ்கையில் நிறைய பிரச்சனைகள் இருந்த போதும் சந்தோசம் அடைவது மிக எளிது என்பதை உணர்த்தியவள்.

யாரோ சொன்னதாய் ஞாபகம் "Spend Quality Time Alone Together, not quantity". இது எங்கள் வாழ்வில் தான் சாத்தியம். வருடம் ஒரு முறை விடுமுறையில் வரும்போது இதுவே எனது எண்ணமாகவும் செயலாகவும் இருக்கிறது.

நான் எனது சொந்த வீடு கட்டுவதற்காக யோசனையில் இருந்தபோது "முதலில் தொடங்குங்கள், உங்கள் மனதை கட்டிய வீட்டின் முன் இப்போதே வையுங்கள். மற்றவை தானாய் உங்களை தொடர்ந்து வரும்" என்று அன்றே சரியாய் கணித்தவள்.

மனிதனை படைத்தவுடன் இறைவன் நினைத்திருக்கலாம் "இதை விட சிறப்பாய் செய்ய என்னால் முடியும் என்று" அதனால் தான் பெண்ணை படைத்தான்.

Sunday, March 1, 2009

சில விளக்கங்கள் சிந்திக்க வைக்கும்


ஒலிபெருக்கி
இதைக் கண்டுபிடித்தவன்
அரசியல்வாதிகளின்
ஆண்டவன்

தேர்வுநேரம்
பிள்ளையார்கோவில்
பூசாரிவீட்டில்
தினமும்
தேங்காய்ச்சட்னி!

திருமணம்
ஒவ்வொரு வீட்டிலும்
அந்தமான்

முட்டாள்
எல்லார் வீட்டிலும்
ஒரு கண்ணாடியாவது உண்டு

சினிமா
இந்தத் தண்டனை
இரண்டரை மணிநேரம் மட்டும் தான்

அரசியல்
கொடிமரத்தில் பறக்குது
கோமணம்

விலைவாசி

விறகையும் தீப்பெட்டியையுமாவது
விட்டு வையுங்கள்!
இனிதே இறக்கிறேன்