Lilypie

Monday, August 31, 2009

“இந்தியாவில் வறுமைக் கோடு” - பகுதி - 2

விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் அதிக இழப்பில்தான் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம். அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும்.

(அதிர்ச்சிகள் தொடரும்)


பகுதி - 1

******************************************
விவசாயிகள் மட்டுமல்ல, உத்திரவாதமான வேலையில்லாமல் நகரத்தில் அமைப்பு சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரமும் சரிகிறது (உதாரணம், அசோக் லேலாண்ட். இங்கு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் நிரந்தர ஊழியர்கள் பல மடங்கு குறைக்கப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் குறைந்த எண்ணிக்கையில். ஆக உற்பத்தி அதிகரித்துள்ளது ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது). இதே நேரத்தில் சிறு தொழில், சில்லறை வணிகம் போன்ற அதிக வேலை வாய்ப்பு தரும் (விவசாயத்தை அடுத்து) துறைகள் வீழ்ந்து வருகின்றன.

அதுமட்டுமா, உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மிக அதிகமாக உருவாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த அடிப்படை உரிமைகளும் கிடையாது. (கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ, கால் டாக்ஸி, நகர சுத்திகரிப்பு மற்ற பிற சேவை வழங்கும் துறைகளில்). இவர்களின் சம்பளம் ஐயோ பாவம் கேட்கவே வேண்டாம், எந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது.

இதே நேரத்தில் மிக குறைவான சதவீதமுள்ள ஒரு வர்க்கம் (தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்கள் போன்று) உருவாக்கும் மூலதன சுழற்சி விலைவாசியை ஊதிப் பெருக்குகிறது. இதனால் அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை சாதரண ஏழை மக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்கிறது. விலை உயர்வு, செயற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகள், மருத்துவம், கல்வி. இதெல்லாம்  மறுக்க முடியாத உண்மைகள்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் சரி. வறுமைக்கோடு என்றால் என்ன? அதன் அளவீடு என்ன?

Average earning of an Indian - US$ 440 per year or about (This is based on a GDP of US$ 440 billion and 1 billion people)

Approximately Rs. 1,760/per month/ **

அதிகபட்சம் 2,000/- ரூபாய் என்றே வைத்துக்கொள்வோம், இதை வைத்து என்ன செய்ய முடியும்?

The World Bank's definition of the poverty line, for under developed countries, like India, is US$ 1/day/person or US $365 per year. As per this definition, more than 75% of all Indians are, probably, below the poverty line!

இதன்படி நகரங்களில் ஒரு மாதத்துக்கு 1,440/- ரூபாய், அதாவது ஒரு நாளைக்கு 48 ரூபாய் சம்பாதித்தால் போதும் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளதாக அர்த்தம். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் கூட இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள்தான். இதே விசயம் கிராமப் புறங்களில் 1,500/- ரூபாய்.

வறுமைக் கோடு என்பதற்கு அரசு என்ன சொல்கிறது?

இங்கே படியுங்கள்

"The official estimates of the poverty line are based on a norm of 2400 calories per capita per day for rural areas and 2100 per capita per day for urban areas." This goes back to the 1970s; at that time, we decided to measure poverty levels by considering a minimum nutritional level. More accurately, the measure was the amount of money required to buy food equivalent to this nutritional level. If you earned more than this amount, you were above the poverty line"

பெரிய மனுஷங்க என்ன சொல்ராங்கன்னா, 2400 கலோரி சத்துள்ள உணவு வாங்கும் அளவு ஒருவர் சம்பாதித்தால் போதும் அவர் வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர். இந்தியாவில் வறுமை மிக வித்தியாசமான முறையில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஒருவரது தனி நபர் வருமானம் 2400 கலோரி மதிப்புள்ள உணவை வாங்கும் அளவு இருந்தால் அவர் ஏழையல்ல. ஒருவர் என்ன சம்பாதிக்கிறார் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறதே ஒழிய, அவரால் உணவை வாங்க முடிகிறதா என்பது கவனம் பெறவில்லை. அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது.


இந்திய அரசியல் சாசனம் நீதியை வலியுறுத்தும் கருத்துகளை அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது. அந்தப் பார்வையில் அரசுதான் மக்களுக்கு வீடு, சுகாதாரம், கல்வி,... உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இந்த கடமையை அரசு நிறைவேற்றுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் நினைத்துக் கொள்ளப்படுகிறது.


இதெல்லாம் கிடைத்து விடுகிறது என்ற ஊகத்தால், உணவுப் பொருள் வாங்க மட்டுமே ஒருவர் சம்பாதிக்கிறார் என்றும், உணவுப் பொருள் வாங்கத் தேவையான பணத்தை ஒருவர் சம்பாதிக்கவில்லை என்றால் ஏழை என்றும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன, ஒருவரது சம்பளத்தில் பெரும் பகுதி அரசு வழங்க வேண்டிய விஷயங்களுக்காக செலவிடப்பட்டு விடுகிறது. அரசு கடமையை நிறைவேற்றாத நிலையிலும், ஏழ்மை தொடர்பான பழைய வரையறை இன்னமும் ஏன் பின்பற்றப்படுகிறது?

ஏழ்மையை அகற்ற செயல்படுத்தப்படும் அரசு செயல் திட்டங்கள் மனம் போன போக்கில் உள்ளன. உதாரணம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று ஒழுங்கற்ற முறையில் ஏழைகள் பிரிக்கப்படுகின்றனர். நல உதவிகள் வழங்குவதும் மனம் போன போக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டு வேலை செய்யும் பெண் கூட இதைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பார். அவரது குடும்பம் கூட வறுமையான குடும்பம், ஆனால் அரசு புள்ளி விவரப்படி அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரமாட்டார். ஆக, இது போதுமே அரசின் போலியான வரையறையை வெளிச்சம் போட்டுக் காட்ட. அரசு அந்த பாத்திரம் கழுவும், தனது பிள்ளைகளை படிக்க வைக்க வழியின்றி வேலைக்கு அனுப்பும், அந்தப் பெண்ணைக் கூட வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் நிலைதான் உருவாகிறது.

ஆண்டு தோறும் ஏற்படும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய தேவைகளான இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவற்றின் விலை உயர்வு தட்டுப்பாடு, இவற்றை அடிப்படையாகக் கொண்டு வறுமைக் கோடு தீர்மாணிக்கப்படவில்லை. பிறகு எப்படி இந்த தகவல் சரியானதாக இருக்கும்.

ஏழைகளின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் எந்த அரசும் எந்தக் காலத்திலும் அனுமதி கேட்டதில்லை. கிராமப்புற ஏழைகளின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த பரிசோதனையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதே நேரம், முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் பாதி கடனை வாங்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏழைகள் அல்ல. அப்படியானால் ஏழைகள் யார். 40% நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். 45% சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்கள்தான் உணவு தானியங்களை வாங்குகிறார்கள். 7.5% பேர் கிராமப்புற கைவினை கலைஞர்கள். எஞ்சியவர்கள் எல்லாம் மற்றவர்கள்தான். 85% ஏழைகளுக்கு நேரடியாக நிலப் பிரச்சினை உள்ளது. அரசின் செயல்திட்டத்தில் இந்தப் பிரச்சினை எந்தக்காலத்திலும் இடம்பிடிக்கவில்லை. கிராமப்புற கைவினை கலைஞர்கள்கூட நிலமின்றியே இருக்கின்றனர்.

வளர்ந்த வல்லரசு நாடுகளில் வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்பதற்கு யோசித்து வருகிறார்கள். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே (அடுத்தவர்) தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நம்மவர்களின் கணிப்பு.

இதில் விஷேசம் என்னவென்றால் 1977 லிருந்து 1987 வரையான வருடங்களில் தான் வறுமை மிக கடுமையாக குறைந்துள்ளது (அந்த போலி வரையறைப்படி). உறுதியாக இந்த வருடங்களில் உலகமய, தாராளமய கொள்கைகள் இந்தியாவுக்குள் வரவில்லை. இதில் ப்ளானிங் கமிசன் 19% வறுமைக் கோடுக்கு கீழே என்கிறது, தேசிய கணக்கீட்டு நிறுவனம் (NSS) 36% என்கிறது. ஆக , இவர்களின் விளக்கமும், புள்ளிவிவரமும் உரிக்க உரிக்க வெங்காயம் கதைதான்.

அட போங்கப்பா!




Saturday, August 29, 2009

“இந்தியாவில் வறுமைக் கோடு”

வள்ளல்பிரான் கூறினார்.

நான் தேசப் படத்திலே தேடிப் பார்த்தேன்
தீர்க்க ரேகைக் கோடு இருந்தது அட்ச ரேகைக் கோடு இருந்தது

பிடி சங்கிலி போட்ட பெண்பிள்ளை அரசு இலவச டீவி தூக்கி ஆட்டோ ஏறும் போதும், தீப்பெட்டி அளவுக்கு மோதிரம் போட்ட ஆள் அரசு டீவியை பைக்கிலே கட்டும் போதும் கொழுத்த பணக்காரன் விவசாயக் கடன் தள்ளுபடி பெறும் போதும் . . .

அண்ணாந்து பார்த்தேன்
அவர்கள் தலைக்கு மேலே தெரிந்தது
தேடிய கோடு அரசு அடிக்கடி சொல்லுமே அந்த வறுமைக் கோடு!

நிசமாலுமே எங்கே இருக்கிறது அது எனப் பார்த்தால் வாடிய ஏழையின் வயிற்று மடிப்பிலே வருத்தமே வடிவான அவன் முக வரிகளிலே இருந்தது !

தலை நகரின் பிளாட்பாரத்தில்
பொத்தல் போர்வைக்குள் ஆயிரம் சோதி இலவசதரிசனம் கண்டும் அந்த ஏழைகள் வீடு பேற்றைக் அறியாதவர்கள்

***************************************

தீக்குள் விரலை வைத்தால் என்னாகும் என்று பாரதியையே ஒரு வழி செய்துவிட்டு, என்னையும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச்சொல்லி தோழி தமிழரசி கொடுத்த அன்புக்கட்டளையின் வினையால் வந்த வினை. அவர் எனக்கு கொடுத்த தலைப்பு “இந்தியாவின் நேற்றைய இன்றைய நாளைய வறுமைக்கோட்டின் நிலை”

இதில் ஒரு சிறிய மாற்றத்துடன் “இந்தியாவில் வறுமைக் கோடு” என்ற பொதுவான தலைப்பில் எழுதுகின்றேன். நான் இந்த தலைப்பில் பெரும்பாலும் விவசாயிகளைப் பற்றியே சொல்லப் போகிறேன்.

அதற்கு முன்பாக சில புள்ளி விவரம்.

ஜூலை மாதம் – 36 பேர்
கடந்த 5 வருடத்தில் – 6000 பேர்
கடந்த 20 வருடத்தில் – 186,000 பேர்.

இதெல்லாம் பசுமைப் புரட்சிக்குப் பிறகு வருமானம் குரைவால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை..

நமது இந்திய தேசத்தில் தொழில் துறை எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதனால் அரசு அறிக்கையின்படி வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்போது எப்படி அவர்கள் வருமானம் குறைகிறது என்று சொல்ல முடியும்?

விவசாயிகள் வருமானம் குறையவில்லை, அதிகரித்தது. அதே சமயம் மற்ற துறையினரின் வருமானம் விவசாயிகளை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. கணினித் தொழிலாளி விவசாயியை விட அதிகம் தான் சம்பாதிப்பான். அதனால் விவசாயி ஏழையாவதில்லை. விவசாயிக்கும் வருமானம் அதிகரிக்கும், ஆனால் கணினித் தொழிலாளியை விட குறைவாக அதிகரிக்கும்.

இந்த இடத்தில் தான் அரசின் புள்ளி விவரம் முரண்படுவதையும், அதிலிருந்து பெறும் உண்மைகளையும் நாம் கவனிக்க முடியும். விவசாய இடுபொருள் வளர்ச்சி 100% அல்லது 200% மடங்கு உயர்ந்துள்ளது என்பது அரசாங்க புள்ளிவிவரம், வேறு சில NGO க்களின் புள்ளி விவரங்கள், இவற்றைத் தவிர்த்து நேரடியாக விவசாயிகள் பார்க்கும் விசயம் ஆகியன இதை உறுதிப்படுத்துகிறது.

அதே சமயம் விவசாய பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலை இரு மடங்கு குறைந்துள்ளது. ஆனால் விலைவாசி மிக அதிகமாகியுள்ளது. ஆக, இப்படி இந்தியாவின் 60% மேற்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது.

விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் அதிக இழப்பில்தான் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம். அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும்.

(அதிர்ச்சிகள் தொடரும்)

 

Tuesday, August 4, 2009

ஸ்பரிசம்


ஜடத்திலிருந்து தோன்றி
ஜடத்திற்கு உயிர் தரும்
கலையில் ஒளிரும் உயிரம்சம்
மனித மனத்தை
ஸ்பரிசிக்கும்

ஸ்பரிசத்தின் பயணம்
காலத்தில் கலைக்கு வித்திடும்போது
கலை கலையாய் இல்லையேல்
அதுவும் ஜடமாய்

உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு

உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.
அது என்னுள்
இன்னும் நிர்வாணமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய்

S. A. Navas